Thursday, January 3, 2008

கணினியில் வேலை செய்தால்... இதய நோய், ரத்த அழுத்தம்

ணினி முன்பு அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கணினியில் அமர்ந்து வேலை பார்ப்பதால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. முதுகு வலி மற்றும் கழுத்து வலிகளும் இலவசமாக கிடைக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது இந்த பட்டியலில் இதய நோய் மற்றும் ரத்த அழுத்தமும் சேர்ந்துள்ளது.

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.ராமநாதன், இருதய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் என்.சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அவர்கள் பேசுகையில், முன்பு தொற்றுநோய்களால் அதிக மக்கள் உயிரிழந்தனர். ஆனால் இப்போது அந்த நிலைமாறி மாரடைப்பு மற்றும் விபத்துக்களில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதய நோய் அல்லது மாரடைப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் தொப்பை, உடற்பயிற்சி செய்யாமை, கொழுப்பு உணவு வகைகளை உண்ணுதல், பாஸ்ட் புட் நாகரீகம், புகை பிடித்த, மன அழுத்தம் ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும் 45 வயதுக்கு மேல் தான் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் கணினி முன் அதிகநேரம் வேலைபார்ப்பவவர்களுக்கு 35 வயதில் இந்த நோய்கள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனால் கணினியில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டாம் என்று கூறவில்லை. கணினியில் வேலை பார்ப்பவர்கள் நல்ல உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றில் ஈடுபடவேண்டும். உணவுக் கட்டுப்பாடும் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments: