Tuesday, June 3, 2008

இம்தாதிக்கு சுட்டிக்காட்டல் - 2

ஏக இறைவனின் திருப்பெயரால்...

'ஹலால் ஹராம் பேணுவோம்'
- கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அன்புள்ள சகோதரர் கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுக்கு...

சவுதி அரேபியாவிலுள்ள அல் ஜூபைல் அழைப்பு மையத்தில் 'ஹலால் ஹராம் பேணுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றி இருந்தீர்கள். அது மிகவும் அருமையான தலைப்பு. அனைவரும் அறிந்து நடக்க வேண்டிய விஷயங்களை அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்.
ஆனால் ஒருவர் ஒரு விஷயத்தை கூறுவதாக இருந்தால் அதில் அவர் உண்மையாளராக இருக்க வேண்டும். இஸ்லாம் தடுத்த மதுக்கடையை நடத்தக் கூடிய ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றக்கூடியவராக இருக்க முடியாது. அதுபோலவே மதுக்கடை உரிமையாளர் ஒருவர், மற்றவர்களை பார்த்து மது குடிக்காதே என்று சொன்னால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். தங்களுடைய சொற்பொழிவை கேட்ட எங்களுக்கு அதுவும் வேடிக்கையாகத்தான் இருந்தது. ஏனென்றால்,எந்த விதமான உழைப்பும் இல்லாமல் சம்பாதிப்பது வட்டியாகும் என்று அந்த உரையிலே நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள் என்ற வசனம் தான் நினைவுக்கு வந்தது.
எம்.எல்.எம் (MLM மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்) என்ற சங்கிலி தொடர் ஹராம் என்பது அனைத்து அறிஞர்களாலும் அறிவிக்கப்பட்ட ஃபத்வா ஆகும். உழைப்பில்லாமல் பொருளீட்டக்கூடிய ஒரு செயலாகும். அதை சாதாரண ஒருவர் செய்யும்போது அறியாமையில் செய்கிறார் என்று விட்டுவிடலாம் அல்லது அவருக்கு அறிவுரை செய்யலாம். ஆனால் மெத்த படித்த மேதாவியான உங்களுக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இதை நீங்கள் மட்டும் செய்தால், அந்த பாவம் உங்களோடு போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் 'நான் நரகத்திற்கு செல்கிறேன் நீயும் துணைக்கு வா' என்று மற்றவர்களையும் அழைக்கிறீர்கள் என்றால் அதற்கு அசாத்திய துணிவு வேண்டும்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஸலாஹூதீன் என்பவரை எம்.எல்.எம்மில் சேரும்படி அழைப்பு விடுத்த கடிதத்திலிருந்து சில வரிகள்:

சகோதரரே! தற்போது அஜந்தா கேர் என ஒரு பெரிய நிறுவனம் இன்டர்நேஷனல் அளவில் ஒரு வியாபாரம் தொடங்கியுள்ளது.சிறிய முயற்சியில் பெரிய பலன்.பரவலாக பலர் பயன்பெறும் நல்ல திட்டமாக உள்ளது.அது சம்பந்தமாக கிளாஸ் நடந்து வருகிறது.அதில் பல ஹிந்து சகோதரர்கள் பலன் பெற்று வருகிறார்கள்.தற்போது எனக்கு தெரிந்த புளியங்குடியை சார்ந்த தவ்ஹீத் சகோதரர் அதை விளக்கி அவரும் அவர் போன்ற சில நமது சகோதரர்கள் பயனடைந்து வருவதை விளக்கி கூறினார்.அல்ஹம்துலில்லாஹ்! நல்ல முறையாக தெரிகிறது.அதாவது ஒரு நபர் இரு நபர்களை இணைக்க வேண்டும் அப்படியே சங்கிலி தொடராக செல்ல வேண்டும்.ஆரம்பமாக 750 ரூ வார லாபமாகத் தொடங்கி அதன் இறுதி கட்டமாக வாரம் 50 ஆயிரம் வரை தொடர்பு கொள்ளும் உறுப்பினர்களை பொறுத்து அதிகரிக்கும். சேரும் ஒவ்வொருவரும் ரூ3990, அஜந்தா கேர், சென்னை என DD எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். DD சேர்ந்த ஒரு வாரத்தில் ஆரம்பமாக 400ரூ அளவுக்கு அன்றாடம் நாம் பயன்படுத்தும் சோப்பு,ஆயில்,பேஸ்ட் பிரஸ் போன்ற பொருட்களும் அத்துடன் ஒரு புக் அனுப்புவார்கள்.அதில் எலக்ட்ராணிக்ஸ் ஐயிட்டங்கள் விலையோடு வரும் அதில் எந்த பொருள் எப்போது தேவையோ அப்போது அந்த கூப்பனை அனுப்பி வைத்தால் பொருள் வந்து சேர்ந்துவிடும். ஆக நாம் அனுப்பும் பணத்திற்கு முறையான பொருளும் நமது முயற்சி அளவிற்கு லாபமும் தொடர்ந்து கொண்டிருக்கும்.எனவே இந்த முயற்சியை எடுங்கள்.ஓய்வுநேரத்தில்,நமக்கு நல்ல பலன்.எனவே சேரும் நண்பர்களிடம் ரூ3990க்கு DD எடுத்து அனுப்பி வைத்தால் பலன் பெறலாம்.இலேசாக கருதாது முயலுங்கள் நாம் பலன் பெறுவோம்.
நண்பர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்
துஆ செய்யுங்கள்
இவண்
தங்களன்புள்ள
K.S.Rahumathullah
97 A,NORTH MAIN ROAD,
ERUVADI
Or
1 6/6 வணிகர் தெரு
ஏர்வாடி




இது எப்படி ஆட்களை சேர்க்க வேண்டும் என்று கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஸலாஹூதீன் அவர்களுக்கு எழுதிய வரைபடம்.



விஷயத்திற்கு வருவோம்.
வெளி உலகிற்கு உங்களை ஒரு மௌலவியாக காட்டிக்கொள்ளும் நீங்கள் செய்யும் இந்த செயல் ஹலால் தானா! சுட்டிக்காட்டிவிட்டோம்.

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் நிறை மற்றும் குறைகளை எடுத்து வைக்கும்போது சுட்டிக்காட்டப்பட்டவைகள் இருக்கும் அந்த மனிதர், அதை திருத்திக்கொள்வதும் அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கான விளக்கம் தருவதும் நற்பண்பாளர்களின் சிறந்த செயலாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுடைய பெயரில் எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மொத்த சாராம்சம் என்னவெனில் த.த.ஜ அமைப்பும், அதன் நிர்வாகிகளும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்பதும், த.த.ஜ-வில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இதை உணர வேண்டும் என்ற மிகச்சிறப்பான(?!) நல்ல(?!) நோக்கமாகவே கருதிக்கொள்வோம். அந்த அடிப்படையிலேயே அவர் கீழ்கண்டவாறு கூறியிருப்பதை காண்போம்..
ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்தி கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள்.

என்று எழுதியிருந்தீர்கள். இப்போது அதையே உங்களிடம் கூறுகிறோம்

இம்தாதி அவர்களே! இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். ஆகவே, மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும் உங்களுடையதுதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.எனவே உங்கள் தவறுகளுக்காக வருந்தி ஏக இறைவனிடம் மன்னிப்புக்கோரி துஆ செய்யுங்கள். அப்படியே மக்களுக்கும் அதை தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் நீங்கள் குறிப்பிட்டதுபோல் தவ்ஹீத்வாதிகள் அனைவரும் மீண்டும் ஒற்றுமையாக கை கோர்த்து செயல்பட ஏதுவாக இருக்கும்.
( இன்ஷா அல்லாஹ் சுட்டிக்காட்டல் தொடரும்...)
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும் பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களை தடுக்கின்றனர். அல்-குர்ஆன் 9:34

3 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எப்பொழுது நானும் உங்கள் தலைவர் பிஜே அவர்களும் இப்போதைய எங்கள் தலைவர் கமாலுதீன் மதனி அவர்களிடம் பைஅத் செய்து இணைந்தோமோ அதிலிருந்து இதுவரை கொள்கை தவறாமல் ஒரே அமைப்பில் அங்கம் வகித்து வருகிறேன் .

உங்கள் தலைவர் தான் இதுவரை எண்ணற்ற அமைப்புகளுக்கு தாவியும், கொள்கையில் முரண்பட்டும் இருக்கிறார் என்று திருவாய் மலரந்தருளிய ஜாக்கின் பிரதான பேச்சாளரும் வளைகுடா பிரச்சாரகராகிய இம்தாதி அவர்களே ! இதுபோன்ற கொள்கைக்காகத தான் இதுவரை ஜாக்கில் நீடித்தீர்களா ? இதைவிட மோசமாக நீங்கள் நடந்தாலும் உங்கள் தலைவர் எஸ்கே கண்டு கொள்ள மாட்டார் அவருக்கு அமைப்பும், உறுப்பினர்களும் மட்டுமே லட்சியம் . சங்கிலி தொடர் லாபத்தில் அவருக்கு ஒரு பங்கை அனுப்பி விடுங்கள்.

Anonymous said...

சொல்வது ஒன்று செய்வது ஒன்று இதுதான் ஜாக்கர்களின் வாடிக்கை. நீங்கள் வெளியிட்ட ஆதரத்துக்கு சம்மந்தப்பட்ட இம்தாதி பதில் சொல்ல வேண்டும். அவர் அல்லாஹ்விடம் தவ்பா செய்யட்டும்.

Mohammed Ansari.

Anonymous said...

ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் தாங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று செய்திருந்தால் அந்த தவறிலிருந்து அவர் வெளிவர வேண்டும். மீண்டும் அதுபோன்ற தவறை செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.