Tuesday, October 21, 2008

தனிப்பள்ளிவாசல் ஏன்?

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அத்தஹியாத்தில் விரல் அசைத்தல் தொடர்பாக வரும் ஹதீஸை கொச்சைப்படுத்தி ஜாக் கொடுத்துள்ள ஃபத்வாவிற்கு மறுப்பாக இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.

//தொழுகையில் அத்தஹியாத்தில் விரலை அசைக்க வேண்டுமா? சிலர் விரலை அசைக்காமல் நீட்டி வைக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன?//

என்ற வாசகரின் கேள்விக்கு பதிலளித்த ஜாக், அதன்மூலம் தனது அறியாமையை பட்டவர்த்தனமாக பறைசாற்றியுள்ளது.

//ஃஸஹீஹ் முஸ்லிம் பாகம் - 1 ல் நபித் தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எண் - 1016 விரல் நீட்ட பலவீனமான ஆதாரமாக உள்ளது.

அதே நபித்தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் ஹதீஸ் எண் -
1017 விரலால் சைகை செய்ய ஆதாரமாகவும் உள்ளது.

இரண்டுமே முஸ்லிம் நூலில் உள்ள ஹதீஸ்கள் தான். தொப்பி போட்டும் தொழலாம், போடாமலும் தொழலாம் என்பவர்கள் விரல் ஆட்டியும் தொழலாம், நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை.//

என்று பதிலின் ஆரம்பத்திலேயே ஜாக் குறிப்பிடுகின்றது.

சைகை செய்ய சொல்லும் ஹதீஸ்தான் ஆதாரமானது என்று அவர்களே பதிலில் கூறிவிட்டு, தொப்பி போட்டும் தொழலாம் போடாமலும் தொழலாம் என்பவர்கள் விரல் ஆட்டியும் தொழலாம் நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை என்று கூறுவது அறியாமையின் மொத்த உருவம் தான் ஜாக் என்பதை அப்பட்டமாக்குகிறது.

இந்த பதிலை அளித்தவருக்கு இபாதத்தின் அடிப்படை தெரியவில்லை என்பதை அவரே அவருடைய பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

தொப்பி என்பது ஓர் ஆடை. அதுவும் மேலதிகமான ஆடை. அதை சிலர் இபாதாவாக, அறியாமல் கருதுகின்றனர். ஆடைகளை பொறுத்தவரை நாட்டுக்கு நாடு வேறுபடும். சவுதியில் தொப்பி போட்டு, அதற்கு மேல் துணி, அதற்கு மேல் வளையம் போடுவார்கள். இது அவர்களின் கலாச்சாரம். இவ்வாறு அணிந்து தொழலாமா? என எம்மைக் கேட்டால், அணிந்தும் தொழலாம் அணியாமலும் தொழலாம் என்று தான் பதிலளிப்போம்.

ஆனால், தொழுகையில் விரல் ஆட்டலாமா? நீட்டலாமா? என்று கேட்டால், நபியவர்கள் எப்படி தொழுதார்கள் என்பதை பார்ப்போம். ஏனெனில், தொழுகை என்பது இபாதத். அந்த முக்கியமான எல்லைக்குள் நின்றுதான் தொழுகையை ஒரு முஃமின் நோக்குவான். கபடவாதிகள் எப்படி வேண்டுமானாலும் பதில் கூறத்துணிவான்! அல்குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டை மட்டும் பின்பற்றும் முஃமின் அதன் எல்லைக்குள் நின்று தான் நோக்குவான். இதன் அடிப்படையில்தான், ஆட்டியும் தொழலாம், நீட்டியும் தொழலாம் என்று மழுப்பாது, மறைக்காது, மற்றவர்களுக்கு அஞ்சாது தவ்ஹீத்வாதிகள் உண்மையை போட்டு உடைக்கின்றனர்.

விரல் ஆட்டியும் தொழலாம் நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை என்று கூறுவது அப்பட்டமான அபத்தவாதமாகும். ஏனெனில், விரல் அசைப்பது சுன்னத் என்ற போது, இதனால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப் படுகிறது என்ற காரணத்தைக் கூறியே கடுமையாக எதிர்த்தனர். ஒருவர் ஆட்டியும் மற்றவர் ஆட்டாமலும் இருந்தால் இதே நிலை தொடரவே செய்யும். ஆட்டியும் நீட்டியும் தொழலாம் என்ற மனோஇச்சையான பஃத்வாவை விட நபிவழி எது என்று நோக்குவோம்.

'நபி(ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடைமீது வைத்தார்கள். பின்பு தனது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள்.(நடுவிரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன்.'

அறிவிப்பவர் : வாயில் பின் ஹூஜைர் (ரலி)

ஆதார நூல்கள் : நஸயி -879, தாரமீ -1323, அஹ்மத் -18115, இப்னு ஹூஸைமா 354/1, இப்னு ஹிப்பான் 170/5, தப்ரானி கபீர் 35/22, பைஹகீ 310/1, ஸூனனுல் குப்ரா இமாம் நஸயீ 376ஃ1, அல்முன்தஹா இப்னுல் ஜாரூத் 62/1

//தொழுகை என்பது எல்லோரும் ஒரே சீராகச் செய்ய வேண்டிய வணக்கம். அனைவரும் ஒன்றாக நெஞ்சிலே கை கட்டுகிறார்கள். ஒன்றாகவே கையை உயர்த்துகிறார்கள். ஒன்றாகவே குனிகிறார்கள். நிமிர்கிறார்கள். ஸஜ்தா செய்கிறார்கள். ஆயினும் விரல் அசைப்பதில் மட்டும் வித்தியாசப்படுகிறார்கள்//

என்று எழுதியுள்ளார்கள். இவர்கள் கூறுவது உண்மையல்ல என்பது சாதாரண அறிவு படைத்த ஒருவரால் கூட உணர்ந்து கொள்ள முடியும். ஏனெனில், உலகம் முழுதும் உள்ள தொழுகை முறையை நாம் உற்று நோக்குவோமாயின், பல்வேறு வித்தியாசங்களை அவதானிக்க முடிகிறது. தக்பீர் சொல்லி கை கட்டுவது முதல் ஸலாம் கொடுப்பது வரை பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. எனினும் இவர்கள் விரல் அசைப்பதில்தான் வித்தியாசப்படுகிறார்கள் என்று அப்பட்டமாக முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர்.

தவ்ஹீத்வாதிகள் (குர்ஆன்,ஹதீஸை மட்டும் பின்பற்றுபவர்கள்) தக்பீர் சொல்லி நெஞ்சில் கைகட்டுகின்றனர். நபிவழியை பின்பற்றுகின்றனர். ஆனால், பித்அத்வாதிகளின் தொழுகை இதற்கு நேர் மாறாக உள்ளது. சில மத்ஹப்வாதிகள் ருகூவு செய்துவிட்டு நிமிராமல் ஸூஜூது செய்கின்றனர். ருகூவுக்கு பின் சிலர் கையை உயர்த்துவதில்லை. பின்பாஸை பின்பற்றுவோர் ருகூவுக்கு பின்னரும் நெஞ்சில் கை கட்டுகின்றனர். இவைகள் வித்தியாசமில்லையா?

அடுத்து இவர்கள் விரல் ஆட்டும் ஹதீஸை கொச்சைப் படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் விளங்கியவாறு விரலை அசைக்கின்றனர். இதில் எந்த தவறும் இல்லை. இதைவிட இவர்கள் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர்.

//தன் அருகில் பள்ளி முத்தவல்லி வந்து அமர்ந்து விட்டால் விரல் அசைவு அடக்கி வாசிக்கிறது.//

ஆரம்பத்தில் தவ்ஹீத் துளிர்விட்டபோது, அதை விளங்கியவர்கள் தொழுகையில் விரல் அசைத்ததற்காக பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார்கள். இன்றும் அதற்காக ஊர்விலக்கம், அடிதடி என பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

//நீட்டுவதே தொழுகையில் சீராக உள்ளது என்பதே என் கருத்து. விரல் ஆட்டாமல் இருந்தால் தொழுகை கூடாதா? இதனை பெரிய பிரச்சனை ஆக்கிக் கொள்ளாதீர்கள்//

//ஒருவரின் கருத்தை பிறரின் மீது திணிப்பதால் தான் உட்பூசல்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்//.

விரலை நீட்டுவதே என் கருத்து என்று சுன்னத்திற்கு மாற்றமான தன் கருத்தை திணிக்க முனைந்துவிட்டு, விரல் ஆட்டும் சுன்னத்தை மக்கள் முன் வைக்கும்போது, 'ஒருவரின் கருத்தை பிறரின் மீது திணிப்பதால்தான் உட்பூசல் உருவாகின்றன என்று தனது நபிவழி விரோதபோக்கை அப்படியே கக்கி விடுகின்றனர்.

விரல் அசைப்பது நபிவழி என்ற ஒரே காரணத்திற்காகத் தான் பலர் அந்த சுன்னாவை செய்துவருகின்றார்களே தவிர, எந்த தனிமனிதருக்காகவும் செய்யவில்லை என்பது இவர்களுக்கே தெரியும். எனினும், இதை நபிவழி என்பதில் விட்டுக் கொடுக்காமல் இருப்பவரை பார்த்து, பல்வேறு வழிகெட்ட கூட்டங்களுடன் கூட்டிணைந்து கும்மாளமிடும் ஜாக் பரிவாரங்கள், போகிற போக்கில் பி.ஜே குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான் இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்கிறார், அவர் எதை சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனக்குழப்பத்தில், குர்ஆன் ஹதீஸ் அல்லாத வேறு வழிகாட்டலும் வேண்டும் என்று இவர்கள் போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அடுத்ததாக, விரல் அசைப்பது சின்ன பிரச்சனை என்று நபிவழியை கொச்சைப்படுத்தி வரலாற்று திரிபு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

//சின்னஞ்சிறு விசயங்களுக்கு எல்லாம் சர்ச்சை செய்து வந்ததால் கொடிகட்டி பறந்த முஸ்லிம்கள் ஐரோப்பாவிலும் அதன் தலைநகர் ஸ்பெயினிலும் சிதறி சின்னாபின்னப் பட்டு அழிந்தனர் என வரலாறு சுட்டிக் காட்டுகிறது.//

இஸ்லாத்தின் சின்ன ஒரு விஷயத்தைக் கூட பின்பற்றாத நிலையில்தான் அவர்கள் சின்னாபின்னப் படுத்தப் பட்டார்கள்.
800 ஆண்டுகள் இஸ்லாத்தில் சின்னது, பெரியது என்று பாராமல் பின்பற்றிய போது ஆட்சி அவர்களிடம் இருந்தது. சின்னது தொடக்கம் பெரியது வரை விட ஆரம்பித்தபோது(அல்லாஹ்வையும் நபியின் வழிமுறைகளையும் புறக்கணித்தபோது) சீரழிந்து போனார்கள் என்பதே வரலாற்று உண்மை.

சின்ன சின்ன விஷயங்களுக்காக முஸ்லிம்கள் சின்னாபின்னப்பட்டு விட்டனர் என்று வருத்தப்படும் ஜாக், ஊர் ஊராக பள்ளிவாசல் கட்டுவது ஏன்? ஒரு ஊரில் நான்கு பள்ளி வாசல் இருந்தாலும் ஐந்தாவதாக ஒரு பள்ளிவாசலை கட்டுவது ஏன்? ஊரெல்லாம் மதரஸாக்கள் இருந்தபோதும் தனி மதரஸா உருவாக்குவது ஏன்?

ஒரு சுன்னாவை இல்லை என்று மறைப்பதற்காக எத்தனையோ உளறல்களையும் பொய்களையும் வரலாற்று திரிபு வாதங்களையும் அள்ளிக்கொட்டி தமது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது ஜாக். இது பற்றி சுட்டிக்காட்டிய பின்னும் இன்றுவரை இந்த விஷக்கருத்திலிருந்து ஜாக் பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஜே குர்ஆன்,ஹதீஸிலிருந்து ஒரு கருத்தை உள்ளது உள்ளபடி சொல்லும் போது பாய்ந்து பிராண்டும் நடுநிலை வேடதாரிகள், ஜாக் விஷயத்தில் ஏனோ வாலாட்டும் நாயாக நடந்து கொள்கின்றனர். அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழிகாட்ட போதுமானவன்.

அபூதி, இலங்கை

Monday, October 13, 2008

அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பித்அத்! -ஜாக் ஃபத்வா!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நபி(ஸல்) அவர்களின் கருத்தை பிறர் மீது திணிப்பதால் உட்பூசல்கள் உருவாகின்றன. விரலை ஆட்டாவிட்டால் தொழுகை கூடாதா? விரலை நீட்டுவதுதான் சீராக உள்ளது என்பதே என் கருத்து என்று ஜாக்கின் மாநில தலைமையகத்திலிருந்து ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி ஃபத்வா கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை ஜாக் மர்கஸின் இமாமாகவும் ஜாக்கின் மாநில பேச்சாளருமான ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி, வெளியிட்டுள்ள ஃபத்வா :

கேள்வி : தொழுகையில் அத்தஹியாத்தில் விரலை அசைக்க வேண்டுமா? சிலர் விரலை அசைக்காமல் நீட்டி வைக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன?

பதில் : ஸஹீஹ் முஸ்லிம் பாகம் - 1 ல் நபித் தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எண் - 1016 விரல் நீட்ட பலவீனமான ஆதாரமாக உள்ளது.

அதே நபித்தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் ஹதீஸ் எண் - 1017 விரலால் சைகை செய்ய ஆதாரமாகவும் உள்ளது.

இரண்டுமே முஸ்லிம் நூலில் உள்ள ஹதீஸ்கள் தான். தொப்பி போட்டும் தொழலாம், போடாமலும் தொழலாம் என்பவர்கள் விரல் ஆட்டியும் தொழலாம் : நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை.

உலகெங்கிலும் பர்ளு, சுன்னத் என்பது கூடுதல் - குறைவு இன்றி ஒரே சீராக இருக்கும். பித்அத் மட்டுமே ஊருக்கு ஊர் வித்தியாசப்படும்.

தொழுகை என்பது எல்லோரும் ஒரே சீராகச் செய்ய வேண்டிய வணக்கம். அனைவரும் ஒன்றாக நெஞ்சிலே கை கட்டுகிறார்கள். ஒன்றாகவே கையை உயர்த்துகிறார்கள். ஒன்றாகவே குனிகிறார்கள். நிமிர்கிறார்கள். ஸஜ்தா செய்கிறார்கள். ஆயினும் விரல் அசைப்பதில் மட்டும் வித்தியாசப்படுகிறார்கள். ஆட்டுவதா? நீட்டுவதா? இதில் ஏதேனும் ஒன்றுதான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்க முடியும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரல் ஆட்டி இருந்தால் எப்படி ஆட்டி இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஒருவர் வேகமாக விரல் ஆட்டுகிறார். ஒருவர் மெதுவாக ஆட்டுகிறார். ஒருவர் பக்கவாட்டி ஆட்டுகிறார். ஒருவர் வட்டமாக ஆட்டுகிறார். ஒருவர் நீட்டி மடக்கி, நீட்டி மடக்கியும் விரல் ஆட்டுகிறார். தன் அருகில் பள்ளி முத்தவல்லி வந்து அமர்ந்து விட்டால் விரல் அசைவு அடக்கி வாசிக்கிறது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரல் அசைத்திருந்தால் ஒரு முறை தான் கையாண்டு இருப்பார்கள். அது எந்த முறை? அது தெரியும் வரை நீட்டுவதே தொழுகையில் சீராக உள்ளது என்பதே என் கருத்து. விரல் ஆட்டாமல் இருந்தால் தொழுகை கூடாதா? இதனை பெரிய பிரச்சனை ஆக்கிக் கொள்ளாதீர்கள். நாட்டில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளது.

சின்னஞ்சிறு விசயங்களுக்கு எல்லாம் சர்ச்சை செய்து வந்ததால் கொடிகட்டி பறந்த முஸ்லிம்கள் ஐரோப்பாவிலும் அதன் தலைநகர் ஸ்பெயினிலும் சிதறி சின்னாபின்னப் பட்டு அழிந்தனர் என வரலாறு சுட்டிக் காட்டுகிறது. கருத்து வேறுபாடுகள் உலக இறுதி நாள் வரை இருந்தே தீரும். ஒருவரின் கருத்தை பிறரின் மீது திணிப்பதால் தான் உட்பூசல்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தவ்ஹீதிலிருந்து தடம் புரண்டு சென்றுவிட்ட ஜாக், திடல் தொழுகையில் தவறை உணர்ந்து திருந்திக் கொண்டது போல விரல் அசைப்பதிலும் தன்னை திருத்திக் கொண்டு நபிவழி நடக்க இறைவனை இறைஞ்சுவோம்.