Saturday, June 21, 2008

தூதருக்கு கட்டுப்படுவோம் - பாகம் 01

ஏக இறைவனின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கப்ரு வழிபாடு கூட கூடும் என்று ஜாக்கை சேர்ந்தவர்கள் சொல்லாமலிருக்க நாம் பிரார்த்தனை செய்வோம் என்று ஏகத்துவம் மாத இதழில் ஒருமுறை எழுதியிருந்தார்கள். என்னதான் இருந்தாலும் இவர்கள் எல்லை மீறி விமர்சிக்கிறார்களோ என்று சிலர் எண்ணினார்கள். ஆனால், அவர்களுடைய (ஜாக்) ஒரு சில செயல்பாடுகளை பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட அதற்கு நெருக்கமான நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுதல்.

ஒரு முஸ்லிமிற்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம், அதனையொட்டி அவன் எந்த ஒரு காரியத்தையும் தன் விருப்பம்போல தேர்வு செய்தும் கொள்ளலாம். ஆனால், அவருடைய அந்த விருப்பத்திற்கு மாற்றமாக அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ ஒரு முடிவை முன்வைத்தால் அந்த முஸ்லிம் தனது விசயத்தை அப்படியே புறம் தள்ள வேண்டும். அப்படி செய்பவரே வழி கெடாதவர்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)

பெருமானாரின் பெருநாள் தொழுகை.

பெருநாள் தொழுகையானது திடலில்தான் நடத்தப்பட வேண்டும். அதுதான் நபி வழி என்பது குர்ஆன், சுன்னாவை விளங்கிய அனைத்து முஸ்லிம்களும் அறிந்தது. ஏனெனில் பெருநாள் என்பது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நாள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜூப்பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையை துவக்குவார்கள். அறிவிப்பவர்: அபு ஸஹீத் அல் குத்ரி. நூல்: புகாரி 956

கன்னிப்பெண்களும், மாதவிடாய் ஏற்பட்டிருக்கக்கூடிய பெண்களும் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு வரவேண்டும் என்றும், அவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் பெருநாள் உரையை கேட்க வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கன்னிப்பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச்செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டும் விலகியிருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி

தன்னிடம் இரண்டு ஆடைகள் வைத்திருக்கும் பெண்கள், ஆடையில்லாத பெண்களுக்கு அதை கொடுத்து அவர்களையும் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு அழைத்து வரட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி) நூல் : புகாரி

மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்தும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய போதனையிலிருந்து,
பெருமானார் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை திடலிலேயே தொழுதுள்ளார்கள் என்பதும்.

திடலுக்கு (தொழ) வரும்படி கன்னிப்பெண்களுக்கும், மாதவிடாய் உள்ள பெண்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்பதும்.

இதற்கு மாற்றமாக ஒரு புதிய கருத்தைச் சொல்ல எந்த ஒரு முஸ்லிமிற்கும் அருகதை இல்லை என்பதும் நம்மால் விளங்கி கொள்ள முடிகிறது.

அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்யும் 'ஜாக்'கர்கள்:

குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு என்கிற ஊரில் வலியுறுத்தப்பட்ட இந்த சுன்னத்தை பேணாமல் உதாசீனப்படுத்தி வரும் ஜாக்கினரின் செயலை த.த.ஜ வினர் உட்பட பலர், பலமுறை சுட்டிக்காட்டியும் அவர்கள் அதை திருத்திக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் தொழுகை நடத்த திடல் இல்லை என்று பொய்க்காரணம் கூறி புறக்கணித்து வந்தனர்.(மாநாடு நடத்துவதற்கு மட்டும் அவர்களுக்கு திடல் கிடைக்கும்)

இவர்கள் திருத்திக்கொள்ளாத நிலையில், குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகையை திடலில் நடத்த தீர்மானித்தனர். நீண்ட ஒரு தோட்டத்தை சமன் செய்து, அந்த இடத்தில் பெருநாள் தொழுகை நடக்கும் என அறிவிப்பு செய்தனர்.

மேலும், பெருநாள் தொழுகையை ஏன் திடலில் தொழவேண்டும் என்பது பற்றிய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய பிரசுரங்களையும் வெளியிட்டனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பேனர்களும் கட்டப்பட்டன.

தாங்கள் செய்யாததை எவரும் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் கோட்டாறு அஷ்ரப் பள்ளிக்கு வெளியே ரோட்டில் வைத்துகூட நோட்டீஸ் விநியோகம் செய்ய ஜாக்கினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இரவோடு இரவாக வரவேற்பு பேனர்களும் களவாடப்பட்டன.

அல்லாஹ்வை வணங்குவதற்கும், அவனுடைய தூதரின் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி நேர்வழியின்பால் மக்களை அழைப்பதற்கும் கட்டப்பட்ட கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் பி.ஜே மீது அவதூறு கூறாத வெள்ளி மேடையே கிடையாது எனும் அளவிற்கு தரம் தாழ்ந்து செயல்படுபவர்கள் இந்த ஜாக் அமைப்பினர். இதுபோன்ற இவர்களுடைய அத்துமீறலினால் (இதைவிட அது பரவாயில்லை என்ற எண்ணத்தில்) தூரமாக இருக்கக்கூடிய சுன்னத் வல் ஜமாஅத்தின் கீழ் உள்ள மணிமேடை கலாச்சார பள்ளிக்கு தொழ செல்பவர்களும் அங்கு ஏராளம் உண்டு. அந்த அஷ்ரப் பள்ளியின் முன்புதான், நபி (ஸல்) அவர்கள் வழியில் ஒரு தொழுகைக்கு அழைப்பு விடுத்து வினியோகம் செய்யப்படும் பிரசுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் இந்த ஜாக்கினர்.

திடல் இல்லை, அதனால்தான் திடலில் தொழுகை நடத்தவில்லை என்று ஆரம்பத்தில் கூறியவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் திடலை ஏற்பாடு செய்து அழைப்பு கொடுத்தவுடன் அவர்களுடன் சேர்ந்து ஜாக்கினரும் தொழுதிருக்க வேண்டும். அல்லது இன்னொரு திடலை ஏற்பாடு செய்து அவர்கள் அங்கு தனியாக தொழுகை நடத்திருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் ஜாக்கினர் திடல் இல்லை என்றுதான் சொன்னார்களே தவிர திடல் தொழுகையே கூடாது என்று கூறவில்லை.

ஆனால் ஜாக்கினரின் இறுமாப்பினால் அவர்களை அவர்களே பாவத்தின் பக்கம் தள்ளிச் சென்றனர். த.த.ஜ சொல்லி நாம் கேட்க வேண்டுமா என்ன? அது அல்லாஹ்வின் கூற்றாயிற்றே? அதுபற்றி எங்களுக்கு என்ன? அடப்பாவிகளா! அது நபிகளாரின் நடைமுறையாயிற்றே? அதுபற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று சொல்லும் விதமாக ஜாக்கினர் அவர்களுடைய செயல்களை அமைத்துக் கொண்டனர்.

ஜாக்கின் மாநில தலைவரான சகோ. எஸ்.கமாலுதீன் அவர்கள் பெருநாளன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குபின் 'நபிவழியில் பள்ளியில்(?!) தொழுகை நடைபெறும் அனைவரும் வாருங்கள்' என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். நபிவழியில் பள்ளியில் தொழுகை நடைபெறும் என்று அழைப்பு விடுத்த சகோ.கமாலுத்தீன் அவர்களே, மேற்கண்ட நபி மொழிகளில் பெருமானார் (ஸல்) அவர்கள் திடலில்தான் தொழுதுள்ளார்கள் என்பதற்கான உங்களுடைய விளக்கம் என்ன? தவறுகளை சுட்டிக்காட்டினால் நன்றியோடு ஏற்று அதை திருத்திக் கொள்வேன் என்று சொன்ன ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களே உங்களுடைய தலைவரின் இந்த கூற்று குறித்து உங்களின் பதில் என்ன?

உங்களுக்கு எதிரானவர்களோ அல்லது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரோ அவர்களுடைய மேனியில் சந்தனத்தை பூசிக்கொண்டால் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற கருத்து கொண்ட நீங்கள், சாக்கடையைத்தான் உங்கள் மேனியில் பூசிக் கொள்வீர்களோ? அல்லாஹ்வுடைய வாக்குக்கும், அவனுடைய தூதருடைய வழிமுறைக்கும் எதிரான கருத்து கொள்ள உங்களுக்கு துணிவு கொடுத்தவன் யார்?

கோட்டாறு ஜாக்கினருடைய மார்க்கத்திற்கு புறம்பான இச்செயலை அவர்களில் சிலரே உணர ஆரம்பித்தனர். இவர்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நபி வழிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் உயிரூட்டினர் என்றால் அது மிகையல்ல. இதை அறிந்த கோட்டாறு மக்கள் அன்றைய தினம் பெருநாள் தொழுகைக்கு பெரும் திரளாக திடலில் கலந்து கொண்டனர்.

இது கண்ட ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்கள் அன்றைய தனது பெருநாள் உரையில் பெருமானாரின் கூற்று பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

குர்ஆன் ஹதீஸை தன் பெயரிலே கொண்ட அமைப்பின் தலைவரல்லவா! என்ன சொல்லி இருப்பார்?

(இன்ஷா அல்லாஹ் விரைவில்...)

2 comments:

Unknown said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்!
நான் எந்த‌ இய‌க்க‌த்தை யும் சார்ந்த‌வ‌ன் அல்ல‌.(த‌ற்ச‌ம‌ய‌ம்)
திட‌ல் தொழுகை முத‌லில் நீங்க‌ள் தான் க‌ண்டு பிடித்து கும‌ரி இல் தொழுதீர் க‌ள் என சொல்வ‌து
பொய். திட‌ல் தொழுகை இல்லை என ஜாக் அறிவித்திருந்தால் அவ‌ர்க‌ள் அல்லாஹ் விர்க்கு ப‌தில் சொல்லி ஆக‌ வேண்டும்.
த‌வ்ஹீத் ஜ‌மா அத் அமைப்பு வ‌ருவ‌த‌ர் க்கு முன், கும‌ரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ வேர்கிள‌ம்பி ‍ இல் நான் திட‌லில் தொழுது உள்ளேன். எனக்கு தெரிந்து திட‌ல் தொழுகை யை கும‌ரி இல் கொண்டு வ‌ந்த‌து ஜாக் அமைப்பு தான். அல்லாஹ் அறிந்த‌வ‌ன்.

அன்புட‌ன்
அபூ தானிஸ் (அன்சாரி)
அழ‌கிய‌ம‌ன்ட‌ப‌ம்

Unknown said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்!
நான் எந்த‌ இய‌க்க‌த்தை யும் சார்ந்த‌வ‌ன் அல்ல‌.(த‌ற்ச‌ம‌ய‌ம்)
திட‌ல் தொழுகை முத‌லில் நீங்க‌ள் தான் க‌ண்டு பிடித்து கும‌ரி இல் தொழுதீர் க‌ள் என சொல்வ‌து
பொய். திட‌ல் தொழுகை இல்லை என ஜாக் அறிவித்திருந்தால் அவ‌ர்க‌ள் அல்லாஹ் விர்க்கு ப‌தில் சொல்லி ஆக‌ வேண்டும்.
த‌வ்ஹீத் ஜ‌மா அத் அமைப்பு வ‌ருவ‌த‌ர் க்கு முன், கும‌ரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ வேர்கிள‌ம்பி ‍ இல் நான் திட‌லில் தொழுது உள்ளேன். எனக்கு தெரிந்து திட‌ல் தொழுகை யை கும‌ரி இல் கொண்டு வ‌ந்த‌து ஜாக் அமைப்பு தான். அல்லாஹ் அறிந்த‌வ‌ன்.

அன்புட‌ன்
அபூ தானிஸ் (அன்சாரி)
அழ‌கிய‌ம‌ன்ட‌ப‌ம்