Tuesday, May 13, 2008

இம்தாதிக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஒருவன் இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:48)

ரஹ்மத்துல்லாஹ் இம்தாதிக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் நிறை மற்றும் குறைகளை எடுத்து வைக்கும்போது சுட்டிக்காட்டப்பட்டவைகள் இருக்கும் அந்த மனிதர், அதை திருத்திக்கொள்வதும் அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கான விளக்கம் தருவதும் நற்பண்பாளர்களின் சிறந்த செயலாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுடைய பெயரில் எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மொத்த சாராம்சம் என்னவெனில் த.த.ஜ அமைப்பும், அதன் நிர்வாகிகளும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்பதும், த.த.ஜ-வில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இதை உணர வேண்டும் என்ற மிகச்சிறப்பான(?!) நல்ல(?!) நோக்கமாகவே கருதிக்கொள்வோம். அந்த அடிப்படையிலேயே அவர் கீழ்கண்டவாறு கூறியிருப்பதை காண்போம்..

ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்தி கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள்.

மேற்கண்ட அவருடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். த.த.ஜ-வை சார்ந்தவர்கள் நிச்சயமாக ஷைத்தானின் அடிமையாக இருக்க முடியாது என்பதை நிரூபிப்பதற்கு வாய்ப்பளித்த அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறோம். அதனடிப்படையிலே இங்கு சிறு விளக்கத்தையும் பதிவு செய்கிறோம். த.த.ஜ உறுப்பினர்களாகிய நாங்கள் எங்கள் அமைப்பையோ, அதன் நிர்வாகிகளையோ தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக கருதவில்லை. அப்படி கருதக்கூடிய சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் எங்களுடைய நிலையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம், இன்ஷா அல்லாஹ்.

தமிழகத்தில் எத்தனையோ அமைப்புக்கள் இருக்க, பெரும்பாலானோர் ஏன் த.த.ஜ-வை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற வயிற்றெரிச்சலுடன் கூடிய கேள்வி உங்களைப் போன்றவர்களுக்கு அடிக்கடி எழுந்து விடுகிறது. அதன் வெளிப்பாடாகவே சில நேரங்களில் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைப்போல் செயல்பட்டு புழுதி வாறி தூற்றி திரிகிறார்கள். மற்ற அமைப்புக்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருப்பதுபோல், ஏன் த.த.ஜ-வை தேர்ந்தெடுத்தோம் என்பதற்கும் பல காரணங்கள் உண்டு. அதில் சில...



த.த.ஜ குர்ஆன் மற்றும் சுன்னாவை தூய்மையான முறையில் எடுத்தியம்பக்கூடிய இயக்கம்.

த.த.ஜ அறிஞர்களால் கடந்த காலங்களில் மார்க்கத்தை ஆய்வு செய்து சொல்லப்பட்ட செய்தி பிற்காலங்களில் தவறு என்று தெரிய வரும்பொழுது எந்தவித கூச்சமும் இன்றி மக்கள் முன்னிலையில் போட்டுடைப்பது.

யாருக்காகவும், எதற்காகவும் மார்க்கத்தை வளைக்காத பிடிமானம்.

அரசியல் பிரமுகர்களின் தயவுக்காக சமுதாய பிரச்சனைகளில் சமரசம் செய்து கொள்ளாத போர்க்குணம்.

பொருளாதாரத்தில் தூய்மை.



இதுபோல் இன்னும் பல விசயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சுருக்கமாக சொல்லப்போனால் த.த.ஜ-வில் இருக்கக்கூடிய சிற்சில தவறுகள் பல அமைப்புகளில் இருக்கக்கூடியது. ஆனால் த.த.ஜ-வில் இருக்கக்கூடிய குர்ஆன் மற்றும் சுன்னாவை உள்ளடக்கிய நற்பண்புகள் மற்றும் செயல்பாடுகள் தமிழகத்தில் வேறு எந்த அமைப்பிடமும் காணக் கிடைக்கவில்லை.

இது யாருடைய வயிற்றெறிச்சலிலும் பெட்ரோல் ஊற்ற வேண்டும் என்பதற்காகவோ, அல்லது சில மனநோயாளிகளின் மனநோயை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ சொல்லப்படவில்லை. இது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது, அதனால்தான் பெரும்பாலான மக்கள் த.த.ஜ-வை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இப்பொழுது விசயத்திற்கு வருவோம். ஆதாரங்களுடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்தி கொள்வேன் என்று சொல்லியுள்ள சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள், தான் எடுத்து வைத்த எந்தவொன்றுக்கும் ஆதாரத்தை முன் வைக்கவில்லை என்பதை இங்கு நினைவில் வைப்போம். அவர் தொடர்பாக சில ஆதாரங்களுடன் இங்கு சுட்டிக்காட்டப்படும் தவறுகளை அவர் திருத்தி(ஒப்பு)க்கொண்டு ஷைத்தானின் அடிமைகளில் ஒருவராக இல்லாமல் இருந்தால் அதுவே அனைவருக்கும் மகிழ்ச்சியாகும்.

சுட்டிக்காட்டல் - 1 (இப்போதைக்கு)

குர்ஆனும் சுன்னாவும்தான் எங்கள் கொள்கை என்று பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் மட்டும் கூறிக்கொள்ளும் ஜாக் என்ற அமைப்பு குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் எதிரான செயல்களில் எப்படி ஈடுபட்டு வருகின்றதோ அதுபோலவே ஓட்டுரிமை கூடாது, போராட்டம் கூடாது, அரசியலில் ஈடுபடக்கூடாது என்று பேச்சிலும், எழுத்திலும் கூறிக்கொண்டு இருந்ததை அனைவரும் அறிவர். அதற்கு முரண்பாடாக அரசியல்வாதிகளை ஆட்சியில் அமர்த்த பிரச்சாரங்கள் செய்ததும், ஃபித்னா ஏஜண்ட் ஃபஸ்லுல் இலாஹியை எம்.எல்.ஏ பதவியில் அமர்த்த மேலப்பாளையத்தில் ரோட்டில் இறங்கி போராட்டம்(!?) நடத்தியதும் அனைவரும் அறிந்த கதையே.

ஆரம்ப காலத்தில் தமுமுக வில் சேருவது ஹராம் என்று ஃபத்வா கொடுக்காத குறையாக விமர்சித்துக் கொண்டிருந்த அதே ஜாக், கடந்த தேர்தலில் தமுமுகவுடன் சேர்ந்து கொண்டு அரசியல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்ததும் அனைவரும் அறிந்தது.



அதன் வரிசையில், கடையநல்லூரில் தமுமுக-வின் மேடையில் ஜாக்கின் மாநில செயலாளரான கோவை.அய்யூப் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளரான பீட்டர் அல்போன்ஸூக்கு வாக்களியுங்கள் என்று ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது முன்வரிசையில் இருந்து அதை ரசித்து ருசித்து கொண்டிருந்தவர்தான் நம்ம கடையநல்லூர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.

கோவை அய்யூப் அவர்களின் பிரச்சாரத்தை ரசித்த அதே ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு பின்பு கன்னியாகுமரியில் நடந்த ஜாக் பொதுக்கூட்டத்தில் என்ன சொன்னார் தெரியுமா? தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன் என்று குழந்தை போல் கூறும் இம்தாதி அவர்களே! என்ன சொன்னீர்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா?

கடந்த ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதற்காக ஆணையம் அமைத்ததை சுட்டிக்காட்டி அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்து, ..இவர்கள் தவ்ஹீத், தவ்ஹீத் என்று கூறிக்கொண்டு எங்கே சென்றுவிட்டார்கள் பார்த்தீர்களா? அரசியல்வாதியை ஆட்சியில் அமர்த்த துடிக்கிறார்கள்.. என்று த.த.ஜ-வை கடுமையாக சாடினார்.

ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களே.. கோவை அய்யூப் அரசியல்வாதி அல்லாமல் வேறு யாரை ஆட்சியில் அமர்த்த கடையநல்லூரில் பிரச்சாரம் செய்தார்? யாருக்காக என்று நினைத்து நீங்கள் முன்வரிசையில் அமர்ந்து ரசித்தீர்கள்? ஊருக்கொரு கொள்கை! தெருக்கொரு முகமூடி!! நீங்கள் கன்னியாகுமரியில் கூறியதற்கான நேரடி ஆதராங்களை வைக்கவில்லை என்பதற்காக பொய் கூறி பாவத்தை சம்பாதித்து விடாதீர்கள். மேலே குறிப்பிட்டுள்ள திருமறை வசனத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்ததற்காகவும், ஆட்சிக்கு வந்தால் ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறை படுத்துவோம் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிக்காகவும் அந்த தேர்தலில் மட்டுமே அ.தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டும் என்று த.த.ஜ பிரச்சாரம் செய்தது.

சகோ.கமாலுத்தீனை தலைவராக கொண்ட ஜாக்-கும், வாத்தியார் ஜவாஹிருல்லாவை தலைவராக கொண்ட த.மு.மு.க-வும், தி.மு.க-விடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது போல் மௌலவி பி.ஜைனுல்ஆப்தீன் அவர்களை தலைவராக கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.தி.மு.க-விடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. மாமிச வெறியன் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கொடுத்த விருந்தை கண்டித்து த.த.ஜ கண்டன ஆர்பாட்டம் செய்ததை இதற்கு ஆதாரமாக நினைவு படுத்தி கொள்ளுங்கள்.

தி.மு.க என்ன செய்தாலும், அது எதுபோன்றொதொரு அநீதி இழைத்தாலும் தி.மு.க-வையே ஆதரிப்போம் என்று எழுதப்படாத அடிமை சாசனத்தை ஜாக்-கும், த.மு.மு.க-வும் எழுதிக் கொடுத்தது போல் த.த.ஜ எழுதிக் கொடுக்கவில்லை.





எங்கள் இயக்கத்தவரை வேட்பாளராக்குங்கள் என்று ஜாக் நடத்தியது போன்ற அடவாடித்தனத்தை த.த.ஜ ஒருபோதும் செய்ததில்லை.


3.5 சதவிகித இடஒதுக்கீட்டை ஏட்டளவில் கொடுத்துவிட்டு நடைமுறையில் அல்வா கொடுத்த கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி பேசிய வாத்தியார் ஜவாஹிருல்லாவை போல், மௌலவி பி.ஜைனுல்ஆப்தீன் சமுதாயத்திற்கு துரோகம் செய்யவில்லை.

ஜாக்கின் துணைதலைவரான ஏர்வாடி சிராஜ் தற்பொழுது கவுன்சிலராக இருப்பதுபோல் த.த.ஜ-வில் எவரும் கவுன்சிலர் பொறுப்பில் இல்லை.





இம்தாதி அவர்களே! இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். ஆகவே, மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும் உங்களுடையதும், நீங்கள் சரி காணும் ஜாக் மற்றும் த.மு.மு.க-வினரின் தவறுகள் என்று நீங்கள் கருதினால் உங்கள் தவறுகளுக்காக வருந்தி ஏக இறைவனிடம் மன்னிப்புக்கோரி துஆ செய்யுங்கள். அப்படியே மக்களுக்கும் அதை தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் நீங்கள் குறிப்பிட்டதுபோல் தவ்ஹீத்வாதிகள் அனைவரும் மீண்டும் ஒற்றுமையாக கை கோர்த்து செயல்பட ஏதுவாக இருக்கும்.

ஆதாரங்கள்

1) கடையநல்லூரில் கோவை.அய்யூப் அரசியல் பிரச்சாரம்.

2) மேலப்பாளையத்தில் ஜாக் போராட்டம்.

3) பத்திரிகை செய்தி.

4) ஜாக்கின் துணைதலைவர் ஏர்வாடி சிராஜ் கவுன்சிலராக நின்றபோது வெளியிடப்பட்ட நோட்டீஸ்.

4 comments:

Anonymous said...

test...

Anonymous said...

ராமகோபலனின் கனவுகள் நினைவாக போகிறது... ராமகோபாலன் சொன்னது போலே... நாம் ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்... அவர்களே விரைவில் மோதிக்கொள்வர்கள்...! நம்மிடைய பிளவுகளை உருவாக்க இருப்பவர்களுக்கு நாமே வழி காட்டும் நேரம் வந்து விட்டது...

Irai Adimai said...

உங்களின் இந்தப் பதிவு மிகவும் வேதனை அளிக்கிறது.நம்மை பற்றி யாரவது ஏதேனும் குறை சொன்னால் உடனே அதனை சரி செய்வதை விட்டுவிட்டு நாங்கள் மட்டும் தவறிழைக்க வில்லை எல்லாரும் தானே தவறு செய்கிறார்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ABU NOORA said...
This comment has been removed by the author.