Friday, June 27, 2008

சிலை வடிப்போம் நம்ம சின்ன காந்திக்கு! - ஜாக்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


'நாம் வாழுகின்ற நாடு இந்திய நாடு, பல சமுதாயத்தோடு சேர்ந்து வாழுகின்ற நாடு, எதுவாக இருந்தாலும் இஸ்லாமிய கொள்கைக்கு மாற்று கருத்து இல்லாத, இஸ்லாமிய கொள்கைக்கு புறம்பாக உள்ள செயல்களில் ஈடுபடாமல், இஸ்லாமிய கொள்கையோடு உள்ள காரியங்களில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'.
இப்படி ஒரு அருமையான கருத்தை கோட்டாறு I.S.E.D பள்ளி மைதானத்தில் ஜாக் நடத்திய இஸ்லாமிய அறிவொளி மாநாட்டில் கடந்த 29-04-2007 அன்று கூறியவர் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர். அவருடைய பெயர் மலுக்கு முதலி என்பார்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் எதைச் செய்தாலும் அதில் மலுக்குவின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. அந்தளவிற்கு ஜாக்கோடு இரண்டற கலந்தவர் இவர்.





சகோ.கமாலுத்தீன் அவர்களுடைய தலைமையகமான கோட்டாறு சந்தித்தெரு ஜமிய்யாவில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை செய்யும் அளவிற்கு மார்க்கத்தில் அதிக பிடிப்பு(!?) மிக்கவர் இந்த மலுக்கு.


ஜாக்கை சேர்ந்தவர்கள் யாரும் அவர்கள் செய்த அடாவடித்தனத்தால் கம்பி எண்ண நேரிட்டால் அவர்களை பாதுகாத்து வெளியே கொண்டு வருவதில் இவர் திறமையானவர்.


ஜாக்கின் அடாவடித்தனத்தை யாரும் அம்பலப்படுத்தினாலோ அல்லது அவர்களின் அத்துமீறல்களை எதிர்த்தாலோ அவர்களை மிரட்டுபவர் இந்த மலுக்கு.

இப்படி பல்வேறு வகையில் ஜாக்கின் தீவிர ஆதரவாளராகவும், ஆலோசகராகவும் இருக்கக்கூடிய மலுக்கு, ஜாக் சேவை மையத்தில் உள்ளவர்தான் என்று சகோ.கமாலுத்தீன் அவர்களும் பல நேரங்களில் ஒப்புதல் அளித்துள்ளார்.



குர்ஆன், சுன்னாவை உயிர் மூச்சாக கருதுகிறோம் என்று சொல்லக்கூடிய ஜாக் அமைப்பை சேர்ந்த மலுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் நாகர்கோவிலில் நடந்த பச்சை ஷிர்க்கான காரியத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். மறைந்த ராஜீவ் காந்திக்கு சிலை வைப்பதற்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் சிலை வடிப்பதற்காக ஒருவரால் தொகை கொடுக்கப்படும் பொழுது தானும் புகைப்படத்திற்காக காட்சி அளிக்கிறார். அதுவே இப்பொழுது சாட்சியாகவும் மாறியிருக்கிறது.



இவர்தான் கடந்த 29-04-2007 அன்று ஜாக்கின் அறிவொளி மாநாட்டில் இஸ்லாமிய கொள்கைக்கு புறம்பாக உள்ள செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். இவரைத்தான் ஜாக்கினரும் அவர்கள் நடத்தும் பெரும்பாலான கூட்டங்களில் வாழ்த்துரை வழங்குவதற்காகவும், இன்னபிற விசயங்களுக்காகவும் மேடை ஏற்றுகின்றனர்.

இப்படி வெளிப்படையான ஷிர்க்கில் ஈடுபட்டவர் ஒரு முன்னாள் துணை காவல் கண்கானிப்பாளர் என்பதால் அவரை ஏந்தி தாங்கி நிற்கும் ஜாக்கினர் அடுத்தவர்களை பார்த்து பழிப்பதும், இழிப்பதும் தங்களுடைய இச்செயல்களை மறைப்பதற்கான முயற்சி என்பது இப்பொழுது ஆதாரங்களுடன் அம்பலமாகி விட்டது.

தவ்ஹீத் கொள்கையில் தடம்புரண்டு விட்ட ஜாக்கினர்களில் சிலரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினால் அவர்கள் அப்படி செய்தார்களே, இவர்கள் இப்படி செய்தார்களே என்று கூறி அவர்கள் செய்த இந்த தவறை நியாயப்படுத்தி திரிகிறார்கள். அல்லாஹ் வெறுத்து ஒதுக்கிய ஒரு செயலை ஏன் செய்தீர்கள்? என்று கேட்டால் அடுத்தவர்களின் தவறை சுட்டிக்காட்டி உங்களின் தவறை நியாயப்படுத்துவீர்களா? மறுமையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக ஜமாஅத் நடத்துகிறீர்களா? அல்லது நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று மற்றவர்களின் பாவத்தோடு போட்டி போட ஜமாஅத் நடத்துகிறீர்களா?

அமெரிக்கர்களால் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சிலை வைக்க நடந்த முயற்சியை உலக முஸ்லிம்கள் அனைவரும் எதிர்த்தனர். அப்பேர்பட்ட மார்க்கத்தில் இருந்து கொண்டு ராஜீவ் காந்திக்கு சிலை வைப்பதை சரி காணும் ஜாக்கினரே நீங்கள் சுய நினைவோடுதான் இருக்கின்றீர்களா? நாங்கள் அல்லாஹ்வை வணங்குகிறோம், அவனுடைய தூதரை வணங்குகிறோம் என்று வெறுமனே பேப்பரில் எழுதுவதாலும், மேடையில் முழங்குவதாலும் ஒரு முஸ்லிம் மறுமையில் வெற்றியடைய முடியாது.

தவ்ஹீத் கொள்கையிலிருந்து தடம்புரண்டு சென்று விட்ட ஜாக், சிலை வழிபாட்டையும் இணைவைத்தலையும் ஆதரிக்கக்கூடியதாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது. காரணம் ஜாக்கின் கட்டுப்பாட்டிலுள்ள ஃபிர்தௌஸியா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 'வந்தே மாதரம்' பாடுவது தவறல்ல என்றும் இதெல்லாம் ஒரு விஷயமா? மிக சாதாரண விஷயம் இது! என்று பேசப்பட்டது.

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் இதை தவிர மற்ற எதையும் தான் நாடியவருக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவன் நிச்சயமாக மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறான்' (திருக்குர்ஆன் 4 : 48)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான், இது அல்லாத பாவத்தை தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவன் நிச்சயம் வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான் (திருக்குர்ஆன் 4 : 116)

என்று அல்லாஹ் இணைவைத்தல் மிகப்பெரிய பாவமென்று குர்ஆனில் குறிப்பிடுகிறான். ஆனால் இவர்களுக்கு இது சிறிய விஷயமாம்!

காளியை வணங்குகிறோம், துர்க்கையை வணங்குகிறோம், தாய் மண்ணை வணங்குகிறோம் என்று பாடுவது ஜாக்கிற்கு சாதாரண விஷயமாம்!

இவற்றை சுட்டிக்காட்டியபோது அதை மறுக்கவும் முடியாமல் மன்னிப்பு கேட்கவும் மனமில்லாமல் ஜாக் விழி பிதுங்கியது.

அதுபோலவே, கலைஞர் கருணாநிதி கண்ணகிக்கு சிலை வைத்ததை பெருமை பொங்க தன்னுடைய அல்ஜன்னத் இதழிலே வெளியிட்டு கலைஞரின் புகழ் பாடியவர்தான் இந்த ஜாக் தலைவர் கமாலுதீன் மதனி.


இப்பொழுது ஜாக் பேச்சாளர் சிலை வைக்கும் விழாவில் நேரடியாக கலந்து கொள்கிறார் என்றால் இவர்கள் பின்பற்றுவது குர்ஆன் ஹதீஸா? அல்லது இதுவும் குர்ஆன் ஹதீஸின் நடைமுறைதான் என்று சொல்ல வருகிறார்களா?

சகோ. கமாலுத்தீன் அவர்களின் அல்ஜன்னத் ஜூலை 2006 இதழில் வெளியிட்ட ஒரு அறிவுரையை இப்பொழுது அவருக்கே இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இதுபோன்ற காரியங்களை குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் கடுமையாக கண்டித்துள்ளார்கள். இச்செயல்களை செய்பவனும், அவற்றுக்கு துணை போகக்கூடியவனும் அவற்றை ஆதரிப்பவனும் அவற்றை வெறுத்து ஒதுங்காதவனும் உண்மையான ஏகத்துவ கொள்கைவாதியாக இருக்க முடியாது. (அல்ஜன்னத் ஜூலை 2006)

அல்லாஹ்வுடைய சாபத்திற்கு காரணமான சமாதி வழிபாட்டிலிருந்து இஸ்லாமிய சமுதாய மக்களே விடுபடுங்கள், ஏகத்துவ கொள்கையுடையோரே! கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள். எக்காரணத்தை கொண்டும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற காரியங்களுக்கு துணை போகாதீர்கள். (அல்ஜன்னத் ஜூலை 2006)

ஆகவே அவர்களுக்கு கூடுதலாக கீழ்கண்ட இறைவசனத்தையும் எச்சரிக்கையாக நினைவூட்டுகிறோம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான் (திருக்குர்ஆன் 4:140)

2 comments:

அபூ அப்திர்ரஹ்மான் said...

தமுமுக விஷயத்தில் அவசரப்பட்டது போல் இங்கும் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள். பல தனிநபர்களைக் கொண்டதே ஓர் இயக்கம். ஒரு தனிநபரின் தவறுக்காக ஓர் இயக்கத்தின் மீது சேறுவாரித் தூற்றாதீர்கள். இது குறித்து வெளியிடுவதற்கு முன் நீங்கள் ஜாக் கை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். அவர்கள் மலுக்கு முதலியிடம் இது குறித்து உபதேசித்திருப்பர். பெங்களுர் கமாலுத்தீன் என்பவர் எழுதியதை கமாலுத்தீன் மதனி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். பெங்களுர் கமாலுத்தீன் வேறு கமாலுத்தீன் மதனி வேறு. எதுவாயினும் அக்கட்டுரையைப் பிரசுரிக்கும் முன் ஜாக் அதனைப் பரிசீலித்திருக்க வேண்டும். நீங்கள் நல்லுபதேசம் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் எதையும் எழுதுங்கள். மாறாக விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதாதீர்கள். உங்களது விமர்சனங்கள் கடுமையாக உள்ளன.

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அஸ்ஸலாமு அலைக்கும், குமரி முஸ்லிம்க்கு சமுதாயத்தின் மேல் நல்லெண்ணமும் அக்கறையும் இருந்தால் நல்ல விசயங்களை சொல்லுவார். அதாவது தஃவா செய்வார். ஆனால் அவருக்கு சுய விளம்பரமும், பிரபலமும் அண்ணனது உத்திரவிற்கு இணங்கி குழப்பத்தை ஏற்படுத்தவுமே இப்பதிவை மிகுந்த சிரமேற்கொண்டு நடத்தி வருகிறார். அதனால் முடிந்தவரை ததஜவை சமுதாயம் புறக்கணித்து போல் இந்த வலைப்பதிவையும் நாம் புறக்கணிக்க வேண்டும் என மேலான சமூகத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். - வஸ்ஸலாம்