Saturday, June 7, 2008

ஹைதர்அலிக்கு டாக்டர் பட்டம்?!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஹைதர் அலிக்கு டாக்டர் பட்டம்?!

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பெயரளவில்தான் இருக்கிறது. இது நடைமுறைபடுத்த படவில்லை. கலைஞர் முஸ்லிம்களை வஞ்சித்துவிட்டார் எனக்கூறி தமிழ்நாடு அரசு பணிகளுக்கான பணியாளர்கள் தேர்வில் முஸ்லிம்களின் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டத்திற்கு தயாரானது.

அதுபோல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தன் பங்கிற்கு இதுபற்றி தேர்வாணைய குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சரிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. மேலும் அதை தமிழக அரசு சரிசெய்யாத பட்சத்தில் சமுதாய மக்களின் மனசாட்சியை பிரதிபலிக்கும் வகையில் தமுமுக தனது நிலைபாடுகளை மாற்றிக்கொள்ள தயங்காது என்பதை அறிவித்து கொள்கிறோம். இடஒதுக்கீடு உரிய வகையில் அமுல் படுத்தப்பட வேண்டும் என்பதே தமுமுகவின் லட்சியம் அதில் சமரசம் இல்லை எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை படித்தவுடன் தமுமுக தொண்டர்கள் புளகாங்கிதமடைந்தனர். தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக தமுமுக எதுவுமே செய்யவில்லை என்று குறைகூறி கொண்டிருந்தவர்களே! இதோ பாருங்கள்! போராட தயாராகிவிட்டது எங்கள் தலைமை! என்று தொண்டர்கள் கூப்பாடு போட்டனர். அதுவும் தான் கூட்டணி வைத்திருக்கின்ற ஆளும் கட்சிக்கு எதிராக போர்பிரகடனம் செய்ய துணிந்த தமுமுகவை நடுநிலையாளர்களும் பாராட்டினர். ஆனால் அடுத்த தினம் இவர்களின் தலையில் இடி விழுந்ததுபோல் தமுமுக இணையதளத்திலிருந்த அந்த செய்தி காணாமல்போய்விட்டது.

இணையதளத்திலிருந்து அதை நீக்கிவிட்டால் மக்களுக்கு தெரியாது என தமுமுக தலைமை நினைத்துக்கொண்டது. ஆனால் சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரனாகிய அல்லாஹ் இவர்களை அடையாளம் காட்டுவதற்காக சிலரிடத்தில் அந்த செய்தியை விட்டுவைத்திருந்தான்.

காணாமல் போன அந்த செய்தி இதுதான்.


அதற்கிடையில் என்ன நடந்தது.
  • ஆளும் கட்சியால் மிரட்டப்ட்டார்களா?
  • வாரிய பதவி பறிக்கப்படும் என தகவல் வந்ததா?
  • அல்லது வழக்கமான அரசியல்வாதிகளின் பாணியில் 'நீங்கள் மௌனமாக இருந்தால் உங்களுக்கு தேவையானதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தனிப்பட்ட உபசரிப்பு நடைபெற்றதா?
என மக்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் அதை உண்மைபடுத்தும் விதமாக அடுத்த செய்தி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.
அதாவது இடஒதுக்கீடு சரிசெய்யப்படவேண்டுமென்றும் உரியமுறையில் அமுல்படுத்தப்படவேண்டுமென்றும் எழுதியவர்கள், ததஜ போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் அதற்கு நேர் மாற்றமாக, இடஒதுக்கீடு அளிக்கப்படும் முறையை பற்றி அறியாதவர்கள் இத்தகைய பொய்யைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றார்கள். கிறிஸ்த்தவர்களுக்கு மூன்றரை முஸ்லிம்களுக்கு ஒன்னரை என்று கூறி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப் பட்டு விட்டது என்று கூறுவது தவறாகும். இடஒதுக்கீடு அடிப்படையில் புதிதாக ஆட்களை வேலையில் சேர்க்கும் போதும், கல்வி நிறுவனங்களில் மாணவர் களைச் சேர்க்கும் போதும், இதேபோல் பதவி உயர்வு அளிக்கும் போதும் காலங்காலமாக கம்யூனல் ரோஸ்டர் (சுழற்சி) முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. எனவே இடஒதுக்கீடு அளவு முஸ்லிம்களுக்கு குறைக்கப்பட்டு விட்டது, துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று கூறுவது தவறாகும் என்று எழுதினார்கள், அதையும் வீடியோவாக இணையத்திலே வெளியிட்டார்கள். பின்னர் டி.என்.டி.ஜே வீரியமான போராட்டத்தை நடத்தியதால் மக்கள் இவர்களை அடையாளம் கண்டவுடன் மீண்டும் பல்டி அடித்தார்கள். இணையதளத்திலிருந்த அந்த வீடியோவும் அப்புறப்படுத்தப்பட்டது. முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் செய்த சில பணிகளில் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நாம் மறுக்கவில்லை என்று அவர்களுடைய அதிகார்வபூர்வ பத்திரிகையில் (04:44 –பக்கம் 15) எழுதி ஒப்புக்கொண்டார்கள்.

அவர்கள் அப்புறப்படுத்திய வீடியோ இது
வீடியோவை பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்

இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் ததஜ சொல்வதும் செய்வதும் தான் சரி என ஒப்புக்கொண்டு அந்த வழியில் தங்களுடைய வியூகத்தை அமைக்கிறார்கள்.

வாழ்வுரிமை மாநாடு, தஞ்சை பேரணி ஆகியவற்றை தவ்ஹீத்வாதிகள்தான் நடத்தினார்கள், பிரிவினைக்கு பிறகு தமுமுக தமிழகத்திலே இடஒதுக்கீட்டை வலியுறுத்தி எங்காவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறதா? அப்படி இருந்தால் எங்களிடம் அதை சொல்லுங்கள் என கேட்டபோது, மௌனம் காத்தார்கள். நாங்கள் டெல்லி பேரணி நடத்தினோமே என்று அறியாமையினால் சில தொண்டர்கள் சொன்னபோது டெல்லி பேரணி நடத்தப்பட்டது அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு பெறுவதற்காகத் தானே தவிர தமிழக அளவில் இடஒதுக்கீடு கேட்டு நாம் டெல்லிக்குப் படை எடுக்கவில்லை. என்று எழுதி அதுவும் தமிழக முஸ்ஸிம்களின் நலனுக்கு இல்லை என்பதை டிக்ளேர் செய்து விட்டனர். இதை இன்றும் இவர்களின் இணையதளத்தில் காணலாம்.

இப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்று பெயரை வைத்துக் கொண்டு தமிழக முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் தமுமுக, இடஒதுக்கீட்டிலுள்ள குளறுபடிகளை நீக்கிய கலைஞருக்கு, தமிழக முஸ்லிம்கள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளதாம். வேடிக்கையாக இருக்கிறது. இந்த வருடத்து சிறந்த நகைச்சுவையாக இதை தேர்ந்தெடுத்து ஹைதர்அலிக்கு பட்டம் கொடுக்கலாம். அடுத்த டாக்டர் அவர் தானே!

1 comment:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு)இடஒதுக்கீடு கோரிக்கையை வென்று எடுபதர்க்காகவே தி மு க கூட்டணியில் இடம்பெற்றது த மு மு க, வெற்றியும் கண்டது இடஒதுக்கீடும் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ் த த ஜ வும் போராட்டங்கள் நடத்தியது யாரும்
மறுப்பதர்க்கு இல்லை.இடஒதுக்கீடும் கிடைத்தது அதே சமயம் உன்னால் தான் கிடைத்தது, என்னால்தான் கிடைத்தது என்று யாரும் பெருமைப்பட அவசியமில்லை கிடைத்ததை எப்படி மக்களுக்கு பயன்பெறும் வகைகள் செய்வது என்று இருவரும் போட்டிப்போடுங்கள், அது ஆரோக்கியமாக இருக்கும்.

MUJI......DUBAI