Friday, June 13, 2008

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!


யூசுஃப் அல் கர்ளாவியை ஓர் மார்க்க அறிஞராக காண்பிக்க, மார்க்கத்தின் அடிப்படைகள் தெரியாத சில கனவுலக இயக்கங்கள் முயற்சிக்கின்றன. யூசுஃப் அல் கர்ளாவிக்கு எப்படி இஸ்லாத்தின் அடிப்படைகளும் ஒழுக்கப்பண்பாடுகளும் தெரியவில்லையோ அதேபோல அவரது விசிறிகளுக்கும் தெரியவில்லை. இவர் எழுதிய பல நூல்களில், கட்டுரைகளில் யூத, கிறஸ்தவர்களுக்கு கூஜா தூக்கும் நிலை தாராளமாக காணக்கூடியதாக உள்ளது. உலகத்தில் ஒழுக்கக்கேட்டையும் பண்பாட்டு சீரழிவையும் பரப்புபவர்களில் யூத, கிறிஸ்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களுடைய பிரதான தொழிலான இசையும் சினிமாவும் யூசுஃப் அல் கர்ளாவிக்கு ஹலாலாக தெரிகிறது.

இசையும் சினிமாவும் ஹலால் என்று தனது ஃபத்வா முஆஸிராவில் குறிப்பிடுகின்றார் இவர்.

இசை ஹலால் என்று 'அல் ஹலால் வல் ஹராம்' என்ற புத்தகத்தில் பக்கம் 391-ல் குறிப்பிடுகின்றார்.

முஸ்லிம் பெண்கள் நாடகங்கள் மற்றும் சினிமாவில் பங்கேற்பது தடையில்லை என்று குறிப்பிடுகிறார். (ஜரீததுல் அக்பார் எண் 401)

ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் வெறித்தனமான ஆடலுடன் கூடிய பாடல் காட்சிகளுடன் வெளிவரும் இன்றைய சினிமாவின் நிலையை கொஞ்சம் மனக்கண்முன் நிறுத்தி பாருங்கள்.

தொப்புளில் ஆம்லெட் போடுவதும், பம்பரம் விடுவதும், டூ பீஸ் நீச்சல் உடையுடன் பெண்களை அலையவிட்டு காமவெறியாட்டம் புரிவதும் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காண்பிக்கும் சினிமா, இவருக்கு ஹலாலாம். பணத்திற்காக முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இந்த சினிமாவில் முஸ்லிம் பெண்களும் பங்குபெறலாமாம். கிழவனைக்கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்தூண்டும் இசையையும் சினிமாவையும் ஹலால் என்பவன் உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனாக இருக்கவே முடியாது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து 'எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து, 'உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நான் விரும்பமாட்டேன்' என்று கூறினார்.அப்போது நபியவர்கள் 'நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ,அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்' என்று கூறினார்கள்.

சினிமாவையும் பாடலையும் ஹலால் என்று கூறும் யூசுஃப் அல் கர்ளாவி, தனது மகளை, மனைவியை சினிமாவில் நடிக்க அனுமதிப்பாரா? தினம் ஒரு அந்நியனோடு படுக்கையறை காட்சிகளில் முக்கால் நிர்வாணமாய் நடிக்க சம்மதிப்பாரா? அல்லது இவரை பின்பற்றும் நவீன கிலாஃபத் கோஷதாரிகளே! இஸ்லாமிய ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டுவர துடிக்கும் இரகசிய காவலர்களே! உங்கள் குடும்பத்தினரை இதுபோல் சினமாவில் நடிக்க அனுமதிப்பீர்களா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்கா விட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.
(திருக்குர்ஆன் 28:50)

8 comments:

Anonymous said...

அன்புள்ள குமரி இஸ்லாம் வலைதள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்களது வலைதளத்தில் நீங்கள் எழுதும் கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வருகின்றேன். ஆனால் நீங்கள் பலர் மீது குற்றம் சுமத்தி கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றீர்கள். குறிப்பாக பீஜேயும் அவர் இயக்கத்தவர்களும் எவற்றை வாந்தி எடுக்கின்றார்களோ அதற்கு கொஞ்சம் சென்ட் அடித்து வெளியிடுகின்றீர்கள். நீங்கள் எழுதக்கூடிய அனைத்தும் உங்கள் பார்வைக்கு சரியாகத்தோன்றலாம். அதைப்படிப்பவர்களுக்கு கூட (உன்மை எதுவென்று தெரியாததால்) சரியென்று தோன்றலாம். ஆனால் பீஜேயையும் அவர் கண்ட தவ்ஹீத் ஜமாத்தையும் ஆதரித்துக்கொண்டு இதை எழுத உங்களுக்கு தகுதியோ அருகதையோ இல்லை என்று நான் நினைக்கின்றேன். நீங்கள் எவர்களை எந்தந்த தவறுகள் இருக்கின்றது என்று குற்றம் சுமத்துகின்றீர்களோ (அது சரியோ அல்லது தவரோ) அதைவீட கேவலமான செயல்பாடுகளுக்கும் அசிங்கமான ஃபத்வாக்களுக்கும் சொந்தக்காரர்களே பீஜேயும் அவருடன் தற்போது ஒட்டிக்கொண்டு இருப்பவர்களும் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன். எனவே, உங்களுக்கு சரி என்று படுவதை உங்கள் வலைதளத்தில் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சியவராக எழுதுங்கள். ஆனால் 'ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறுகன்னுக்கு சுன்னாம்பு' என்பது போல் நீங்கள் சார்ந்திருப்பதால் பீஜேயும் தவ்ஹீத் ஜமாத்தும் நல்லவர்கள் என்பதுபோல் அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டாமல், மற்றவர்களை மட்டும் குற்றம் சுமத்துவது ஒரு முஃமினுக்கு அழகல்ல என்பது எனது கருத்து.

இந்த வசனத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்¢ இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்¢ அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்¢ நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

ஆல்குர்ஆன் - 5: 8

மேலும் பார்க்க 4:135

ஊங்கள் பதிலை எதிர்ப்பார்க்கும்

அப்துர்ரஹ்மான். சென்னை

Kumari Muslim said...

அன்பு சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு

அலைக்கும் வஸ்ஸலாம்

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

//நீங்கள் எவர்களை எந்தந்த தவறுகள் இருக்கின்றது என்று குற்றம் சுமத்துகின்றீர்களோ (அது சரியோ அல்லது தவரோ) அதைவீட கேவலமான செயல்பாடுகளுக்கும் அசிங்கமான ஃபத்வாக்களுக்கும் சொந்தக்காரர்களே பீஜேயும் அவருடன் தற்போது ஒட்டிக்கொண்டு இருப்பவர்களும் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்//

மேலே நீங்கள் குறிப்பிடுவது எந்த செயல்பாடுகள் என்றும் அசிங்கமான ஃபத்வாக்கள் எவை எவை என்றும் ஆதாரத்தோடு நீங்கள் எங்களுக்கு அனுப்பி தந்தால் அதனுடன் எங்களிடம் உள்ள ஆதாரங்களையும் சேர்த்து நீங்கள் குறிப்பிடக்கூடிய பி.ஜேயையும் அவருடன் இருப்பவர்களையும் சுட்டிக்காட்டி இடித்துரைக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம் என்பதை உங்களுக்கும் எங்கள்மீது தவறான கருத்துடைய உங்களைப்போன்ற அனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றோம்.ஆனால் நீங்கள் தரக்கூடிய ஆதாரங்கள் உண்மையானவையாகவும் வீடியோ ஆடியோ மற்றும் எழுத்துநகல்களாகவும் இருக்கவேண்டும் .அல்லாமல் வெறுமனே 'அவர் அங்கே போனார் இவர் இங்கே போனார்' என்று கூறுவீர்களானால் அத்தகைய அவதூறுகளை வெளியிட ஏராளமான வலைதளங்கள் உள்ளன.நீங்கள் சுட்டிக்காட்டிய வசனத்தின்படி அஞ்சக்கூடியவர்கள் நாங்கள்.பி.ஜேயும் அவருடன் இருப்பவர்களும் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி இடித்துரைக்க நாங்களும் ஆதாரத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்

இவண்
குமரி முஸ்லிம்

Anonymous said...

சகோதரா,

அஸ்ஸலாமு அலைக்கும்.

யூசுப் அல் கர்ளாவி சம்பந்தமாக நீங்கள் வெளியிட்டுள்ள முல நூற்களை கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். நானும் இந்த அறிஞரை (?) பற்றி நிறைய தகவல் வைத்துள்ளோன்.

Anonymous said...

மாஷா அல்லாஹ்.. மிக அருமையான பதில். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்டும். அல்லாஹ்வுக்காக செயல்படும் ஒவ்வொருவரும் நியாயமாக நடந்தால் சமுதாயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்பது எனது கருத்து. இன்ஷா அல்லாஹ் நீங்கள் கேட்டது போல் ஒவ்வொரு ஆதாரமாக உங்களுக்கு தருகின்றேன். வஸ்ஸலாம்.

அப்துர்ரஹ்மான்... சென்னை.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
நெஞ்சில் கை கட்டி தொழுவதும், இருப்பில் விரலசைப்பதும்தான் நபிகள் நாயகம் காட்டித்தந்த சுன்னத் என்பதை தெரிந்து கொண்டு விடியல் கும்பல் இன்று ஒற்றுமை என்ற போலி கோஸத்தை முன்வைத்து சுன்னத்திற்க்கு மாற்றமாக தொழுது கொண்டிருக்கிறார்கள். அதுபோல தங்களது ஆஸ்த்தான மௌலவியான கர்லாவியின் வாக்கை ஏற்று இனி இசையும், சினிமாவும் கூடும். நமக்கு தேவை ஒற்றுமைத்தான். இசை, சினிமா கூடாது என்றால் சிலப்பேர் எதிர்பார்கள். இஸ்லாத்தில் பிரிவு கொண்டு ஒற்றுமையை குலைக்கக்கூடாது என்று கர்லாவியின் பத்வாவை ஏற்றுக்கொண்டு தனது குடும்பத்தினரை சினிமாவில் நடிக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை. இதற்க்கு விடியல் கும்பல் பதில் சொல்லுமா???????????

Abdullah.R.D.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

விடியல் கும்பல் ஒரு போதும் எதற்க்கும் பதில் கூறாது. காரணம் அவர்களிடம் பதில் இல்லை. இவர்கள் மக்களை ஏமாற்றி கொண்டு திரிவது தான் இவர்களின் தொழில்.

Anonymous said...

Assalamu Alaikum
Brother Allah will question us in Aahirah about the gifts given to us. Surely he will question about r ability to use this powerful tool called internet.
It should be used to establish Deen in this earth and to spread the word of Islam not to spread rumors or backbiting about others.
Before criticising u should fully read the whole book, what circumstance he told that what is the condition of cinema there (there is a huge gap between Indian and Iran cinema - For stating this dont brand me as an Shia May Allah protect us)
Your act is like throwing stones from glass house.
Fear Allah.

Brother in faith

Anonymous said...

Dear brothers,

Don't put false allegations against vidiyal. If you have any authentic proof, post me. We will be not a silent observer. Taking one or two sentences from Yusuf al Karlavi's statement and forming your own conclusions will definetly misguide our muslim community. Don't involve in these activities. Already PJ and its associates are totally misguiding people. Try to stop them first then you can write about others.