Tuesday, June 17, 2008

வெங்காயம் நாயுடுவின் வேடிக்கை விளையாட்டு!!

கடலூர் மாநாட்டில் கனிமொழி பேசும்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகம் இன்னொரு குஜராத் மாநிலமாக மாறிவிடும், என்றார். குஜராத் மாநிலத்தில் அப்படி என்ன குறை உள்ளது. இங்காவது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அங்கு அந்த பேச்சுக்கே இடம் இல்லை. கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தான் கோவையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதுபோல், அங்கு எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லையே என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர் வெங்காயம் நாயுடு கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். நன்றி - தினமலர்.

கோவையில் குண்டு வெடிப்பு நடந்தது கருணாநிதி ஆட்சியில்தான் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. அது அப்போதைய கருணாநிதி அரசின் கையாளாகாத தனம் என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் கோவையில் குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்த பின்னணிகளை தனது சங்க்பரிவார தந்திரம் கொண்டு இருட்டடிப்பு செய்துவிட்டு வெறுமனே குண்டு வெடித்தது என்று மட்டும் சொன்னால் அது வெங்காயம் நாயுடுவின் வேடிக்கை விளையாட்டாகவே கருத முடியும். இது மீண்டும், மீண்டும் ஒரு சமுதாயத்தை குற்றப்பரம்பரையாக சித்தரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியும் ஆகும்.

கோவை கலவரத்தின் பின்னணி.

கோவையில் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் சில முஸ்லிம் பெயர்தாங்கி போக்கிரிகளால் கொல்லப்படுகிறார்.

இது ஒரு சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட கொலை போன்ற தோற்றத்தை கொடுத்து அன்றைய கோவை காவல்துறையினர் செயல்பட்டனர்.

இதை அறிந்த கோவையை சேர்ந்த அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தினரும் கொலையாளிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்போம் என்றும் வாக்களித்தனர்.

ஆனால், காவல் துறையினர் இந்து தீவிரவாதிகளோடு கைகோர்த்து கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் எதிராக கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

அந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

வீதிகளில் வைத்து இந்து தீவிரவாதிகள் முஸ்லிம்களை வெட்டினார்கள். அவர்கள் உயிருக்கு போரடிக்கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டால், மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே எதிர்பார்த்து நிற்கும் மற்றொரு இந்து தீவிரவாத கும்பல் அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி முழுமையாக அவர்களை கொலை செய்தனர்.

முஸ்லிம் பெண்கள் வீதியில் நடமாடும் போது அவர்களை இடைமறித்த காவல்துறையினர் உடையில் இருந்த சில வேசிகளுக்கு பிறந்ததுகள் 'என்னடி இரண்டு குண்டு வெச்சிருக்கே' என்று கேவலமாக நடந்து கொண்டனர். அவர்களுடைய தாய், மனைவி மற்றும் பெண் பிள்ளைகள் எல்லாம் வைத்திருந்தது வெடிகுண்டு தான் என்பது அப்பொழுது அந்த மடச்சாம்பிராணிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

சோதனை என்ற பெயரில் பெண்கள் மட்டுமே இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறல்களை கட்டவிழ்த்து விட்டனர் கோவை காவல்துறையினர்.

19 உயிர்களை பறிகொடுத்த சமுதாயத்திற்கு ஆறுதல் சொல்ல ஒரு ஓட்டு பொருக்கியும் கோவைக்கு வரவில்லை. மாறாக எங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் என்று பிச்சை கேட்காத குறையாக சென்ற முஸ்லிம் தலைவர்களை கேவலப்படுத்தி அனுப்பினார் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி.

முஸ்லிம்களின் பாதுகாவலன் என்ற போர்வையில் இருந்து கொண்டே பண்டாரம், பரதேசி என்று இவரால் விமர்சிக்கப்பட்ட வெங்காயம் நாயுடுவின் வகையறாக்களான அன்றைய இந்து தீவிரவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு முஸ்லிம்களை கொன்றொழித்தார் கருணாநிதி.

இப்படியொரு அநியாயத்தை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத சில முஸ்லிம்கள் கருணாநிதிக்கு அரசியல் ரீதியாக செருப்படி கொடுப்பதை விடவும், கோவையில் குண்டு வைப்பதே சிறந்தது என்ற தவறான முடிவை எடுத்ததாக கருதப்படுகிறது.

சட்டத்தை இப்படி கையில் எடுத்துக் கொள்வது தவறு என்று அப்பொழுதே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தது. குண்டு வெடிப்பை ஆதரிக்கின்ற ஒரு முஸ்லிம் அல்லது ஒரு முஸ்லிம் அமைப்பு கூட தமிழகத்தில் இல்லவே இல்லை.

அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகும் கருணாநிதியின் காட்டுதர்பார் அடங்கவில்லை. குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று அதில் கொஞ்சமும் தொடர்பில்லாதவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களில் பலரை நீதிமன்றம் தற்பொழுது விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தமிழக அரசும், சில இந்து தீவிரவாதிகளும், வலிமையற்ற ஒரு சமுதாயத்தின் மீது களங்கம் சுமத்தி அதிகார துஷ்பிரயோகமும், அடக்குமுறையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்டதாலேயே சிலர் உணர்ச்சிப்பூர்வமாக சிந்தித்து தவறான வழிக்கு சென்றனர்.

இவற்றையெல்லாம் மறைத்து விட்டு கருணாநிதி ஆட்சியில்தான் குண்டு வெடித்தது என்று பொத்தம் பொதுவாக போகிற போக்கில் விடுகிறார் வெங்காயம் நாயுடு. அப்பேர்பட்ட கருணாநிதியோடுதான் முந்திய நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தனர் இந்த வெங்காயம் நாயுடுவின் கட்சியான பா.ஜ.க.

இவர் சொல்வதையெல்லாம் வாய்மூடி கேட்டிருக்க இது ஒன்றும் ரவுடி மோடி பிறந்த பூமி அல்ல. பகுத்தறிவை பட்டி தொட்டியெல்லாம் பரப்பிய தந்தை பெரியார் பிறந்த பூமி.


-அறிவழகன்

5 comments:

Tmmk Kuwait Regional said...

கடலூரில் வெங்கையா நாயுடு சொன்னதை நினைவு வைத்திருக்கும் நீங்கள் பாக்கரை பற்றி பிஜெ சொன்னதை ஏன் மறந்து விட்டீர்கள். சும்மா ஜால்ரா சவுண்டு காதை கிழிக்குது. வல்லம் மாநாடு வழியாக திமுகவிற்கு நுழைய ஆயத்தமாகுகிறீர்களே. லூசுப்பய கருணாநிதி அப்படின்னு பிஜெ சொன்னது இன்னும் பதிவுகளில் இருக்கின்றது.

Anonymous said...

கருணாநிதியைப்பற்றி விமர்சிக்க அவரிடமிருந்து எதையேனும் பெற்றவர்கள்தான் பயப்பட வேண்டும். அப்படிப்பார்த்தால் வாரியம் போன்ற பதவிகளை பெற்றும், இன்னும் வேறு சில பதவிகளையும் எதிர்பார்த்து வாலட்டி நிற்கும் த.மு.மு.க போன்றவர்கள்தான் நிஜமாகவே பயப்பட வேண்டும். ஏனென்றால் பல சீட்டுக்களை கொண்ட பா.ம.க-வையே தூக்கி வெளியே போட்டுவிட்டார் கருணாநிதி. த.மு.மு.க-வெல்லாம் எம்மாத்திரம்?

த.த.ஜ-வை பொருத்தவரை யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது பயப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இடஒதுக்கீடு விசயத்தில் கருணாநிதியே ஆச்சரியப்படும் விதத்தில் காது கிழிய ரோஸ்டர் முறையில் ஜால்ரா தட்டியது ஜவாஹிருல்லாவின் த.மு.மு.க கம்பெனி என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

பாவம் உங்கள் கண்களுக்கு பி.ஜே கருணாநிதியை லூசுப்பய என்று சொன்னது மட்டும்தான் தெரிந்திருக்கிறது. அது உங்கள் கண்களில் உள்ள கோளாறு. அவர் அப்படி சொல்லும் பொழுது மேடையில் அமர்ந்து உச்சிக்கொட்டி ரசித்த எத்தனையோ துரோகிகளை சமுதாயம் இன்னும் மறந்துவிடவில்லை.

அப்படியெல்லாம் உச்சிக்கொட்டி ரசித்தவர்கள் இப்பொழுது கருணாநிதியோடு எவ்வளவு நெருக்கமாகவும், அடிமைத்தனத்தோடும் இருக்கிறார்கள் என்பதையும் சமுதாயம் மறந்துவிடவில்லை.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
குவைத் தமுமுக சகோதரர்களே, நீங்கள் கமெண்ட்ஸ் கொடுத்த பதிவுக்கு கீழே 'இராமரும் கிருஷ்ணரும் இறைதூதர்கள் தான் - டாக்.ஜவாஹிருல்லாஹ்' என்ற பதிவு உள்ளதே, அதை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ?. அதை பற்றி உங்கள் எண்ணத்தை வெளியிடுங்கள் சகோதரர்களே.... கமெண்ட்ஸ் வருமா ??????????????????????????????????????????????????????????????????????????????????????

அப்துல்லா.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

திமுகவிடம் நிரந்தர அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டு இடஒதுக்கீட்டில் திமுக எத்தனையோ குளறுபடிகள் செய்தும் அதை கண்டிக்காமல் ரோஸ்டர்,பூஸ்டர் என்று கதையளந்து ஜால்ரா அடிப்பதிலேயே உலக சாதனை புரிந்த தமுமுகவினர் மற்றவர்களை பார்த்து ஜால்ரா அடிக்கிறார்கள் என்று சொல்வதுதான் வேடிக்கை.

மக்களின் நலனுக்காக ஒரு கட்சியை ஆதரித்து பாராட்டி பேசுவதும், அது துரோகமிழைத்தால் லூசுப்பய என்று எதிர்த்து பேசுவதும்தான் சமுதாய நலனில் அக்கறையுள்ள தலைவர்களின் செயலாக இருக்க வேண்டும். அந்த செயல் சகோ.பிஜெவிடம் இருப்பதை பார்த்து நான் பெருமை அடைகிறேன். இதை எல்லாம் விடுங்கள் தமுமுகவினரே, குறைந்த பட்சம் திமுக தலைவரை, ' கருணாநிதி ' என்று பெயரை கூறி கூட்டணி கூட்டத்தில் பேசும் தைரியமாவது தமுமுக தலைவர்களுக்கு இருக்கிறதா??.

அப்துல்லாஹ்.

Unknown said...

கடலூரில் வெங்கையா சொன்னாருன்னு எங்கையா பார்த்தீர்? செய்தியை நல்லா படிங்கையா! எல்லாத்தையும் அறைகுறையா படிச்சுட்டு எதையாவது உளறவேண்டியது. அப்புறம் ஆளும் கட்சி உங்க மண்டையிலே ரெண்டு தட்டு தட்டுனப்புறம் பல்டி அடிக்கவேண்டியது. இதே பொழப்பா போச்சு உங்களுக்கு? இதுல பெருமையா ரீஜினல்னு வேற! உங்களையெல்லாம் வச்சு நம்ம டாக்டர் எப்படித்தான் நாளை ஓட்டுறாரோ!