Sunday, June 15, 2008

வேதம் ஓத முயற்சிக்கும் பா.ஜ.க இல.கணேசன்!!

எந்த ஒரு மதத்தினரது உணர்வுகளையும் புண்படுத்துகின்ற வகையில் பேசுவதோ எழுதுவதோ சைகை காட்டுவதோ கூடாது என சட்டம் தெளிவாக சொல்லியிருக்கின்ற போதிலும் தொடர்ந்து இந்து மத உணர்வு பகிரங்கமாக பொது இடங்களில் புண்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் நாத்திக விழா என்ற பெயரில் தீமிதித்தல் போன்ற இந்து மத பழக்கங்களை விமர்சனம் செய்வதற்கு முனைந்துள்ளனர். நன்றி - மாலைமலர்

இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

தேச தந்தையாக கருதப்படுகின்ற மகாத்மா காந்தி அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போட்டு நாட்டில் மிகப்பெரிய கலவரத்தை தோற்றுவித்த சங்க்பரிவார கும்பலைச் சேர்ந்த சாணக்கியர்.

1980-களிலும், அதற்கு முந்திய மற்றும் பிந்திய சில காலங்களிலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் மேடைகளை போட்டு முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாக பேசிய காட்டுமிராண்டி கூட்டத்தில் இவரும் ஒருவர்.

கரசேவை என்ற பெயரில் அயோக்கியர்களை அழைத்துச் சென்று அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை இடித்த கட்சியின் தமிழக தலைவர்.

அதனையொட்டி திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கருவறுத்த கும்பலின் இரத்த உறவுக்காரர்.

குஜராத்தில் ஹிந்து கரசேவகர்கள் சென்ற ரயிலை இவர்களே கொழுத்தி அவர்களை கொன்றுவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு அதன் மூலமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் உயிர்களை கொன்றொழித்த மனிதாபிமானமற்றவர்களை கொண்ட கட்சிக்கு சொந்தக்காரர்.

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இவர்களே குண்டை வீசி விட்டு அந்த பழியையும் முஸ்லிம்கள் மீது போட்டு நடுநிலை சிந்தனை கொண்ட ஹிந்து மக்களிடம் அனுதாபம் தேட முயன்று தோற்றுப்போன கயவர்களின் நம்பிக்கைக்குறியவர்.

இன்றளவும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வினாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிறமதத்தினரின் நம்பிக்கைகளையும், அவர்களின் வழிபாட்டு முறையையும் கேலி செய்யும் மானங்கெட்டவர்களின் மாண்புமிகு இவர்.

இப்படி பிற மதத்தினரை கொன்றும், அவர்களது உணர்வுகளை புண்படுத்துகின்ற வகையில் பேசியும், எழுதியும், சைகை செய்தும் வருகின்ற ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி மற்றும் பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களின் தீவிர ஆதரவாளரான தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன் அவர்கள் இப்படி இந்திய சட்டம் குறித்து வேதம் ஓதுவது சரியா? இவரோடு இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் அவர்களும் சேர்ந்து ஒத்து ஊதுவது சரியா?

சாத்தான்கள் வேதம் ஓதுவதில் எந்த நியாயமும் இல்லை. இதுபோன்று, வேதம் ஓத முயற்சிப்பது சாத்தான் தான் என்பதை மக்களும் இப்பொழுது அறியாமலில்லை.
-அறிவழகன்.

No comments: