Thursday, June 19, 2008

வாருங்கள்! வழிகெடுவோம்!! அழைக்கிறது த.மு.மு.க

ஏக இறைவனின் திருப்பெயரால்..
தமுமுக தவ்ஹீதுக்கும் சமுதாயத்திற்கும் எதிராக செயல்படுவதில் தான் எப்போதும் முதல் தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சமுதாயத்திற்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் எதையேனும் செய்து கொண்டு இருப்பதனை தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்திருக்கிறது.

கருணாநிதியின் அரசு எந்த ஒரு துரோகத்தை செய்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் திராணியை த.மு.மு.க இழந்திருக்கிறது.

கருணாநிதியிடமிருந்து பெற்றதற்கு விசுவாசமாக இடஒதுக்கீடு விசயத்தில் ரோஸ்டர் முறை, பூஸ்டர் முறை என்று வெளிப்படையாக சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தது.

கப்ரு வணங்கிகளின் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கி த.மு.மு.க தனது தொண்டர்களை அனுப்பி மகிழ்ந்தது.

கன்னிபீவி தர்ஹாவுக்கு அழைப்பு கொடுத்து நாங்களும் உங்களை சேர்ந்தவர்கள்தான் என்று காட்டி கொண்டது.

அல்லாஹ் வெறுக்கக்கூடிய வட்டி அடிப்படையிலான தொழிலை உயர்த்திப்பிடிக்கும் பீஸ் மாநாட்டிற்கு தனது தொண்டரணியை அனுப்பி சந்தோசப்பட்டது.

அரசியல் கட்சி துவங்கும் ஆசையில் இந்து மக்களின் ஆதரவிற்காக ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்கள் என்ற பொய்யான செய்தியை சுயநலம் கருதி சொல்லி வருவது.

இப்படி சமுதாயத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராகவும் தன்னை நகர்த்திச் செல்லும் த.மு.மு.க-வினர், மீண்டும் தன்னை தவ்ஹீதிற்கு எதிரானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

முத்துப்பேட்டையில் த.மு.மு.க-வின் ஒன்றியச் செயலாளரான ஹூமாயுன் கபீர் என்பவர் கடந்த ஆண்டின் முத்துப்பேட்டை கந்தூரி விழாவிற்கு அழைப்பு விடுத்து டிஜிட்டல் போர்டு வைத்துள்ளார். இது அறிந்த தவ்ஹீத் சகோதரர்கள் அவரிடம் இப்படி செய்வது தவறு என்பதை உணர்த்தியுள்ளனர். அதற்கவர் இது எனக்கு அறியாமல் நிகழ்ந்த தவறு, இனி இதுபோல் நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு அவர் பொய்யுரைத்துள்ளார் என்பது இந்த ஆண்டின் கந்தூரி விழாவிற்கு அவர் வழக்கம் போலவே வார்டு மெம்பரான அவரின் மனைவி போட்டோவை போட்டு அழைப்பு கொடுத்துள்ளார். இதையும் பலமுறை அவருக்கு எடுத்துச் சொல்லியும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

கப்ரு வணங்கிகளின் கூட்டத்திற்கு தொண்டர்களை அனுப்பி விட்டு அது தெரியாமல் நிகழ்ந்து விட்டது, இனி நடக்காது என்று சொன்ன த.மு.மு.க இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது?

அதுபோல் கன்னிபீவி தர்ஹாவிற்கு அழைப்பு விடுத்து த.மு.மு.க-வால் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஆதாரங்களுடன் விமர்சித்த போது அதுவும் தவறாக நடந்து விட்டது, இனிவரும் காலங்களில் தர்பியா செய்து திருத்திவிடுவோம் என்று சொல்லி, இருக்கின்ற சில தவ்ஹீத்வாதிகளை தக்க வைத்துக்கொண்ட தமுமுகவின் தற்போதைய பதில் என்ன?

இப்பொழுது முத்துப்பேட்டையில் நடந்திருக்கும் நிகழ்வு கடந்த ஆண்டே சுட்டிக்காட்டப்பட்டும் அது திருத்திக்கொள்ளப்படாமல் மீண்டும் செய்யப்பட்டிருப்பதன் மூலம் த.மு.மு.க தனது தவ்ஹீதிற்கு எதிரான யுத்தத்தை முடுக்கிவிட்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.

த.மு.மு.க ஏகத்துவ சிந்தனை கொண்ட ஒரு அமைப்புத்தான் என்று எண்ணி இதற்கு மேலும் அதனுள் இருக்கும் அன்புக்குறித்தான சகோதரர்களே! சிந்தியுங்கள! உங்களுடைய செயல்களை நீங்களே பாழாக்கி கொள்ளாதீர்கள! த.மு.மு.க தலைமை இதை திட்டமிட்டே செய்கிறது என்பதை கடந்த நிகழ்வுகளின் வாயிலாக அறிவுடையோர் அறிந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வை அஞ்சும் விதத்தில் அஞ்சுங்கள்! அவனை மட்டுமே பொறுப்பாளனாக்கி கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெய பாவத்தையே கற்பனை செய்தார் (அல்குர்ஆன் 04:48)

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 05:02)

6 comments:

ABU NOORA said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நாம் அனைவரும் உணர்வின் மூலமாகத்தான் அறிந்தோம். நீங்கள் இணைத்திருப்பதும் உணர்விலுள்ளதுதான்.

தயவுசெய்து உணர்வு பத்திரிக்கையை சற்று அடையாளமிடுங்கள்.

Abdul Malik said...

உங்கள் மிது இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டுமாக... அன்பு சகோதரரே இந்த டிஜிட்டல் பேனர் தமுமுக வைச்சேரந்த ஹுமாயுன் கபிர் தனது செந்த செலவில் வைக்கவில்லை அது முத்துப்பேட்டை பேருராட்ச்சி முலம் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் நிங்கள் ஹூமாயுன் கபிர் தனது சொந்த செலவில் வைத்தது போல் நிங்கள் எழுதி உள்ளிர்கள். உங்களின் இந்த செய்தி முலம் நிங்கள் குறை கூறுவது யாரை ? யாரவது உங்களிடம் ஒரு செய்தியை சொன்னால் அதை நன்கு விசாரித்து விட்டு எழுதுங்கள். உன்மை என்னவே அதை மட்டும் எழுதுங்கள். முன்பு முத்துப்பேட்டை தமுமுக வை பற்றி தவறான செய்தியை போட்டு பிறகு அதை நிக்கி விட்டிர்கள். மிண்டும் அந்த டிஜிட்டல் போர்டில் என்ன உள்ளது என்று நன்றாக பாருங்கள்.
இந்த தவறுக்கு நாளை மறுமையில் நிங்கள் அல்லாவிடம் நிங்கள் பதில் கண்டிப்பாக பதில் செல்ல வேண்டும். நானும் ஒரு காலத்தில் இது போல் நிறய வ(வாந்தி)தந்திககளை நம்பிக்கொண்டு இருந்தவன்.

Kumari Muslim said...

சகோதரர் அப்துல் மாலிக் அவர்களுடைய சுட்டிக்காட்டலின்படி கீழ்கண்ட வாசகங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. சுட்டிக்காட்டிய சகோதரருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். -குமரி முஸ்லிம்.

'முத்துப்பேட்டையில் த.மு.மு.க-வின் ஒன்றியச் செயலாளரான ஹூமாயுன் கபீர் என்பவர்' என்று தொடங்கும் வாசகங்களையும்,

'ஆனால் கடந்த ஆண்டு அவர் பொய்யுரைத்துள்ளார்' என்று தொடங்கும் வாசகங்களையும் படிப்பவர்கள், த.மு.மு.க-வின் ஒன்றியச்செயலாளரே அவருடைய சொந்த செலவில் கந்தூரிக்கு வருபவர்களை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளார் என்று புரிந்து கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுவதை ஏற்று மேற்கண்ட வாசகங்கள் கீழ்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

முத்துப்பேட்டையில் த.மு.மு.க-வின் ஒன்றியச் செயலாளரான ஹூமாயுன் கபீர் என்பவருடைய மனைவி முத்துப்பேட்டை பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு முத்துப்பேட்டையில் நடந்த கந்தூரி விழாவிற்கு முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக வரவேற்பு பேனர்கள் அல்லது போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து வார்டு மெம்பர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை போட்டு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் த.மு.மு.க-வின் ஒன்றியச் செயலாளரான ஹூமாயுன் கபீர் அவர்களுடைய மனைவி போட்டோவும் அதில் இடம் பெற்றுள்ளது. இதை அறிந்த சில சகோதரர்கள் அவருக்கு அதை சுட்டிக்காட்டிய போது இது எனக்கு அறியாமல் நிகழ்ந்த தவறு என்றும் இனி இதுபோல் நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லியுள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு அவர் பொய்யுரைத்துள்ளார் என்பது இந்த ஆண்டு நிரூபணமாகியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டின் கந்தூரி விழாவிற்காகவும், முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில் அல்லது போஸ்டர்களில் அவருடைய மனைவியுடைய போட்டோ மற்றும் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையும் பலமுறை அவருக்கு எடுத்துச் சொல்லியும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை. இதன்மூலம் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கந்தூரி விழாவிற்கு பேரூராட்சியால் விடுக்கப்பட்ட வரவேற்பிற்கு த.மு.மு.க-வின் ஒன்றியச்செயலாளரான ஹூமாயுன் கபீர் என்பவர் அறிந்தே உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் !

நிதானமாகவும் பொறுமையாகவும் பேசக்கூடியவர்கள் தமுமுகவிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை எண்ணி வியப்பாக இருக்கிறது. அப்துல் மலிக் போன்ற நல்லவர்களும் அதில் இருப்பதால்தான் அல்லாஹ் அதை விட்டுவைத்திருக்கிறான் போலும். தமுமுக எதை செய்தாலும் அதை ஆதரிக்கும் நிலையை மாற்றி அது தவறிழைக்கும்போது தொண்டர்கள் சுட்டிக்காட்டி, தலைமை அதை திருத்தி கொள்ளும்போது தமுமுகவை தவிர வேறொரு இயக்கம் தமிழகத்திற்கு தேவையே இருக்காது.

இந்த கந்தூரி போஸ்டர் விஷயத்தில் அதன் விபரீதம் சகோரரர் அப்துல் மலிக் அவர்களுக்கு புரியவில்லை. பேனரை பேரூராட்சிதான் வைத்துள்ளது. தமுமுக நிர்வாகி அவரது சொந்த செலவில் வைக்கவில்லை, எனவே தவறில்லை என்று கூறுகிறார். அந்த ஊரில் டாஸ்மாக் கடை திறப்பு விழாவிற்கு பேரூராட்சி சொந்த செலவில் போஸ்டர் அடித்து இவருடைய போட்டோவை போட்டால் அது தவறில்லையா? அதையும் இப்படி நியாயப்படுத்துவாரா? அப்துல் மலிக் போன்றவர்களெல்லாம் இதுபோன்ற தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்காமல் தலைவர்களை இடித்துரைக்கும் பொழுது அவர்கள் மேலும் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் தங்களையும் தங்கள் இயக்கத்தையும் காத்து கொள்வார்கள்.

அல்லாஹ் உங்களையும் என்னையும் தவறிழைக்கும் கூட்டத்திலிருந்து பாதுகாப்பானாக!

நாஞ்சிலார்.

Abdul Malik said...

உங்கள் மிது இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டுமாக... அன்பு சகோதரரே.. நான் ஹுமாயுன் கபிர் செய்தது சரி என்று சொல்லவில்லை.அது தவறு தான். இந்த வலைத்தளத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி தான் நான் எனது comment எழுதினேன் அதற்க்காக நான் தமுமுக சேர்ந்தவன் என்றும் இதை ஆதரிப்பவன் என்று நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்த வரயிம் யார் என்ன சென்னாலும் அது நமது குர் ஆனுக்கும், ஹதிஸுக்கு மாற்றமாக இருந்தால் அதை நான் ஏற்றூக்கொள்ள மாட்டேன். என் மனதில் பட்டதை நான் எழுதினேன் அதற்காக நான் ஷிர்க்கை ஆதரிக்கவில்லை. இந்த போஸ்டாரில் உள்ள செய்திக்கும் இந்த இனயதளத்தில் வந்த செய்திக்கும் தான் என் கருத்தை எழுதினேன்.

அல்லாஹ் உங்களையும் என்னையும் தவறிழைக்கும் கூட்டத்திலிருந்து பாதுகாப்பானாக!

எவர் அனுவளவு நன்மை செய்தாலும் அதனை அவர் கண்டுக்கொள்வார் எவர் அனுவளவு தீமை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார் - அல் குர் ஆன்.

SAMEER AHAMED said...

அல்லாஹ்வின் திருப்பெயரால்.............அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....

சகோதரர் மாலிக் கூறியதுபோல் தெளிவுகளை ஆராய்ந்து உண்மைகளை உணர வேண்டும்.

சகோதரர் நாஞ்சிலார் அவர் அடக்க முடியாத கோபத்தினை தன் எழுத்து வடிவத்தில் இங்கு வடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமுமுகவில் இருப்பவர்களிடம் நிதானமானவர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்வதுப்போல் கேள்வியை கேட்டுள்ளார். பதிலை பார்க்கவும்.........

தமுமுக ஆரம்பக்காளத்திலிருந்து பொறுமையோடும் அமைதிக்காத்துதான் மார்க்கத்தின் வழியில் பயணிக்கிறது. இவை மக்கள் அரிந்ததே! நீங்களும் இதன்மூலம் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் சிலர் அல்லாஹ்வையே மறந்து சவால் விடுத்தார்கள். 2 மாதங்களில் அருத்தெறிவேன் என்று, அவர்களை மிஸ்டர். நாஞ்சிலார் அடையாளம் காட்டுவீரா?

குறிப்பு: நிங்கள் இவர்களை அடையாளம் காட்ட விரும்பினால், இவர்களின் முகத்தை அல்ல, முகத்திரையினை கான்பிக்க வேண்டும், உங்களின் முயற்சிக்கு நான் இறைவனிடம் துஆ செய்தவனாக!
விடைபெருகிறேன்.

--- சமீர் ----