Friday, May 23, 2008

பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு சொந்தமா?

ஏக இறைவனின் திருப்பெயரால்...

பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு சொந்தமா?
இல்லவே இல்லை எனக்குத்தான் சொந்தம் –
ஜாக் அமீர் எஸ்.கமாலுதீன் மதனி கோர்ட்டில் வாக்குமூலம்

22 பக்க தீர்ப்பின் நகல்

ஜாக் அமைப்பிற்கும் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பள்ளிவாசல் பூட்டப்பட்டபோது, பள்ளிவாசலை பூட்டக்கூடாது, எங்களுக்கு தொழுகை நடத்த பள்ளிவாசலை திறந்து தரவேண்டுமென்று ஊர் மக்கள் வழக்கு தொடுத்தனர். அப்போது ஜாக் அளித்த வாக்குமூலங்கள்

வழக்கு தொடுத்தவர்கள்:

1.மசூது

2.சேகு உதுமான் மற்றும் கடையநல்லூர் மெயின் பஜார் தெருவிலுள்ள அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் மற்றும் சந்தா உறுப்பினர்களின் பிரதிநிதிகள் நிலைமையில்.

எதிர் மனுதாரர்கள்:

1.ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் ஹதீஸ் (ஜாக்) அதன் மாநில தலைவர் கமாலுதீன் மதனி மூலம்.

2.கடையநல்லூர் மெயின் பஜார் தெரு அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் அதன் நிர்வாக கமிட்டி தலைவர் சேகு உதுமான் மூலமாக.

ஊர்மக்களின் மனுவிலிருந்து சில வரிகள்:

மனுதாரர்கள் (ஊர்மக்கள்) தங்களுக்காகவும் கடையநல்லூர் மெயின் பஜார் அல் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மற்றும் பள்ளிவாசல் சந்தா உறுப்பினர்கள் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.
மனுசொத்தாக பள்ளிவாசலில் மனுதாரர்கள் முறையாக தொழுகை நடத்தி வக்பு நோக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை யாரும் தடுக்க இயலாது என எதிர்மனுதாரர்கள் (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி )மீது விளம்புகை பரிகாரம் கோரியும் அதில் தொழுகை நடத்தி வக்பு நடவடிக்கைகளை மனுதாரர்கள் (ஊர்மக்கள்) மேற்கொள்வதை எதிர்மனுதாரர்களோ அவர்களை சேர்ந்தவர்களோ (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி )தடை செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்த பள்ளிவாசலில் மனுதாரர்கள் தொழுகை தவிர அரபி பாடசாலை, ஆன்மீக நூலகம், ரத்ததானம் நலிவுற்றோருக்கு உதவுதல் போன்ற வக்பு காரியங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிவாசல் நிர்வாகமின்றி பராமரிப்புமின்றி தொழுகை தடைபட்டுள்ளது.மனுதாரர்கள் வழக்கம்போல் நாள்தோறும் தொழுகைக்கு அனுமதிக்கப்படாமல் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் மனு சொத்தான வக்பு தொடங்கப்பட்ட நோக்கத்திற்கும் விரோதமானதாகும்.சுமார் ரூ 60,00,000 வரை செலவு செய்து கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தக்கூடாது என்பது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாகும்.
மனுதாரர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாமல் அருகிலுள்ள கட்டிடத்தின் மொட்டை மாடியில் தொழுகை செய்தும்,அரபி மதரஸா பள்ளியை அருகிலுள்ள கட்டிடங்களின் வராண்டாக்களில் நடத்தியும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.எனவே பள்ளிவாசல் ஏற்படுத்தியுள்ள வக்பு தடைபடுத்தப்பட்டு பல லட்சங்கள் மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
மனுதாரர்கள் மனுச்சொத்தான பள்ளிவாசலில் முறையாக தொழுகை நடத்தி வக்பு நடவடிக்கை மேற்கொள்வதை தடை செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று விளம்புகை பரிகாரம் கோரியும் மனுதாரர்கள் மனுசொத்தில் முறையான தொழுகை நடத்தி வக்பு நோக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்மனுதாரர்களோ அவர்களது ஆட்களோ (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி) இடைஞ்சல் செய்யக்கூடாது.......என்று மனுதாக்கல் செய்துள்ளார்கள்.

1-வது எதிர்மனுதாரராகிய ஜாக்கின் எதிர் உரையிலிருந்து சில வரிகள்:

மனுசொத்தான அல் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் கடையநல்லூரை சேர்ந்த இஸ்லாமிய மக்களின் நன்மைக்காகவும் தொழுகைக்காகவும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவைகளில் நம்பிக்கை உடைய சந்தா செலுத்தும் உறுப்பினர்களாலும் சேர்ந்து வசூல் செய்து நன்கொடை தொகையை கொண்டும் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்தும் கட்டப்பட்டதாக கூறுவது தவறானதாகும்.
(பள்ளிவாசல்களை ஜாக் ஏன் கட்டுகிறது என்பதை அறிய மேற்கண்ட ஜாக்கின் வாக்குமூலங்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.அதாவது,முபாரக் பள்ளிவாசல் கடையநல்லூரை சேர்ந்த இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக கட்டப்படவில்லையாம் இஸ்லாமிய மக்களின் தொழுகைக்காகவும் கட்டப்படவில்லையாம், குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவைகளில் நம்பிக்கை உடையவர்களுக்காகவும் கட்டப்படவில்லையாம், பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்தும் கட்டப்பட்டவில்லையாம் பின் எதற்காக எப்படி கட்டினார்கள் என்பதை இதை படிப்பவர்கள் தான் கூறவேண்டும்)

மேற்கொண்டு ஜாக்கின் வாக்குமூலங்களை படியுங்கள்:

பள்ளிவாசல் நிர்வாகம் செய்யப்படாமல் பராமரிப்பின்றியும் தொழுகை தடைபட்டுள்ளதாவும் எந்த நோக்கத்திற்காக அது அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் கூறுவது தவறானதாகும்.
மனுதாரர்கள்(ஊர்மக்கள்) மனுசொத்தில் தொழுகை நடத்த முடியாமல் அருகிலுள்ள மொட்டைமாடியில் தொழுகை செய்து அரபி மதரஸா பள்ளியை நடத்தி வருவதாக கூறுவது உண்மையல்ல.
மனுசொத்து 1-வது எதிர் மனுதாரருக்கு (ஜாக்கிற்கு) பாத்தியப்பட்டதாகும்.அதில் உள்ள கட்டுமானங்களை 1-வது எதிர்மனுதாரர்(ஜாக்)தான் கட்டினார். மனுசொத்தின் அடிமனையை வாங்குவதற்கு நன்கொடை எதுவும் வசூல் செய்யப்படவில்லை.மேலும் மனு சொத்திலும் அதில் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலுக்கும் மனுதாரர்களுக்கும்(ஊர்மக்களுக்கும்)எந்தவிதமான உரிமையும் கிடையாது.எனவே அதில் தொழுகை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளது தவறானதாகும். (ஜாக் இயக்கத்திற்கு பண உதவி செய்பவர்களே ஜாக்கின் மேற்கண்ட வாக்கு மூலங்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.மக்களிடம் வசூல் செய்யாமல் கமாலுதீன் மதனி தன்னுடைய சொந்த பணத்தில்தான் பள்ளிவாசல் கட்டினாரா? பள்ளிவாசலில் தொழுகை நடத்த ஊர்மக்களுக்கு உரிமை கிடையாதெனில் அங்கே கமாலுதீன் மதனி குடும்பம் நடத்துவதற்காகவா பள்ளிவாசல் கட்டினார்.)

மேற்கொண்டு படியுங்கள்:
மனுசொத்தின் உண்மையான உரிமையாளர்கள் ஜே.ஏ.க்யூ.ஹெச் அமைப்பு என்பதாலும் ஜே.ஏ.க்யூ.ஹெச் அமைப்பு பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பதால் அது வக்பு சொத்தல்ல என்பதாலும் மனுதாரர்கள் கோரியவாறு பரிகாரத்தை பெற தகுதிபடைத்தவர்களல்ல. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இனி 2-வது எதிர் மனுதாரராகிய நிர்வாக கமிட்டியின் எதிர்மனுவிலிருந்து சில வரிகள்:
பள்ளிவாசல் தொழுகைக்காக கூட திறக்கப்படாமல் இருப்பதற்கு 2-வது எதிர் மனுதாரர்(நிர்வாக கமிட்டியினர்) எந்தவிதமான காரணமும் கிடையாது.

2-வது எதிர் மனுதாரர் (நிர்வாக கமிட்டியினர்)பள்ளிவாசல் தொழுகையை தடை செய்யவில்லை.நீதிமன்றம் அனுமதிக்கும் விதத்தில் பள்ளிவாசல் தொழுகைக்கு ஆவன செய்திட 2-வது எதிர் மனுதாரர் நிர்வாகி என்ற முறையில் தயாராக இருக்கிறார்.எனவே இந்த மனுவை அனுமதிப்பதற்கு 2-வது எதிர் மனுதாரர்(நிர்வாக கமிட்டியினர்) ஆட்சேபனை செய்யவில்லை.

நீதிபதியின் தீர்ப்பிலிருந்து சில வரிகள்:

மனுசொத்து வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக மனுதாரர்கள்(ஊர்மக்கள்) இந்த வழக்கை வக்பு தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய உரிமை கிடையாது என்ற வாதம் ஏற்றக்கொள்ளத்தக்க விதத்தில் அமையவில்லை என்று கருதுகிறேன்.வக்பு வாரிய சட்டத்தின் கீழ் வக்புவில் அக்கறையுள்ள எந்த நபரும் வக்பு அல்லது வக்பு சொத்து குறித்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளதாலும் மனுதாரர்கள்(ஊர்மக்கள்) மனுச்சொத்தான பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கு உரிமை பெற்ற சந்தாதாரர்கள் என்பதாலும் மனுசொத்து குறித்து மனுதாரர்கள் (ஊர்மக்கள்) வழக்கை தாக்கல் செய்வதற்கு உரிமை கிடையாது என்ற வாதத்தில் வலு இருப்பதாக கருத முடியாது என்று கருதுகிறேன்.
மனுதாரர்கள் (ஊர்மக்கள்) தங்கள் மனுவில் மனுசொத்தில் உள்ள பள்ளிவாசலில் முறையாக தொழுகை நடத்தி வக்பு நோக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை எதிர்மனுதாரர்கள் (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி ) இடைஞ்சல் செய்யக்கூடாது என்று இடைக்கால உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள்.ஏற்கனவே கூறியுள்ளதிலிருந்து மனுசொத்தான பள்ளிவாசல் அதன் உபயோக தன்மை காரணமாக வக்பு என்பதும் மனுதாரர்கள்;;(ஊர்மக்கள்) தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களிலிருந்து மனுதாரர்கள்;;(ஊர்மக்கள்) அந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தி சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் என்பதும்; நிரூபிக்கப்பட்டுள்ளது.
2-வது எதிர் மனுதாரர் (நிர்வாக கமிட்டியினர்) தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர் பள்ளிவாசல் தற்போது மூடப்பட்டு தொழுகை நடத்த முடியாத நிலைமையில் இருப்பதாகவும் எனவே தொழுகை நடத்துவதற்கு தக்க உத்தரவு பிறப்பிக்கும்படியும் கோரியுள்ளார்.
மனுசொத்தில் 1-வது எதிர்மனுதாரருக்கு ( ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் ஹதீஸ் (ஜாக்) அதன் மாநில தலைவர் கமாலுதீன் மதனிக்கு) உரிமையுள்ளதா 2-வது எதிர் மனுதாரருக்கு (நிர்வாக கமிட்டியினர்) உரிமையுள்ளதா என்பது குறித்து 1-வது எதிர்மனுதாரர் 2-வது எதிர் மனுதாரர் தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில்தான் முடிவு காண முடியும்.ஆனால் மனுசொத்து ஒரு வக்பு சொத்து என்பதாலும் மனுதாரர்கள் கடையநல்லூரில் உள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவைகளில் நம்பிக்கை உடைய சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் என்பதாலும் மனுசொத்தில் அவர்கள் தொழுகை செய்து வக்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடை செய்வதற்கு எதிர்மனுதாரர்களுக்கு (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி ) எந்த விதமான உரிமையும் கிடையாது என்பது தெளிவாகிறது.எனவே மனுதாரர்கள் (ஊர்மக்கள்) கோரியவாறு மனு சொத்தில் மனுதாரர்களும் (ஊர்மக்களும்) அந்த பள்ளிவாசல் மற்ற உறுப்பினர்களும் தொழுகை நடத்தி வக்பு நடவடிக்கையை மேற்கொள்வதை எதிர் மனுதாரர்களோ (ஜாக் மற்றும் நிர்வாக கமிட்டி) அவரது ஆட்களோ தடை செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியுள்ளதில் மனுதாரர்களுக்கு (ஊர்மக்களுக்கு) முதல்நிலை வழக்கும் சமநிலை பாகுபாடும் சாதகமாக அமைந்துள்ளதாக கருதுகிறேன்.எனவே மனுதாரர்கள் (ஊர்மக்கள்) கோரியவாறு பரிகாரத்தை பெற தகுதிபடைத்தவர்கள் என்று தீர்மானித்து இந்த பிரச்சனைக்கு இவ்வாறாக தீர்வு காண்கிறேன்.

முடிவில் இந்த மனு அனுமதிக்கப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்!

கமாலுதீன் மதனி கோஷ்டியினர் எத்தகைய சூழ்ச்சிகள் செய்தபோதும் அனைத்தையும் அல்லாஹ் முறியடித்தான்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர்.அவர்களின் சூழ்ச்சி மலைகளை புரட்டக்கூடியதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அல்லாஹ்விடமே உள்ளது. (திருக்குர்ஆன் 14:46)

தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்.அல்லது அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்த விடும்.அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போதே அவர்களை அவன் பிடிப்பான்.அல்லது பயந்து கொண்டிருக்கும்போதே அவர்களை அவன் பிடித்து விடுவான் என்பதில் அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் தப்பிக்க முடியாது.உங்கள் இறைவன் இரக்கமுள்ளவன்.நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 16 : 45,46,47)

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர்.நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம் (27 : 50)
அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிதளவும் அவர்களை காப்பாற்றாது.அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 52 : 46)

திருநெல்வேலி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஜாக்கின் மோசடி வாக்குமூலங்களடங்கிய தீர்ப்பின் நகல் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.



1 comment:

ஷேக் முஹம்மது said...

இறையில்லம் யாருக்குச் சொந்தம் என தீர்ப்பு கேட்டு இறைவனின் அடிமைகள் இருவர், இறைச்சட்டத்திற்கு எதிராக மக்களால் வகுக்கப்பட்டச் சட்டங்களைக் கொன்டு தீர்ப்பளிக்கும் இறைவனை ஏற்காத, இறை மறுப்பாளரிடம் கையேந்தி நிற்கின்றனர். அவரும் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளார். அதனை எடுத்துக் கொண்டு ஒரு இறைவனின் அடிமை தனது சகோதரனான மற்றொரு இறைவனின் அடிமையைக் கேவலப்படுத்தும் நோக்குடன் தான் வெற்றி பெற்று விட்டேன்(யார் தந்த வெற்றி?) என பறைசாற்றித் திரிகின்றது.

இதனை விடக்கேவலம் இனி வேறு என்ன இருக்க முடியும்?

அடத்தூ மானங்கெட்ட மண்ணாங்கட்டிகளே!

இனிமேலும் "தௌஹீத்" என்ற ஏக இறைநாமத்தை உச்சரிக்காதீர்கள்; அதற்குச் சொந்தம் கொண்டாடாதீர்கள்; அதில் தான் இருக்கின்றோம் என மார்தட்டாதீர்கள்.

சமுதாயம் உங்கள் இரு கூட்டத்தையும் நன்றாகவே கண்டும் புரிந்தும் கொண்டுள்ளது.