Friday, May 30, 2008

இட ஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?

காண தவறாதீர்கள் !
இன்று முதல்!

சமுதாய சண்டை கோழிகளின் அறிக்கைபோர் மீண்டும் துவக்கம்
முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டிலுள்ள நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்பட்டு 3.5% பிரதிநிதித்துவம் கிடைக்கும் ஆணை உடனடியாக அமுலுக்கு வருகிறது.
- பத்திரிகை செய்தி
இந்த செய்தியை தொடர்ந்து இட ஒதுக்கீடு கிடைக்க யார் காரணம் என்ற தலைப்பில் ஓர் விவாதம் (கற்பனை)

இட ஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?
ததஜவின் போராட்டங்களா?
தமுமுகவின் கடிதங்களா?
கலைஞரின் அரசியல் தந்திரமா?

நிகழ்ச்சி அமைப்பாளர்: பாஸ்கர்
கலந்துகொண்டவர்கள்
:தமுமுகசார்பாக ஹைதர் அலி,ஜவாஹிருல்லாஹ்
த.த.ஜ சார்பாக பி.ஜைனுல் ஆபிதீன்,எஸ்.எம்.பாக்கர்

பாஸ்கர் : கலைஞர் இடஒதுக்கீடு வழங்கியதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பி.ஜே : எல்லா புகழும் இறைவனுக்கே!
நான் நேற்று விண் டிவி லைவ் நிகழ்ச்சியில் பேசும்போது வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு லட்சம்பேரை திரட்டி சட்டசபையை முற்றுகையிடுவோம் என்று தமிழக அரசை வலியுறுதத்தி கூறினேன். விடிந்ததும் டிவியை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது.

ஜவாஹிருல்லாஹ்: ஏன் இருக்காது! விண் டிவியில் வருவது செட்டப் கேள்வி என்று ஏற்கனவே மக்கள் உரிமையில் எழுதியிருந்தோம். இது மீண்டும் அதை ஊர்ஜித படுத்தியுள்ளது. இன்று அறிவிக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவசரம் அவசரமாக அதை தெரிவித்து விட்டு நாங்கள்தான் இதற்கு காரணம் என்பதாக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்?

பாஸ்கர் : இது சண்டை போடும் இடமல்ல. உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

ஜவாஹிருல்லாஹ்: நாங்கள்தான் இதற்கு காரணம் என்று மக்களுக்கு தெரியும்.
வாழ்வுரிமை மாநாடு நடத்தியதும் தமுமுக.
தஞ்சை பேரணி நடத்தியதும் தமுமுக.

பாக்கர்: இவை இரண்டையுமே அன்றைய தமுமுக வில் இருந்த நாங்கள்தான் நடத்தினோம்.

பாஸ்கர்: விண் டிவி-ன் உங்கள் நிகழ்ச்சியில் குறிக்கிடுவதுபோல் குறிக்கிடாதீர்கள். உங்களுக்கு வாய்ப்பு வரும்போது நீங்கள் பேசலாம். இப்போது அவரை பேச விடுங்கள்.

ஜவாஹிருல்லாஹ்: டெல்லியில் வரலாறு காணாத பேரணி நடத்தினோம்.
2006-ல் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தி கோரிக்கை வைத்தோம்.அதனால் புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.
அக்டோபர் 2007-ல் புதுவையில் இரு சக்கர வாகன பேரணி நடத்தினோம்.
காரைக்கால் மாவட்ட தமுமுக தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார். இது போன்ற எத்தனை எத்தனையோ போராட்டங்களை செய்துதான் தமுமுக இந்த கோரிக்கையை வென்றெடுத்துள்ளது.

பி.ஜே: இவர்கள் இப்படித்தான் அமெரிக்க கப்பல் வந்தால் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்,ஆளும் கட்சியின் அராஜகத்திற்கு துணைபோவார்கள்.மத்திய அரசை எதிர்த்து பேரணி நடத்துவார்கள். மாநில அரசை மயிலிறகால் தடவுவார்கள். தமிழகத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உங்கள் பங்கு என்ன எனக்கேட்டால் புதுவையில் காக்கா பறந்தது. குருவி கொத்தியது என அங்கலாய்க்கிறார்கள். டெல்லி பேரணி நடத்தப்பட்டது அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு பெறுவதற்காகத் தானே தவிர தமிழக அளவில் இடஒதுக்கீடு கேட்டு நாம் டெல்லிக்குப் படை எடுக்கவில்லை.. என அவர்கள் எழுதியுள்ளது அவர்களுடைய இணைய தளத்தில் இன்றளவும் உள்ள செய்தியாகும். தமிழகத்தில் இடஒதுக்கீட்டிற்காக ஒரு துரும்பைக் கூட அவர்கள் எடுத்து போடவில்லை.

ஜவாஹிருல்லாஹ்: இவர் ஒரு மனநோயாளி என்பது சரிதான். நான் பேசுவதற்குள் அவசரப்படுகிறார்.இப்படி நாங்கள் நடத்திய இந்த வலிமை மிக்க போராட்டங்களினால்தான் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார். அதற்காக தமிழகமே கண்டிராத ஒரு மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை தமுமுக நடத்தியது. இவர்களுக்கு அந்த தகுதியில்லாததால்தான் 5 நாள் கழித்து முதல்வரை சென்று சந்தித்து நன்றி கூறியுள்ளார்கள்.

பாஸ்கர் : கொஞ்சம் பொறுங்கள்! ஒரு நேயர் லைனில் காத்திருக்கிறார்.இது பற்றி அவருடைய கருத்தையும் கேட்போம். ஹலோ! யார் பேசுறீங்க! எங்கேயிருந்து பேசுறீங்க!!

ஜாக் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி பேசுகிறேன்.நாங்களும் ஒரு அமைப்பை நடத்தி வருகிறோம்.எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நீங்கள் எங்களை அழைப்பதில்லை.எனவேதான் நானே உங்களை தொடர்பு கொளள்கிறேன்.

பாஸ்கர் : ஐயா! நீங்கள்தான் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களாயிற்றே!
த.த.ஜ இட ஒதுக்கீட்டிற்காக மாநாடு, பேரணிகளை நடத்திய போதெல்லாம் முஸ்லிம்கள் அதற்கு போகக்கூடாது என்று நீங்கள் உங்கள் பள்ளிவாசல்களிலெல்லாம் ஜூம்மாவில் பிரச்சாரம் செய்தவர்களாயிற்றே? எனவே தான் உங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு எதிராக நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்தும்போது உங்களை அழைக்கலாமென்றிருந்தோம்.

எஸ்.கே.: அதையேதான் நானும் சொல்கிறேன். முஸ்லிம்கள் இதிலெல்லாம் ஒன்று படக்கூடாது. போராட்டம் எல்லாம் கூடாது. உணவை தருகிறவன் அல்லாஹ். யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவனுக்கு தெரியும்? இங்கே இட ஒதுக்கீடு கிடைத்து என்ன பயன்? சொர்க்கத்தில் தான் இடஒதுக்கீடு வேண்டும்?

பாஸ்கர் : உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!
எஸ்.கமாலுதீன் மதனியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.அனைத்தையும் இறைவன்தான் தருகிறான் என்பது உண்மை. அதற்காக முயற்சி செய்யாமல் வீட்டிலே இருந்தால் இறைவன் தருவானா?

பி.ஜே: அந்த அமைப்பினர் அப்படித்தான் சொல்வார்கள். ஜனவரியில் ததஜ போராட்டம் நடத்தும்போது போராட்டம் கூடாது, ஆர்ப்பாட்டம் கூடாது என்று பேசினார்கள். அதற்கு அடுத்த மாதம் தமுமுக சிறைவாசிகளுக்காக சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய போது போராட்டம் கூடும், ஆர்ப்பாட்டம் கூடும் என்று ஜூம்மா மேடையிலேயே அழைப்பு விடுத்தார்கள். கொள்கையற்றவர்களின் கூடாரமது.

பாஸ்கர் : நிகழ்ச்சி வேறு பாதையில் செல்கிறது.உங்கள் கருத்துக்களை கூறுங்கள் திரு.ஹைதர் அலி அவர்களே!

ஹைதர் அலி: எனக்கு வாரியப்பதவியை தந்து கௌரவித்த மாண்புமிகு கலைஞர் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு வழங்கினார். ஆனால் அதிகாரிகள் செய்த குளறுபடியினால் அதை முழுமையாக பெற முடியவில்லை.எனவே அதிகாரிகள் செய்த குளறுபடிகள் சரிசெய்யப்படவேண்டும் என நானும் ஜவாஹிருல்லாஹ்வும் கலைஞரை சந்தித்து பேசினோம்.மேலும் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் இதுபற்றி நான் பேசினேன்.அது அரசு அறிக்கையிலும் வெளிவந்துள்ளது.எங்களுடைய வீரியமான இந்த போராட்டங்களால்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

பாக்கர் : உலகமே திரும்பி பார்க்கும் வகையில் கும்பகோணத்திலே மாபெரும் இடஒதுக்கீடு பேரணியை நடத்தினோம்.
அதன் காரணமாக இத்தனை காலமாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார்.அதற்காக அந்த தேர்தலிலே அவருக்கு ஆதரவளித்தோம்.ஒவ்வொரு ஊர்களிலும் இது பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினோம்.ஜூலை 4-ல் லட்சக்கணக்கானோர் குடும்பத்தோடு கலந்து கொண்ட மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினோம்.அதன் விளைவாக தமிழக அரசு இடஒதுக்கீட்டை அமுல்படுத்தியது.ஆனால் அது முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்த படவில்லை என்பதை உணர்ந்த நாங்கள், கலைஞர் அரசின் கயமைதனத்தை கடுமையாக விமர்சித்தோம். ஆனால் எதிரணியினரோ செந்சோற்று கடன் தீர்க்க அதை நியாயப்படுத்தினர்.
சென்னை பல்கலை கழக பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றாததால் ஆசிரியர்களை நியமித்தது செல்லாது என வழக்கு தொடர்ந்தோம். அதை நம் சகாக்கள் நக்கலடித்தனர்.ஆனாலும் நாங்கள் சளைக்காமல் போராடினோம்.சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த செயற்குழுவில் தீர்மானம் போட்டோம். குளிர்கால கூட்டத்தொடருக்குள் இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படாவிட்டால் குளிர்கால கூட்டத்தொடரில் மாபெரும் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்துவதாக மே 10,11 – ல் நடந்த தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் போடப்பட்டது.அதற்கான பணிகள் வீரியமாக நடந்துவரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்திருகிறதென்றால் யாரால் கிடைத்தது என்பதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை.இது பற்றி கூடுதல் விபரம் வேண்டுமென்றால் நான் உரையாற்றிய 'இடஒதுக்கீடு யாரால்?' என்ற சிடியை வாங்கி பாருங்கள். கிடைக்குமிடம் : மீடியா வேல்டு, 81,அங்கப்பநாயக்கன் தெரு,சென்னை – 600001, போண் : 9840194031

பாஸ்கர் : இடஒதுக்கீடு பற்றி இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அஹமதை தொடர்பு கொள்வோம். ஐயா! பஷீர் அஹமது இருக்கிறார்களா?

பஷீர் அஹமது: ஆமாம் நான்தான் பேசுகிறேன்.யார் நீங்கள்?
தொலைக்காட்சியிலிருந்து பாஸ்கர் பேசுகிறேன். இடஒதுக்கீடு வழங்கியது பற்றி தங்களுடைய கருத்து என்ன?

பஷீர் அஹமது: இடஒதுக்கீடா? என்ன இடஒதுக்கீடு! ரயில் ரிஸர்வேசனை சொல்கிறீர்களா?

பாஸ்கர் : இல்லை ஐயா! தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்திய விஷயம்பற்றி நீங்கள் ஏதேனும் கருத்து கூற விரும்புகிறீர்களா?

பஷீர் அஹமது: இல்லை இல்லை ஆமாம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஒருமாதகாலம் கண்டன பொதுகூட்டம் மற்றும் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

பாஸ்கர் : நன்றி ஐயா!
என்ன தலைவர்களோ தெரியவில்லை. எங்களுடைய அழைப்பை ஏற்று தகராறு செய்வதற்காக வந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.மேலும் இதுபோன்ற அடிதடி நிகழ்ச்சிகளில் நீங்கள் தொடர்ந்து பங்கெடுக்க வேண்டுமென்று உங்களை வேண்டுகின்றேன்.
கருணாநிதி ஒரு கொடுங்கோலன் - எஸ்.கமாலுதீன் மதனி

ஜாக் அன்று : ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை சித்திரவதை செய்து சிறையிலடைத்த கொடுங்கோலன் கருணாநிதி



ஜாக் இன்று : அந்த கொடுங்கோலனை ஆட்சியில் அமர்த்த திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாக ஜாக்கின் மாநில செயலாளர் கோவை அய்யூப் தேர்தல் பிரச்சாரம்.


ததஜவை கண்மூடி எதிர்க்க வேண்டுமென்பதே ஜாக்கின் லட்சியம். அதனால் கொடுங்கோலன் கூட ஜாக்கின் உயிர்நண்பனாக மாறிவிட்டான்.

Monday, May 26, 2008

யூதர்களும் நாங்களும் ஒன்று – தமுமுக

ஏக இறைவனின் திருப்பெயரால்...
யூதர்கள் சாபத்திற்குரியவர்கள் - திருக்குர்ஆன்
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் - நபிகள் நாயகம் (ஸல்)
யூதர்களும் நாங்களும் ஒன்று – தமுமுக

யூதர்களை பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடும்போது,

'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது' என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (5 ; 64)

அவர்கள் (யூதர்கள்) 'எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன' என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள். (2 ; 88)

யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;. (இன்னும் உம்மை நோக்கி, 'நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்;, இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!' என்று கூறி, 'ராயினா' என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்;. (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் 'நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;' (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்;, எங்களை அன்போடு கவனியுங்கள், (உள்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும் ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;. ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள். (4 ; 46)

இப்படி அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி அவனால் சபிக்கப்பட்ட யூதர்களை, நல்லவர்கள் என்றும் அவர்கள் முஸ்லிம்களின் தோழர்கள் என்றும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டென்றும் எவனோ வாந்தி எடுத்ததை மென்று விழுங்கி மீண்டும் வாந்தி எடுத்திருக்கிறது தமுமுக.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்' என்று கூறினார்கள். (புஹாரி 1330)

'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( புஹாரி 2224)

இப்படி நாயகம் நபி (ஸல்) அவர்களாலும் சபிக்கப்பட்ட யூதர்களோடு கைகோர்க்க துடித்துக்கொண்டிருக்கிறது தமுமுக தலைமை.

முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை பெருமிதத்தோடு வெளியிட்டுள்ள தமுமுக, யூதர்களும் முஸ்லிம்களும் ஒன்றல்ல என அல்லாஹ் சுட்டி காட்டிய ஏராளமான வசனங்களை இருட்டடிப்பு செய்ததேன்?;. இன்று தமுமுகவின் சுயரூபங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

• அன்று கப்ரு வணங்கி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு பாதுகாப்பு கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டது.
• கன்னி பீவி தர்ஹாவின் கந்தூரிக்கு அழைப்பு விடுத்து நாங்களும் உங்களை சார்ந்தவர்தான் என்பதை இனங்காட்டியது.

• தற்போது யூத,முஸ்லிம் ஒற்றுமையை பட்டியலிட்டு, யூதர்களின் கைக்கூலிதான் நாங்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.


நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர் (5: 82) என்ற அல்லாஹ்வின் வசனத்தை இவர்கள் மறந்ததேன் ?

யூதர்களும் முஸ்லிம்களும் ஒன்றா?

முஸ்லிம்கள் இணைகற்பிக்கமாட்டார்கள்

''யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்'' என்று கூறுகின்றனர். ''அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்று வோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை'' எனக் கூறுவீராக! ( 2: 135)

முஸ்லிம்கள் வட்டிவாங்க மாட்டார்கள

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (4 : 160, 161, 162)

முஸ்லிம்கள் நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளை என்று சொல்லமாட்டார்கள்

''நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். (5 : 18).

முஸ்லிம்கள் நம்பிக்கைகொண்டவர்கள்

அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. இதன் பின்னர் அதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உம்மை எப்படி தீர்ப்பு வழங்குபவராக ஏற்றுக் கொள்வார்கள்? அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர் (5 : 43).

அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் (2 : 100)

முஸ்லிம்கள் மனிதர்களை கடவுளாக்கவில்லை

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (9 : 31)

முஸ்லிம்கள் வேதத்தை வீசி எறியமாட்டார்கள்

அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் (முஹம்மத்) அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தமது முதுகுக்குப் பின்னால் வீசி எறிந்தனர் (2 : 101)
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கமாட்டார்கள்

அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம். (2 : 61)

(ஏக இறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன் உதவி தேடி வந்தனர். அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்த போது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது அவர்களிடம் வந்த போது, அதை ஏற்க மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது. (2 : 89)
முஸ்லிம்கள் மறுமை நம்பிக்கை கொண்டவர்கள்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரைக் கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! (ஏக இறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப்படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப் பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள். (60 : 13)

இதுபோன்ற நூற்றுக்கணக்கான வசனங்கள் யூதர்களும் முஸ்லிம்களும் ஒன்றல்ல என ஆணித்தரமாக கூறும்போது, அனைத்தையும் மறைத்துவிட்டு யூதர்களை சகோதரர்கள் என்று கூறக்கூடிய யூசுஃப் அல் கர்ளாவியை சர்வதேச முன்னணி மார்க்க அறிஞர் என்று புகழாரம் சூட்டி அவனுடைய விஷ கருத்துக்களை பிரசுரித்து இருக்கும் தமுமுக, யூதர்களிடம் எதிர்பார்ப்பதென்ன?

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறியவன் யூசுஃப் அல் கர்ளாவி

காஃபிர் அறுத்தவற்றை சாப்பிடலாம்,
இசைகளை கேட்கலாம்,
சின்ன வட்டி ஹலால் என்று கூறியவன்தான் யூசுஃப் அல் கர்ளாவி

எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் இஷாக் ராபின் தேர்தலிலே வெற்றி பெற்றபோது, அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்கி வந்து இஸ்ரவேலர்களிடம் ஓட்டு கேட்டிருந்தால் கூட தோற்று போயிருப்பான் என்று கூறிய அயோக்கியன் தான் இந்த யூசுஃப் அல் கர்ளாவி. (நவூதுபில்லாஹ்!)

சவுதி அரேபியாவின் மறைந்த மாபெரும் மார்க்க அறிஞரான ஸாலிஹ் அல் உதைமின்(ரஹ்) அவர்கள் யூசுஃப் அல் கர்ளாவி முர்த்தத் ஆகிவிட்டான், தவ்பா செய்யாவிட்டால் இவனுடைய கழுத்தை வெட்டுவது இஸ்லாமிய அரசின் கடமை என்று ஃபத்வா கொடுத்துள்ளார் (பார்க்க : ரப்வுல் லிதாம்-பக்கம் 99)

நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதை கேளுங்கள்:

(தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள் ஆயிஷா(ரலி) அறிவித்தார் (புஹாரி 603)

தொழுபவர் தன் கையைத் தன்னுடைய பக்கவாட்டில் (இடுப்புக்கு மேல்) வைத்திருப்பதை ஆயிஷா(ரலி) வெறுத்து வந்தார்கள். 'யூதர்கள் தான் அப்படிச் செய்வார்கள்' என்று சொல்வார்கள். இதே போன்று அஃமஷ்(ரஹ்) வழியாக ஷுஅபா(ரஹ்) அறிவித்தார்.( (புஹாரி 3458)

முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றிய படி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, 'இதை (போலி முடி வைத்துக் கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி(ஸல்) அவர்கள் இதைப் 'பொய்யானது' என்று கூறினார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்டவைப்பதைத் தான் நபி(ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள். இந்த நபிமொழி வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் (புஹாரி 3488)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்க(ளான யூத கிறித்தவர்க)ளுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.
இதை இப்னு உமர் (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்­லிம் 434)

அனஸ் (ரரி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர் களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''(நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். 'அது ஓர் (இயற்கை) உபாதை' என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்றபோது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்...'' என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, 'நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்' என்று கூறினர். (முஸ்­லிம் 507
)

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று இறைதூதர் வலியுறுத்தும்போது, இந்த தமுமுகவினரோ பாலஸ்தீனை பாதுகாக்க யூதர்களோடு கைகோர்ப்போம் என்று கூறுகின்றனர்.

யூத கைக்கூலிகளே!

உங்களைப்பற்றி ஏற்கனவே அல்லாஹ் எங்களுக்கு எச்சரித்துள்ளான்.

இதோ!

உள்ளங்களில் நோய் இருப்போர், அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். ''எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்; அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள் (5 : 52).

அரசியல் லாபங்களுக்காக,புகழுக்காக,பணத்திற்காக மார்க்கத்தை மறைத்து இஸ்லாத்தின் எதிரிகளிடத்தில் கையேந்தி நிற்கும் இவர்கள், இனியும் இழிவடைவார்கள் இன்ஷாஅல்லாஹ்!

முஸ்லிம்களே உங்களுக்கொரு ஞாபகமூட்டல்:

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (5 : 57).

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5 ; 51)

ஒவ்வொரு நாளும் தொழுகையில் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோமல்லவா?

எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.(1 : 5,6,7)

Friday, May 23, 2008

பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு சொந்தமா?

ஏக இறைவனின் திருப்பெயரால்...

பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு சொந்தமா?
இல்லவே இல்லை எனக்குத்தான் சொந்தம் –
ஜாக் அமீர் எஸ்.கமாலுதீன் மதனி கோர்ட்டில் வாக்குமூலம்

22 பக்க தீர்ப்பின் நகல்

ஜாக் அமைப்பிற்கும் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பள்ளிவாசல் பூட்டப்பட்டபோது, பள்ளிவாசலை பூட்டக்கூடாது, எங்களுக்கு தொழுகை நடத்த பள்ளிவாசலை திறந்து தரவேண்டுமென்று ஊர் மக்கள் வழக்கு தொடுத்தனர். அப்போது ஜாக் அளித்த வாக்குமூலங்கள்

வழக்கு தொடுத்தவர்கள்:

1.மசூது

2.சேகு உதுமான் மற்றும் கடையநல்லூர் மெயின் பஜார் தெருவிலுள்ள அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் மற்றும் சந்தா உறுப்பினர்களின் பிரதிநிதிகள் நிலைமையில்.

எதிர் மனுதாரர்கள்:

1.ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் ஹதீஸ் (ஜாக்) அதன் மாநில தலைவர் கமாலுதீன் மதனி மூலம்.

2.கடையநல்லூர் மெயின் பஜார் தெரு அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் அதன் நிர்வாக கமிட்டி தலைவர் சேகு உதுமான் மூலமாக.

ஊர்மக்களின் மனுவிலிருந்து சில வரிகள்:

மனுதாரர்கள் (ஊர்மக்கள்) தங்களுக்காகவும் கடையநல்லூர் மெயின் பஜார் அல் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மற்றும் பள்ளிவாசல் சந்தா உறுப்பினர்கள் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.
மனுசொத்தாக பள்ளிவாசலில் மனுதாரர்கள் முறையாக தொழுகை நடத்தி வக்பு நோக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை யாரும் தடுக்க இயலாது என எதிர்மனுதாரர்கள் (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி )மீது விளம்புகை பரிகாரம் கோரியும் அதில் தொழுகை நடத்தி வக்பு நடவடிக்கைகளை மனுதாரர்கள் (ஊர்மக்கள்) மேற்கொள்வதை எதிர்மனுதாரர்களோ அவர்களை சேர்ந்தவர்களோ (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி )தடை செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்த பள்ளிவாசலில் மனுதாரர்கள் தொழுகை தவிர அரபி பாடசாலை, ஆன்மீக நூலகம், ரத்ததானம் நலிவுற்றோருக்கு உதவுதல் போன்ற வக்பு காரியங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிவாசல் நிர்வாகமின்றி பராமரிப்புமின்றி தொழுகை தடைபட்டுள்ளது.மனுதாரர்கள் வழக்கம்போல் நாள்தோறும் தொழுகைக்கு அனுமதிக்கப்படாமல் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் மனு சொத்தான வக்பு தொடங்கப்பட்ட நோக்கத்திற்கும் விரோதமானதாகும்.சுமார் ரூ 60,00,000 வரை செலவு செய்து கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தக்கூடாது என்பது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாகும்.
மனுதாரர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாமல் அருகிலுள்ள கட்டிடத்தின் மொட்டை மாடியில் தொழுகை செய்தும்,அரபி மதரஸா பள்ளியை அருகிலுள்ள கட்டிடங்களின் வராண்டாக்களில் நடத்தியும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.எனவே பள்ளிவாசல் ஏற்படுத்தியுள்ள வக்பு தடைபடுத்தப்பட்டு பல லட்சங்கள் மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
மனுதாரர்கள் மனுச்சொத்தான பள்ளிவாசலில் முறையாக தொழுகை நடத்தி வக்பு நடவடிக்கை மேற்கொள்வதை தடை செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று விளம்புகை பரிகாரம் கோரியும் மனுதாரர்கள் மனுசொத்தில் முறையான தொழுகை நடத்தி வக்பு நோக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்மனுதாரர்களோ அவர்களது ஆட்களோ (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி) இடைஞ்சல் செய்யக்கூடாது.......என்று மனுதாக்கல் செய்துள்ளார்கள்.

1-வது எதிர்மனுதாரராகிய ஜாக்கின் எதிர் உரையிலிருந்து சில வரிகள்:

மனுசொத்தான அல் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் கடையநல்லூரை சேர்ந்த இஸ்லாமிய மக்களின் நன்மைக்காகவும் தொழுகைக்காகவும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவைகளில் நம்பிக்கை உடைய சந்தா செலுத்தும் உறுப்பினர்களாலும் சேர்ந்து வசூல் செய்து நன்கொடை தொகையை கொண்டும் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்தும் கட்டப்பட்டதாக கூறுவது தவறானதாகும்.
(பள்ளிவாசல்களை ஜாக் ஏன் கட்டுகிறது என்பதை அறிய மேற்கண்ட ஜாக்கின் வாக்குமூலங்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.அதாவது,முபாரக் பள்ளிவாசல் கடையநல்லூரை சேர்ந்த இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக கட்டப்படவில்லையாம் இஸ்லாமிய மக்களின் தொழுகைக்காகவும் கட்டப்படவில்லையாம், குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவைகளில் நம்பிக்கை உடையவர்களுக்காகவும் கட்டப்படவில்லையாம், பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்தும் கட்டப்பட்டவில்லையாம் பின் எதற்காக எப்படி கட்டினார்கள் என்பதை இதை படிப்பவர்கள் தான் கூறவேண்டும்)

மேற்கொண்டு ஜாக்கின் வாக்குமூலங்களை படியுங்கள்:

பள்ளிவாசல் நிர்வாகம் செய்யப்படாமல் பராமரிப்பின்றியும் தொழுகை தடைபட்டுள்ளதாவும் எந்த நோக்கத்திற்காக அது அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் கூறுவது தவறானதாகும்.
மனுதாரர்கள்(ஊர்மக்கள்) மனுசொத்தில் தொழுகை நடத்த முடியாமல் அருகிலுள்ள மொட்டைமாடியில் தொழுகை செய்து அரபி மதரஸா பள்ளியை நடத்தி வருவதாக கூறுவது உண்மையல்ல.
மனுசொத்து 1-வது எதிர் மனுதாரருக்கு (ஜாக்கிற்கு) பாத்தியப்பட்டதாகும்.அதில் உள்ள கட்டுமானங்களை 1-வது எதிர்மனுதாரர்(ஜாக்)தான் கட்டினார். மனுசொத்தின் அடிமனையை வாங்குவதற்கு நன்கொடை எதுவும் வசூல் செய்யப்படவில்லை.மேலும் மனு சொத்திலும் அதில் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலுக்கும் மனுதாரர்களுக்கும்(ஊர்மக்களுக்கும்)எந்தவிதமான உரிமையும் கிடையாது.எனவே அதில் தொழுகை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளது தவறானதாகும். (ஜாக் இயக்கத்திற்கு பண உதவி செய்பவர்களே ஜாக்கின் மேற்கண்ட வாக்கு மூலங்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.மக்களிடம் வசூல் செய்யாமல் கமாலுதீன் மதனி தன்னுடைய சொந்த பணத்தில்தான் பள்ளிவாசல் கட்டினாரா? பள்ளிவாசலில் தொழுகை நடத்த ஊர்மக்களுக்கு உரிமை கிடையாதெனில் அங்கே கமாலுதீன் மதனி குடும்பம் நடத்துவதற்காகவா பள்ளிவாசல் கட்டினார்.)

மேற்கொண்டு படியுங்கள்:
மனுசொத்தின் உண்மையான உரிமையாளர்கள் ஜே.ஏ.க்யூ.ஹெச் அமைப்பு என்பதாலும் ஜே.ஏ.க்யூ.ஹெச் அமைப்பு பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பதால் அது வக்பு சொத்தல்ல என்பதாலும் மனுதாரர்கள் கோரியவாறு பரிகாரத்தை பெற தகுதிபடைத்தவர்களல்ல. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இனி 2-வது எதிர் மனுதாரராகிய நிர்வாக கமிட்டியின் எதிர்மனுவிலிருந்து சில வரிகள்:
பள்ளிவாசல் தொழுகைக்காக கூட திறக்கப்படாமல் இருப்பதற்கு 2-வது எதிர் மனுதாரர்(நிர்வாக கமிட்டியினர்) எந்தவிதமான காரணமும் கிடையாது.

2-வது எதிர் மனுதாரர் (நிர்வாக கமிட்டியினர்)பள்ளிவாசல் தொழுகையை தடை செய்யவில்லை.நீதிமன்றம் அனுமதிக்கும் விதத்தில் பள்ளிவாசல் தொழுகைக்கு ஆவன செய்திட 2-வது எதிர் மனுதாரர் நிர்வாகி என்ற முறையில் தயாராக இருக்கிறார்.எனவே இந்த மனுவை அனுமதிப்பதற்கு 2-வது எதிர் மனுதாரர்(நிர்வாக கமிட்டியினர்) ஆட்சேபனை செய்யவில்லை.

நீதிபதியின் தீர்ப்பிலிருந்து சில வரிகள்:

மனுசொத்து வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக மனுதாரர்கள்(ஊர்மக்கள்) இந்த வழக்கை வக்பு தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய உரிமை கிடையாது என்ற வாதம் ஏற்றக்கொள்ளத்தக்க விதத்தில் அமையவில்லை என்று கருதுகிறேன்.வக்பு வாரிய சட்டத்தின் கீழ் வக்புவில் அக்கறையுள்ள எந்த நபரும் வக்பு அல்லது வக்பு சொத்து குறித்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளதாலும் மனுதாரர்கள்(ஊர்மக்கள்) மனுச்சொத்தான பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கு உரிமை பெற்ற சந்தாதாரர்கள் என்பதாலும் மனுசொத்து குறித்து மனுதாரர்கள் (ஊர்மக்கள்) வழக்கை தாக்கல் செய்வதற்கு உரிமை கிடையாது என்ற வாதத்தில் வலு இருப்பதாக கருத முடியாது என்று கருதுகிறேன்.
மனுதாரர்கள் (ஊர்மக்கள்) தங்கள் மனுவில் மனுசொத்தில் உள்ள பள்ளிவாசலில் முறையாக தொழுகை நடத்தி வக்பு நோக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை எதிர்மனுதாரர்கள் (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி ) இடைஞ்சல் செய்யக்கூடாது என்று இடைக்கால உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள்.ஏற்கனவே கூறியுள்ளதிலிருந்து மனுசொத்தான பள்ளிவாசல் அதன் உபயோக தன்மை காரணமாக வக்பு என்பதும் மனுதாரர்கள்;;(ஊர்மக்கள்) தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களிலிருந்து மனுதாரர்கள்;;(ஊர்மக்கள்) அந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தி சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் என்பதும்; நிரூபிக்கப்பட்டுள்ளது.
2-வது எதிர் மனுதாரர் (நிர்வாக கமிட்டியினர்) தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர் பள்ளிவாசல் தற்போது மூடப்பட்டு தொழுகை நடத்த முடியாத நிலைமையில் இருப்பதாகவும் எனவே தொழுகை நடத்துவதற்கு தக்க உத்தரவு பிறப்பிக்கும்படியும் கோரியுள்ளார்.
மனுசொத்தில் 1-வது எதிர்மனுதாரருக்கு ( ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் ஹதீஸ் (ஜாக்) அதன் மாநில தலைவர் கமாலுதீன் மதனிக்கு) உரிமையுள்ளதா 2-வது எதிர் மனுதாரருக்கு (நிர்வாக கமிட்டியினர்) உரிமையுள்ளதா என்பது குறித்து 1-வது எதிர்மனுதாரர் 2-வது எதிர் மனுதாரர் தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில்தான் முடிவு காண முடியும்.ஆனால் மனுசொத்து ஒரு வக்பு சொத்து என்பதாலும் மனுதாரர்கள் கடையநல்லூரில் உள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவைகளில் நம்பிக்கை உடைய சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் என்பதாலும் மனுசொத்தில் அவர்கள் தொழுகை செய்து வக்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடை செய்வதற்கு எதிர்மனுதாரர்களுக்கு (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி ) எந்த விதமான உரிமையும் கிடையாது என்பது தெளிவாகிறது.எனவே மனுதாரர்கள் (ஊர்மக்கள்) கோரியவாறு மனு சொத்தில் மனுதாரர்களும் (ஊர்மக்களும்) அந்த பள்ளிவாசல் மற்ற உறுப்பினர்களும் தொழுகை நடத்தி வக்பு நடவடிக்கையை மேற்கொள்வதை எதிர் மனுதாரர்களோ (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி) அவரது ஆட்களோ தடை செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியுள்ளதில் மனுதாரர்களுக்கு (ஊர்மக்களுக்கு) முதல்நிலை வழக்கும் சமநிலை பாகுபாடும் சாதகமாக அமைந்துள்ளதாக கருதுகிறேன்.எனவே மனுதாரர்கள் (ஊர்மக்கள்) கோரியவாறு பரிகாரத்தை பெற தகுதிபடைத்தவர்கள் என்று தீர்மானித்து இந்த பிரச்சனைக்கு இவ்வாறாக தீர்வு காண்கிறேன்.

முடிவில் இந்த மனு அனுமதிக்கப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்!

கமாலுதீன் மதனி கோஷ்டியினர் எத்தகைய சூழ்ச்சிகள் செய்தபோதும் அனைத்தையும் அல்லாஹ் முறியடித்தான்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர்.அவர்களின் சூழ்ச்சி மலைகளை புரட்டக்கூடியதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அல்லாஹ்விடமே உள்ளது. (திருக்குர்ஆன் 14:46)

தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்.அல்லது அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்த விடும்.அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போதே அவர்களை அவன் பிடிப்பான்.அல்லது பயந்து கொண்டிருக்கும்போதே அவர்களை அவன் பிடித்து விடுவான் என்பதில் அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் தப்பிக்க முடியாது.உங்கள் இறைவன் இரக்கமுள்ளவன்.நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 16 : 45,46,47)

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர்.நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம் (27 : 50)
அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிதளவும் அவர்களை காப்பாற்றாது.அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 52 : 46)

திருநெல்வேலி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஜாக்கின் மோசடி வாக்குமூலங்களடங்கிய தீர்ப்பின் நகல் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.



Wednesday, May 21, 2008

எங்கே செல்கிறது ஜாக் - 1 தொப்பி

ஏக இறைவனின் திருப்பெயரால்...

எங்கே செல்கிறது ஜாக்?

தொப்பி

ஜாக் நேற்று: தொப்பி அணிவது முஸ்லிம்களின் அடையாளமல்ல, அது கட்டாய சுன்னத்துமல்ல.

ஆரம்ப காலத்தில் தொப்பி அணியாமல் ஜாக் ஆதரவாளர்கள் பள்ளிக்கு சென்றபோது, தொப்பி அணியாதவர்கள் இங்கே தொழக்கூடாது என மத்ஹப்வாதிகளால் போர்டு போடப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்டனர். அப்போது ஜாக் அமைப்பினர் கொள்கைவாதிகளாக இருந்தனர்.

ஜாக் இன்று:த.த.ஜ எதை சொன்னாலும் அதை எதிர்ப்பது ஒன்றே தங்களின் தற்போதைய கொள்கையாக கொண்டு செயல்படுகின்றனர்.

உதாரணமாக, குழந்தைகளின் மதரஸா பருவத்திலிருந்தே தொப்பி அணிய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஜாக் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனியின் அலுவலகமான குமரி மாவட்டம் கோட்டாறு சந்தி தெருவிலுள்ள ஜமைய்யாவில் நடத்தப்படும் மதரஸத்துஸ் ஸலாஹ் எனும் மதரஸாவின் விதிமுறை படிவம் இது.

அதில் அனைத்து விதிமுறைகளுக்கும் ஒத்துழைப்பு தருவோம் என்று பெற்றோர் கையெழுத்திட வேண்டும்.

படிவம் 2-ல் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

சிறுவர்களின் சீருடையாக தொப்பியும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம். கடைசிவரியில் மாணவர்கள் தொப்பி அணிந்து வரவேண்டுமென்பதை தனியாக குறிப்பிட்டிருப்பதையும் கவனிக்கவும்.

யாருக்காக! இது யாருக்காக!!

ஜாக் வந்த வழியை நோக்கி - 1




Monday, May 19, 2008

நோக்கியா பேட்டரிக்கு தடை!!


மஸ்கட் : குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எதிரான விளையாட்டு பொருட்களின் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு அமெரிக்கன் கம்பெனி விளையாட்டு பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து பின்வாங்கியது. விற்பனை செய்யும் கடைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையில் நோக்கியா கம்பெனியின் பாட்டரியான BL^5c வரிசை எண்ணுள்ள சில பாட்டரிகள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டதால் அதை பின்வாங்குவதாக நோக்கியா கம்பெனியின் அதிகாரிகள் அறிவித்தனர். இந்த வகை பாட்டரிகளை செல்போணில் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது அவை அதிகமாக சூடாகி ஆபத்தை உண்டாக்கும் என கண்டறியப்பட்டதாலேயே இது நிறுத்தப்படுகிறது.

தாம் உபயோகிக்கும் பேட்டரிகள் இந்த வகையில் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய www.nokia.com/batteryreplacement/ent என்ற வெப்ஸைட்டுக்கு சென்று பாட்டரியின் வரிசை எண்ணை டைப் செய்து பரிசோதிக்கலாம். இந்த வகை பாட்டரிதான் என்பது ஊர்ஜிதமானால் பயன்படுத்துபவரின் பெயரையும் விலாசத்தையும் பதிவு செய்தால் கம்பெனிமூலம் இலவசமாக புதிய பாட்டரி அனுப்பிதரப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, May 13, 2008

இம்தாதிக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஒருவன் இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:48)

ரஹ்மத்துல்லாஹ் இம்தாதிக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் நிறை மற்றும் குறைகளை எடுத்து வைக்கும்போது சுட்டிக்காட்டப்பட்டவைகள் இருக்கும் அந்த மனிதர், அதை திருத்திக்கொள்வதும் அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கான விளக்கம் தருவதும் நற்பண்பாளர்களின் சிறந்த செயலாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுடைய பெயரில் எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மொத்த சாராம்சம் என்னவெனில் த.த.ஜ அமைப்பும், அதன் நிர்வாகிகளும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்பதும், த.த.ஜ-வில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இதை உணர வேண்டும் என்ற மிகச்சிறப்பான(?!) நல்ல(?!) நோக்கமாகவே கருதிக்கொள்வோம். அந்த அடிப்படையிலேயே அவர் கீழ்கண்டவாறு கூறியிருப்பதை காண்போம்..

ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்தி கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள்.

மேற்கண்ட அவருடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். த.த.ஜ-வை சார்ந்தவர்கள் நிச்சயமாக ஷைத்தானின் அடிமையாக இருக்க முடியாது என்பதை நிரூபிப்பதற்கு வாய்ப்பளித்த அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறோம். அதனடிப்படையிலே இங்கு சிறு விளக்கத்தையும் பதிவு செய்கிறோம். த.த.ஜ உறுப்பினர்களாகிய நாங்கள் எங்கள் அமைப்பையோ, அதன் நிர்வாகிகளையோ தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக கருதவில்லை. அப்படி கருதக்கூடிய சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் எங்களுடைய நிலையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம், இன்ஷா அல்லாஹ்.

தமிழகத்தில் எத்தனையோ அமைப்புக்கள் இருக்க, பெரும்பாலானோர் ஏன் த.த.ஜ-வை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற வயிற்றெரிச்சலுடன் கூடிய கேள்வி உங்களைப் போன்றவர்களுக்கு அடிக்கடி எழுந்து விடுகிறது. அதன் வெளிப்பாடாகவே சில நேரங்களில் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைப்போல் செயல்பட்டு புழுதி வாறி தூற்றி திரிகிறார்கள். மற்ற அமைப்புக்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருப்பதுபோல், ஏன் த.த.ஜ-வை தேர்ந்தெடுத்தோம் என்பதற்கும் பல காரணங்கள் உண்டு. அதில் சில...



த.த.ஜ குர்ஆன் மற்றும் சுன்னாவை தூய்மையான முறையில் எடுத்தியம்பக்கூடிய இயக்கம்.

த.த.ஜ அறிஞர்களால் கடந்த காலங்களில் மார்க்கத்தை ஆய்வு செய்து சொல்லப்பட்ட செய்தி பிற்காலங்களில் தவறு என்று தெரிய வரும்பொழுது எந்தவித கூச்சமும் இன்றி மக்கள் முன்னிலையில் போட்டுடைப்பது.

யாருக்காகவும், எதற்காகவும் மார்க்கத்தை வளைக்காத பிடிமானம்.

அரசியல் பிரமுகர்களின் தயவுக்காக சமுதாய பிரச்சனைகளில் சமரசம் செய்து கொள்ளாத போர்க்குணம்.

பொருளாதாரத்தில் தூய்மை.



இதுபோல் இன்னும் பல விசயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சுருக்கமாக சொல்லப்போனால் த.த.ஜ-வில் இருக்கக்கூடிய சிற்சில தவறுகள் பல அமைப்புகளில் இருக்கக்கூடியது. ஆனால் த.த.ஜ-வில் இருக்கக்கூடிய குர்ஆன் மற்றும் சுன்னாவை உள்ளடக்கிய நற்பண்புகள் மற்றும் செயல்பாடுகள் தமிழகத்தில் வேறு எந்த அமைப்பிடமும் காணக் கிடைக்கவில்லை.

இது யாருடைய வயிற்றெறிச்சலிலும் பெட்ரோல் ஊற்ற வேண்டும் என்பதற்காகவோ, அல்லது சில மனநோயாளிகளின் மனநோயை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ சொல்லப்படவில்லை. இது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது, அதனால்தான் பெரும்பாலான மக்கள் த.த.ஜ-வை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இப்பொழுது விசயத்திற்கு வருவோம். ஆதாரங்களுடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்தி கொள்வேன் என்று சொல்லியுள்ள சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள், தான் எடுத்து வைத்த எந்தவொன்றுக்கும் ஆதாரத்தை முன் வைக்கவில்லை என்பதை இங்கு நினைவில் வைப்போம். அவர் தொடர்பாக சில ஆதாரங்களுடன் இங்கு சுட்டிக்காட்டப்படும் தவறுகளை அவர் திருத்தி(ஒப்பு)க்கொண்டு ஷைத்தானின் அடிமைகளில் ஒருவராக இல்லாமல் இருந்தால் அதுவே அனைவருக்கும் மகிழ்ச்சியாகும்.

சுட்டிக்காட்டல் - 1 (இப்போதைக்கு)

குர்ஆனும் சுன்னாவும்தான் எங்கள் கொள்கை என்று பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் மட்டும் கூறிக்கொள்ளும் ஜாக் என்ற அமைப்பு குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் எதிரான செயல்களில் எப்படி ஈடுபட்டு வருகின்றதோ அதுபோலவே ஓட்டுரிமை கூடாது, போராட்டம் கூடாது, அரசியலில் ஈடுபடக்கூடாது என்று பேச்சிலும், எழுத்திலும் கூறிக்கொண்டு இருந்ததை அனைவரும் அறிவர். அதற்கு முரண்பாடாக அரசியல்வாதிகளை ஆட்சியில் அமர்த்த பிரச்சாரங்கள் செய்ததும், ஃபித்னா ஏஜண்ட் ஃபஸ்லுல் இலாஹியை எம்.எல்.ஏ பதவியில் அமர்த்த மேலப்பாளையத்தில் ரோட்டில் இறங்கி போராட்டம்(!?) நடத்தியதும் அனைவரும் அறிந்த கதையே.

ஆரம்ப காலத்தில் தமுமுக வில் சேருவது ஹராம் என்று ஃபத்வா கொடுக்காத குறையாக விமர்சித்துக் கொண்டிருந்த அதே ஜாக், கடந்த தேர்தலில் தமுமுகவுடன் சேர்ந்து கொண்டு அரசியல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்ததும் அனைவரும் அறிந்தது.



அதன் வரிசையில், கடையநல்லூரில் தமுமுக-வின் மேடையில் ஜாக்கின் மாநில செயலாளரான கோவை.அய்யூப் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளரான பீட்டர் அல்போன்ஸூக்கு வாக்களியுங்கள் என்று ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது முன்வரிசையில் இருந்து அதை ரசித்து ருசித்து கொண்டிருந்தவர்தான் நம்ம கடையநல்லூர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.

கோவை அய்யூப் அவர்களின் பிரச்சாரத்தை ரசித்த அதே ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு பின்பு கன்னியாகுமரியில் நடந்த ஜாக் பொதுக்கூட்டத்தில் என்ன சொன்னார் தெரியுமா? தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன் என்று குழந்தை போல் கூறும் இம்தாதி அவர்களே! என்ன சொன்னீர்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா?

கடந்த ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதற்காக ஆணையம் அமைத்ததை சுட்டிக்காட்டி அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்து, ..இவர்கள் தவ்ஹீத், தவ்ஹீத் என்று கூறிக்கொண்டு எங்கே சென்றுவிட்டார்கள் பார்த்தீர்களா? அரசியல்வாதியை ஆட்சியில் அமர்த்த துடிக்கிறார்கள்.. என்று த.த.ஜ-வை கடுமையாக சாடினார்.

ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களே.. கோவை அய்யூப் அரசியல்வாதி அல்லாமல் வேறு யாரை ஆட்சியில் அமர்த்த கடையநல்லூரில் பிரச்சாரம் செய்தார்? யாருக்காக என்று நினைத்து நீங்கள் முன்வரிசையில் அமர்ந்து ரசித்தீர்கள்? ஊருக்கொரு கொள்கை! தெருக்கொரு முகமூடி!! நீங்கள் கன்னியாகுமரியில் கூறியதற்கான நேரடி ஆதராங்களை வைக்கவில்லை என்பதற்காக பொய் கூறி பாவத்தை சம்பாதித்து விடாதீர்கள். மேலே குறிப்பிட்டுள்ள திருமறை வசனத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்ததற்காகவும், ஆட்சிக்கு வந்தால் ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறை படுத்துவோம் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிக்காகவும் அந்த தேர்தலில் மட்டுமே அ.தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டும் என்று த.த.ஜ பிரச்சாரம் செய்தது.

சகோ.கமாலுத்தீனை தலைவராக கொண்ட ஜாக்-கும், வாத்தியார் ஜவாஹிருல்லாவை தலைவராக கொண்ட த.மு.மு.க-வும், தி.மு.க-விடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது போல் மௌலவி பி.ஜைனுல்ஆப்தீன் அவர்களை தலைவராக கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.தி.மு.க-விடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. மாமிச வெறியன் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கொடுத்த விருந்தை கண்டித்து த.த.ஜ கண்டன ஆர்பாட்டம் செய்ததை இதற்கு ஆதாரமாக நினைவு படுத்தி கொள்ளுங்கள்.

தி.மு.க என்ன செய்தாலும், அது எதுபோன்றொதொரு அநீதி இழைத்தாலும் தி.மு.க-வையே ஆதரிப்போம் என்று எழுதப்படாத அடிமை சாசனத்தை ஜாக்-கும், த.மு.மு.க-வும் எழுதிக் கொடுத்தது போல் த.த.ஜ எழுதிக் கொடுக்கவில்லை.





எங்கள் இயக்கத்தவரை வேட்பாளராக்குங்கள் என்று ஜாக் நடத்தியது போன்ற அடவாடித்தனத்தை த.த.ஜ ஒருபோதும் செய்ததில்லை.


3.5 சதவிகித இடஒதுக்கீட்டை ஏட்டளவில் கொடுத்துவிட்டு நடைமுறையில் அல்வா கொடுத்த கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி பேசிய வாத்தியார் ஜவாஹிருல்லாவை போல், மௌலவி பி.ஜைனுல்ஆப்தீன் சமுதாயத்திற்கு துரோகம் செய்யவில்லை.

ஜாக்கின் துணைதலைவரான ஏர்வாடி சிராஜ் தற்பொழுது கவுன்சிலராக இருப்பதுபோல் த.த.ஜ-வில் எவரும் கவுன்சிலர் பொறுப்பில் இல்லை.





இம்தாதி அவர்களே! இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். ஆகவே, மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும் உங்களுடையதும், நீங்கள் சரி காணும் ஜாக் மற்றும் த.மு.மு.க-வினரின் தவறுகள் என்று நீங்கள் கருதினால் உங்கள் தவறுகளுக்காக வருந்தி ஏக இறைவனிடம் மன்னிப்புக்கோரி துஆ செய்யுங்கள். அப்படியே மக்களுக்கும் அதை தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் நீங்கள் குறிப்பிட்டதுபோல் தவ்ஹீத்வாதிகள் அனைவரும் மீண்டும் ஒற்றுமையாக கை கோர்த்து செயல்பட ஏதுவாக இருக்கும்.

ஆதாரங்கள்

1) கடையநல்லூரில் கோவை.அய்யூப் அரசியல் பிரச்சாரம்.

2) மேலப்பாளையத்தில் ஜாக் போராட்டம்.

3) பத்திரிகை செய்தி.

4) ஜாக்கின் துணைதலைவர் ஏர்வாடி சிராஜ் கவுன்சிலராக நின்றபோது வெளியிடப்பட்ட நோட்டீஸ்.