Friday, May 30, 2008

இட ஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?

காண தவறாதீர்கள் !
இன்று முதல்!

சமுதாய சண்டை கோழிகளின் அறிக்கைபோர் மீண்டும் துவக்கம்
முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டிலுள்ள நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்பட்டு 3.5% பிரதிநிதித்துவம் கிடைக்கும் ஆணை உடனடியாக அமுலுக்கு வருகிறது.
- பத்திரிகை செய்தி
இந்த செய்தியை தொடர்ந்து இட ஒதுக்கீடு கிடைக்க யார் காரணம் என்ற தலைப்பில் ஓர் விவாதம் (கற்பனை)

இட ஒதுக்கீடு கிடைக்க யார் காரணம்?
ததஜவின் போராட்டங்களா?
தமுமுகவின் கடிதங்களா?
கலைஞரின் அரசியல் தந்திரமா?

நிகழ்ச்சி அமைப்பாளர்: பாஸ்கர்
கலந்துகொண்டவர்கள்
:தமுமுகசார்பாக ஹைதர் அலி,ஜவாஹிருல்லாஹ்
த.த.ஜ சார்பாக பி.ஜைனுல் ஆபிதீன்,எஸ்.எம்.பாக்கர்

பாஸ்கர் : கலைஞர் இடஒதுக்கீடு வழங்கியதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பி.ஜே : எல்லா புகழும் இறைவனுக்கே!
நான் நேற்று விண் டிவி லைவ் நிகழ்ச்சியில் பேசும்போது வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு லட்சம்பேரை திரட்டி சட்டசபையை முற்றுகையிடுவோம் என்று தமிழக அரசை வலியுறுதத்தி கூறினேன். விடிந்ததும் டிவியை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது.

ஜவாஹிருல்லாஹ்: ஏன் இருக்காது! விண் டிவியில் வருவது செட்டப் கேள்வி என்று ஏற்கனவே மக்கள் உரிமையில் எழுதியிருந்தோம். இது மீண்டும் அதை ஊர்ஜித படுத்தியுள்ளது. இன்று அறிவிக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவசரம் அவசரமாக அதை தெரிவித்து விட்டு நாங்கள்தான் இதற்கு காரணம் என்பதாக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்?

பாஸ்கர் : இது சண்டை போடும் இடமல்ல. உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

ஜவாஹிருல்லாஹ்: நாங்கள்தான் இதற்கு காரணம் என்று மக்களுக்கு தெரியும்.
வாழ்வுரிமை மாநாடு நடத்தியதும் தமுமுக.
தஞ்சை பேரணி நடத்தியதும் தமுமுக.

பாக்கர்: இவை இரண்டையுமே அன்றைய தமுமுக வில் இருந்த நாங்கள்தான் நடத்தினோம்.

பாஸ்கர்: விண் டிவி-ன் உங்கள் நிகழ்ச்சியில் குறிக்கிடுவதுபோல் குறிக்கிடாதீர்கள். உங்களுக்கு வாய்ப்பு வரும்போது நீங்கள் பேசலாம். இப்போது அவரை பேச விடுங்கள்.

ஜவாஹிருல்லாஹ்: டெல்லியில் வரலாறு காணாத பேரணி நடத்தினோம்.
2006-ல் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தி கோரிக்கை வைத்தோம்.அதனால் புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.
அக்டோபர் 2007-ல் புதுவையில் இரு சக்கர வாகன பேரணி நடத்தினோம்.
காரைக்கால் மாவட்ட தமுமுக தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார். இது போன்ற எத்தனை எத்தனையோ போராட்டங்களை செய்துதான் தமுமுக இந்த கோரிக்கையை வென்றெடுத்துள்ளது.

பி.ஜே: இவர்கள் இப்படித்தான் அமெரிக்க கப்பல் வந்தால் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்,ஆளும் கட்சியின் அராஜகத்திற்கு துணைபோவார்கள்.மத்திய அரசை எதிர்த்து பேரணி நடத்துவார்கள். மாநில அரசை மயிலிறகால் தடவுவார்கள். தமிழகத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உங்கள் பங்கு என்ன எனக்கேட்டால் புதுவையில் காக்கா பறந்தது. குருவி கொத்தியது என அங்கலாய்க்கிறார்கள். டெல்லி பேரணி நடத்தப்பட்டது அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு பெறுவதற்காகத் தானே தவிர தமிழக அளவில் இடஒதுக்கீடு கேட்டு நாம் டெல்லிக்குப் படை எடுக்கவில்லை.. என அவர்கள் எழுதியுள்ளது அவர்களுடைய இணைய தளத்தில் இன்றளவும் உள்ள செய்தியாகும். தமிழகத்தில் இடஒதுக்கீட்டிற்காக ஒரு துரும்பைக் கூட அவர்கள் எடுத்து போடவில்லை.

ஜவாஹிருல்லாஹ்: இவர் ஒரு மனநோயாளி என்பது சரிதான். நான் பேசுவதற்குள் அவசரப்படுகிறார்.இப்படி நாங்கள் நடத்திய இந்த வலிமை மிக்க போராட்டங்களினால்தான் கலைஞர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார். அதற்காக தமிழகமே கண்டிராத ஒரு மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை தமுமுக நடத்தியது. இவர்களுக்கு அந்த தகுதியில்லாததால்தான் 5 நாள் கழித்து முதல்வரை சென்று சந்தித்து நன்றி கூறியுள்ளார்கள்.

பாஸ்கர் : கொஞ்சம் பொறுங்கள்! ஒரு நேயர் லைனில் காத்திருக்கிறார்.இது பற்றி அவருடைய கருத்தையும் கேட்போம். ஹலோ! யார் பேசுறீங்க! எங்கேயிருந்து பேசுறீங்க!!

ஜாக் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி பேசுகிறேன்.நாங்களும் ஒரு அமைப்பை நடத்தி வருகிறோம்.எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நீங்கள் எங்களை அழைப்பதில்லை.எனவேதான் நானே உங்களை தொடர்பு கொளள்கிறேன்.

பாஸ்கர் : ஐயா! நீங்கள்தான் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களாயிற்றே!
த.த.ஜ இட ஒதுக்கீட்டிற்காக மாநாடு, பேரணிகளை நடத்திய போதெல்லாம் முஸ்லிம்கள் அதற்கு போகக்கூடாது என்று நீங்கள் உங்கள் பள்ளிவாசல்களிலெல்லாம் ஜூம்மாவில் பிரச்சாரம் செய்தவர்களாயிற்றே? எனவே தான் உங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு எதிராக நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்தும்போது உங்களை அழைக்கலாமென்றிருந்தோம்.

எஸ்.கே.: அதையேதான் நானும் சொல்கிறேன். முஸ்லிம்கள் இதிலெல்லாம் ஒன்று படக்கூடாது. போராட்டம் எல்லாம் கூடாது. உணவை தருகிறவன் அல்லாஹ். யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவனுக்கு தெரியும்? இங்கே இட ஒதுக்கீடு கிடைத்து என்ன பயன்? சொர்க்கத்தில் தான் இடஒதுக்கீடு வேண்டும்?

பாஸ்கர் : உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!
எஸ்.கமாலுதீன் மதனியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.அனைத்தையும் இறைவன்தான் தருகிறான் என்பது உண்மை. அதற்காக முயற்சி செய்யாமல் வீட்டிலே இருந்தால் இறைவன் தருவானா?

பி.ஜே: அந்த அமைப்பினர் அப்படித்தான் சொல்வார்கள். ஜனவரியில் ததஜ போராட்டம் நடத்தும்போது போராட்டம் கூடாது, ஆர்ப்பாட்டம் கூடாது என்று பேசினார்கள். அதற்கு அடுத்த மாதம் தமுமுக சிறைவாசிகளுக்காக சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய போது போராட்டம் கூடும், ஆர்ப்பாட்டம் கூடும் என்று ஜூம்மா மேடையிலேயே அழைப்பு விடுத்தார்கள். கொள்கையற்றவர்களின் கூடாரமது.

பாஸ்கர் : நிகழ்ச்சி வேறு பாதையில் செல்கிறது.உங்கள் கருத்துக்களை கூறுங்கள் திரு.ஹைதர் அலி அவர்களே!

ஹைதர் அலி: எனக்கு வாரியப்பதவியை தந்து கௌரவித்த மாண்புமிகு கலைஞர் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு வழங்கினார். ஆனால் அதிகாரிகள் செய்த குளறுபடியினால் அதை முழுமையாக பெற முடியவில்லை.எனவே அதிகாரிகள் செய்த குளறுபடிகள் சரிசெய்யப்படவேண்டும் என நானும் ஜவாஹிருல்லாஹ்வும் கலைஞரை சந்தித்து பேசினோம்.மேலும் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் இதுபற்றி நான் பேசினேன்.அது அரசு அறிக்கையிலும் வெளிவந்துள்ளது.எங்களுடைய வீரியமான இந்த போராட்டங்களால்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

பாக்கர் : உலகமே திரும்பி பார்க்கும் வகையில் கும்பகோணத்திலே மாபெரும் இடஒதுக்கீடு பேரணியை நடத்தினோம்.
அதன் காரணமாக இத்தனை காலமாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார்.அதற்காக அந்த தேர்தலிலே அவருக்கு ஆதரவளித்தோம்.ஒவ்வொரு ஊர்களிலும் இது பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினோம்.ஜூலை 4-ல் லட்சக்கணக்கானோர் குடும்பத்தோடு கலந்து கொண்ட மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினோம்.அதன் விளைவாக தமிழக அரசு இடஒதுக்கீட்டை அமுல்படுத்தியது.ஆனால் அது முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்த படவில்லை என்பதை உணர்ந்த நாங்கள், கலைஞர் அரசின் கயமைதனத்தை கடுமையாக விமர்சித்தோம். ஆனால் எதிரணியினரோ செந்சோற்று கடன் தீர்க்க அதை நியாயப்படுத்தினர்.
சென்னை பல்கலை கழக பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றாததால் ஆசிரியர்களை நியமித்தது செல்லாது என வழக்கு தொடர்ந்தோம். அதை நம் சகாக்கள் நக்கலடித்தனர்.ஆனாலும் நாங்கள் சளைக்காமல் போராடினோம்.சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த செயற்குழுவில் தீர்மானம் போட்டோம். குளிர்கால கூட்டத்தொடருக்குள் இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படாவிட்டால் குளிர்கால கூட்டத்தொடரில் மாபெரும் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்துவதாக மே 10,11 – ல் நடந்த தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் போடப்பட்டது.அதற்கான பணிகள் வீரியமாக நடந்துவரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்திருகிறதென்றால் யாரால் கிடைத்தது என்பதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை.இது பற்றி கூடுதல் விபரம் வேண்டுமென்றால் நான் உரையாற்றிய 'இடஒதுக்கீடு யாரால்?' என்ற சிடியை வாங்கி பாருங்கள். கிடைக்குமிடம் : மீடியா வேல்டு, 81,அங்கப்பநாயக்கன் தெரு,சென்னை – 600001, போண் : 9840194031

பாஸ்கர் : இடஒதுக்கீடு பற்றி இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அஹமதை தொடர்பு கொள்வோம். ஐயா! பஷீர் அஹமது இருக்கிறார்களா?

பஷீர் அஹமது: ஆமாம் நான்தான் பேசுகிறேன்.யார் நீங்கள்?
தொலைக்காட்சியிலிருந்து பாஸ்கர் பேசுகிறேன். இடஒதுக்கீடு வழங்கியது பற்றி தங்களுடைய கருத்து என்ன?

பஷீர் அஹமது: இடஒதுக்கீடா? என்ன இடஒதுக்கீடு! ரயில் ரிஸர்வேசனை சொல்கிறீர்களா?

பாஸ்கர் : இல்லை ஐயா! தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்திய விஷயம்பற்றி நீங்கள் ஏதேனும் கருத்து கூற விரும்புகிறீர்களா?

பஷீர் அஹமது: இல்லை இல்லை ஆமாம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஒருமாதகாலம் கண்டன பொதுகூட்டம் மற்றும் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

பாஸ்கர் : நன்றி ஐயா!
என்ன தலைவர்களோ தெரியவில்லை. எங்களுடைய அழைப்பை ஏற்று தகராறு செய்வதற்காக வந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.மேலும் இதுபோன்ற அடிதடி நிகழ்ச்சிகளில் நீங்கள் தொடர்ந்து பங்கெடுக்க வேண்டுமென்று உங்களை வேண்டுகின்றேன்.

6 comments:

Anonymous said...

இன்று அறிவிக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவசரம் அவசரமாக அதை தெரிவித்து விட்டு நாங்கள்தான் இதற்கு காரணம் என்பதாக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்?

அய்யா, அறிவாளி,
நேற்று நடந்த விண் டிவி நிகழ்ச்சியால்தான் இன்று கருணாநிதி அறிவித்தார் என்று ததஜ எங்கே கூறியது. ததஜவின் தலைமை சொல்லாததை கற்பனையாக கூட சொல்லாதீர்கள்.

பல லட்சம் மக்களுக்கு மத்தியல் வல்லத்தில் அவர்கள் நிறைவேற்றிய கண்டன தீர்மானம்தான் உடனடியாக கருணாநிதியை இடஒதுக்கிட்டில் ஏற்பட்ட குளருபடியை நிறைவேற்ற தூண்டியது.

அந்த பல லட்சம் மக்களின் வாக்குகளை தனக்கு சாதகமாக்கவே இத்தனை நாள் சரிகாணாத கருணாநிதி வல்லத்தில் மக்கள் கூட்டத்தை அறிந்த பிறகு சரிசெய்திருக்கிறார்.வழக்கம் போலவே தமுமுக எதையும் செய்யாமல் போஸ்டர் அடித்தும், நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியும் தங்களுக்கு வக்போர்டு கொடுத்ததற்கும், இனிமேல் வாங்கப்போகும் சீட்டுக்காகவும் நன்றி கடன் செலுத்தட்டும்.

Mohammed Ansari.

Anonymous said...

தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு சரியாக கொடுக்கப்படவில்லை அதில் சிக்கல் உள்ளது என்று தவ்ஹித் ஜமாத் கூறியபோது , ஒரு சிக்கலும் இல்லை இது ரோஸ்டர் முறை இதில் இப்படித்தான் கொடுக்க முடியும் என்றும் தவ்ஹித் ஜமாத் தலைவர்கள் விபரமற்றவர்கள் என்றும் தமுமுக தலைவர் தமிழன் தொலைக்காட்சியிலும், மக்கள் உரிமை இதழிலும் கூறினார். இவ்வாறு இவர்கள் தரம் தாழ்ந்து திமுகவின் துரோகத்தை நியாயப்படுத்தினார்கள். பிறகு முஸ்லிம்களிடம் ஏற்பட்ட எதிர்பை உணர்ந்த கருணாநிதி இடஒதுக்கீட்டில் நடைமுறை சிக்கல் உள்ளது உண்மைதான் என்று போட்டு உடைத்தார். பிறகு நமது தமுமுக அந்தர் பல்டி அடித்து நாங்கள் முதல்வரை சந்தித்தோம் இடஒதுக்கீட்டில் சிக்கல் உள்ளதை சுட்டி காட்டினோம் என்று கூறினர். இவர்கள் பொய்யை கூறி கூறி எத்தனை தடவைத்தான் அசிங்கப்பட போகிறார்களோ?. ஒரு இயக்கத்தின் பதவி ஆசை பிடித்த தலைவர்களால் அந்த இயக்கம் தேய்ந்து கொண்டு செல்வதை பார்க்கும் போது மனம் வேதனையடைகிறது.

நபீல்.

Anonymous said...

தம்பி அன்சாரி நி எப்போ த த ஜ க்கு வந்த த மு மு க வாய் பற்றி உனக்கு என்ன தெரியும் உன் கமெண்ட் எல்லாம் வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன் அடக்கிவாசி சரியா?

Mujibur Rahman

Anonymous said...

Assalamu Alaikkum,
தெருவில் இறங்கி போராடினால்தான் எதுவும் கிடைக்கும், நமக்கு வேண்டியதை கடிதம் எழுதியோ அல்லது சந்தித்த உடனேயோ நிறைவேற்ற கருனாநிதி என்ன நமது மாமனா அல்லது மச்சானா?. கருனாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தமுமுக அரசின் இடஒதுக்கீடு குளருபடியை கண்டித்து தமுமுக நடத்திய போராட்டங்கள் எத்தனை?.ஒன்றுமே செய்யாமல் ரோஸ்டர், புரோட்டா மாஸ்டர் என்று குளருபடியை நியாயப்படித்தியதுதான் தமுமுக செய்த சாதனை.

Thanks..
S.M.Basheer
smbasheertntj@gmail.com

Anonymous said...

சமுதாய சண்டை கோழிகள் என்பது தமுமுகவும், ததஜவும்தான் என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தேசியலீக்கிற்க்கும், முஸ்லீம் லீக்கிற்கும் சண்டைகள் நடக்கின்றன,

விடிலில் குலாம் முஹம்மது குருப்பிற்க்கும்,புதிய குருப்பிற்க்கும், காசிமி குருப்பிற்கும் இடையே சண்டைகள் இருந்து கொண்டு இருக்கின்றன,.

எஸ்.கே வுக்கும், சிராஜிக்கும் ஜாக்கில் பிரச்சினை இருக்கிறது.

இவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு ததஜ, தமுமுக சண்டை வெளியே தெரிவதற்க்கு காரணம் இவை இரண்டும் மக்கள் செல்வாக்கு பெற்று அதிகமான ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் ,பலமான மீடியாவையும் பெற்ற அமைப்பாகும். எனவேதான் தமுமுக, ததஜ சண்டை வெளியே தெரிகிறது.

மு.ஹீசைன்.
ரியாத்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களுடைய இதற்கு முந்தைய ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் அழகாக அமைத்திருந்தீர்கள்
இந்த கற்பனையான ஆக்கம் தேவை இல்லை என்பது எனது கருத்து காரணம் இதற்கு முன் இதுபோன்ற கற்பனை கட:டுரைகளை ஏராளமானபேர் செய்து அனுப்பி இருந்தனர் அதைப் போன்ற சாயல் இல்லாமல் சத்தியத்தைக் கொண்டுஅசத்தியத்தை முறியடிகடகட முயற்சி செய்யுங்கள்.

அபுல்ஹக்கீம்