Sunday, July 27, 2008

கடவுள் ஏன் வரவில்லை?

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஒரு நில பிரச்சனை தொடர்பான வழக்கு மூன்று ஆண்டுகளாக கோர்ட் மாறி கோர்ட் மாறி நிலுவையில் இருந்து வருகிறது. விரைவு கோர்ட்டுக்கு பிரச்சனை வந்தும் தீர்வு கிடைக்கவில்லை.

சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் ஆஜராகாததுதான் வழக்கு இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம்.
ஆஜராகாத அவர்கள் : கடவுள் ராமரும் மகாவீரும் தான் !

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் தான் இந்த கூத்து அரங்கேறி உள்ளது. தன்பாத் மாவட்டத்தில் உள்ளது தய்யா கிராமம். இங்கு ராமர் கோவில் உள்ளது. அங்கு மகாவீர் சிலையும் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. இந்த கோயிலையும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தையும், இந்த கிராமத்தை சேர்ந்த பார்வதி தேவி என்பவர் நிர்வகித்து வந்தார்.

தய்யா கிராமத்து மக்கள் புரண் சந்திர ஹல்தர் தலைமையில் சப் - ஜட்ஜ் கோர்ட்டில் கோவிலையும் கோவில் நிலத்தையும் பொது சொத்தாக அறிவிக்கக்கோரி மனு செய்தனர். வழக்கில் பிரதிவாதிகளாக தன்னையும் ராமர், மகாவீர் ஆகியோரையும் சேர்த்து விட்டார் ஹால்தார். இந்த வழக்கில், கோவிலையும் கோவில் நிலத்தையும் பொது சொத்தாக அறிவித்து உத்;தரவிட்டது சப் - ஜட்ஜ் கோர்ட். இதை எதிர்த்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் பார்வதி தேவி. வழக்கில் எதிர்வாதிகளாக கடவுளர்களையும், ஹால்தாரையும் சேர்த்திருந்தார்.

இந்த வழக்கு விரைவு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. விரைவு கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராமர், மகாவீர், ஹால்தார் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

பதிவுத்தபாலில் வந்த நோட்டீஸில் இருந்த முகவரியில் ராமரோ மகாவீரோ இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.எனவே நோட்டீஸை அனுப்பிய கோர்ட் அதிகாரி ஸ்ரீராம் குமார், கோர்ட்டிடம் ராமர் மற்றும் மகாவீர் ஆகியோரின் முழு முகவரியை தெரிவிக்கும்படி கோரினார். ஆனால், கோர்ட்டுக்கு எப்படி கடவுளர் வசிக்கும் முகவரி தெரியும்?
எனவே, கோர்ட் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது. கோர்ட் உத்தரவுப்படி, நாளிதழில் வெளியான விளம்பரம் தான் உச்சக்கட்ட காமெடி.

நாளிதழில் வெளியான விளம்பரம் இதுதான்:

கடவுளர் ராமர் மற்றும் மகாவீர் ஆகியோருக்கு தெரிவிக்கப்படுதல் யாதெனின்,
உங்கள் மீது கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் உங்களுக்கு, இந்த கோர்ட்டில் ஆஜராகும்படி உங்களது முகவரிக்கு பதிவுத்தபாலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நீங்கள் ஆஜராக தவறிவிட்டீர்கள். எனவே, இந்த நாளிதழின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கப்படுவது யாதெனின், 22ம் தேதி காலை 10.30 மணிக்கு நீங்கள் இருவரும் இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்படுகிறது. தவறினால், இவ்வழக்கில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்க நேரிடும்.

இதுதான் நாளிதழில் வெளியான விளம்பரம்.
விளம்பரம் வெளியிட்ட பிறகும், ராமர், மகாவீர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது சூப்பர் காமெடி.
நன்றி : தினமலர்

No comments: