Wednesday, July 16, 2008

இளம்பெண்ணை கடத்திய வழக்கில் த.மு.மு.க பிரமுகர் கைது

நம்நாட்டு ஊடகங்கள் முஸ்லிம்களின் செய்தி என்றால் மிகைப்படுத்தி போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தினத்தந்தியில் வெளியான கீழ்கண்ட இச்செய்தியும் ஊடகங்களின் மிகைப்படுத்தலாகவே இருந்தால் அது மிக்க நன்று.


தினத்தந்தி


திருவாரூர், ஜூலை 13

கூத்தாநல்லூரில் இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கடத்த முயற்சி
கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் ரோட்டை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சங்கீதா (வயது 22). இவர் நேற்று முன்தினம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.காம் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க திருவாரூர் வந்தார். பின்னர் விண்ணப்பம் வாங்கியவுடன் பஸ் ஏறி கூத்தாநல்லூர் வந்துள்ளார். லெட்சுமாங்குடி பஸ் நிறுத்தத்தில் சங்கீத இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் ஜெகுபர் அலி (30). இவர் த.மு.மு.க. பிரமுகர். இவரது நண்பர் சாதிக் ஆகிய இருவரும் ஒரு காரில் பின் தொடர்ந்து வந்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு நடந்து சென்ற சங்கீதாவை வழிமறித்து முன்னால் காரை நிறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த சங்கீதாவின் கையை பிடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்த முயற்சி செய்துள்ளனர்.

த.மு.மு.க பிரமுகர் கைது

இதற்குள் சுதாரித்துக் கொண்ட சங்கீதா சத்தம் போட்டு கத்தினார். உடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளனர். இதனை பார்த்த ஜெகுபர் அலி சங்கீதாவை மிரட்டிவிட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி தப்பித்து சென்றுவிட்டார்.

இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் சங்கீதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து ஜெகுபர் அலியை கைது செய்து, கடத்த முயன்ற காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாதிக்கை தேடி வருகின்றனர்.


No comments: