Wednesday, July 16, 2008

முஸ்லிம் மாணவிகளுக்கு அபராதம்

ஏக இறைவனின் திருப்பெயரால்..


கல்வி பயிலும் மாணவர்களும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் முறையான காரணங்கள் இன்றி விடுப்பு எடுத்துக்கொண்டு கேளிக்கையான விசயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், பள்ளி அல்லது விடுதி நிர்வாகம் அவர்கள் மீது சில ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பது பரவலாக நடைமுறையில் இருந்து வருகிறது. சில நேரங்களில் நிர்வாகம் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதும் நடைமுறையில் இருந்து வருகின்ற ஒன்று.

அதுபோன்றதொரு வகையில் குமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் ஜாக் தலைவர் கமாலுதீன் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கதீஜத்துல் குப்ரா பெண்கள் அரபிக் கல்லூரியின் நிர்வாகம் அங்கு இருக்கும் சில மாணவிகள் மீது 200 ரூபாய் அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் அவர்கள் மீது அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு, அந்த மாணவிகள் அப்படி என்னதான் தவறிழைத்து விட்டார்கள் என்று கேட்பவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் கேளிக்கையான விஷயங்களிலோ அல்லது இன்னபிற மார்க்கத்திற்கு புறம்பான விஷயங்களிலோ கலந்து கொண்டதால் இந்த அபராதம் அவர்கள் மீது விதிக்கப்படவில்லை.

கடந்த மே 10 மற்றும் 11 தேதிகளில் தஞ்சை வல்லத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் அவர்கள் கலந்து கொண்டதனாலேயே அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஜாக் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் அரபிக்கல்லூரி நிர்வாகம். இது பற்றிய விஷயத்தை வெளிப்படையாக யாரிடமும் சொல்ல முடியாமல் அம்மாணவிகள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏனெனில் இது தொடர்பாக யாரும் வாய் திறந்தால் வகுப்பில் தேர்ச்சி பெற விடாமல் தடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் மாணவிகள் கவலை அடைந்துள்ளனர்.

குமரி மாவட்ட (ஜாக் அல்லாத) தவ்ஹீத் சகோதரர்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் பல்வேறு இடையூறுகளை ஜாக் தொடர்ந்து செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மார்க்க மற்றும் சமுதாய நலனுக்காக ஏதாவது செய்ய திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளாக பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுதெல்லாம் அப்பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதை தனது முழு நேர கடமையாக ஜாக் செய்து வருகிறது. அதற்காக தான் முன்பு ஹராம் என்று சொன்ன தமுமுக-வோடும் கைகோர்த்து செயல்படுவதில் அவர்களுக்கு எவ்வித கூச்சமுமில்லை, வெட்கமுமில்லை. ஆனால், மானங்கெட்ட ஜாக்கினர் த.த.ஜ-விற்கு எதிராக செய்யும் இடையூறே பல தருணங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை பிரச்சாரமாக மாறிவிடுகிறது. மாறியும் இருக்கிறது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

உதாரணத்திற்கு தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடத்துவதற்காக பல விதத்திலும் த.த.ஜ பிரச்சாரம் மேற்கொண்டபோது இந்த ஜாக்கினரும், தமுமுகவினரும் சேர்ந்து பல்வேறு துவேச, அவதூறு பிரச்சாரங்களை வழக்கம்போலவே செய்தனர். அதையும் இறைவன் வழக்கம் போலவே முறியடித்து மாபெரும் மக்கள் வெள்ளத்தை குழுமச்செய்து மாநாட்டை வெற்றி பெறச்செய்தான்.

அல்லாஹ்வுடைய பள்ளியை தங்களுடைய சொத்தாக கோர்ட்டில் வாதாடிய சகோ. கமாலுதீனின் ஜாக் அமைப்பினர், ஜூம்மா மேடைகளை தங்களுடைய ஃபித்னா கூடாரமாக ஆக்கிய சகோ. கமாலுதீனின் ஜாக் அமைப்பினர், அல்லாஹ்வின் தூதர் உணர்ச்சி பூர்வமாய் உரையாற்றிய அந்த மிம்பர் மேடையை பயன்படுத்தி பிறர் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்த இந்த ஜாக்கினரின் எந்த ஒரு பிரச்சாரமும் எடுபடாததாலேயே ஜாக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியின் மாணவிகளிலிருந்து ஆலிமாக்கள் வரை வல்லம் மாநாட்டிலே கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

நாம் இவ்வளவு சிரமப்பட்டு ததஜ நடத்தும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டை தோல்வியுற முயற்சி செய்து கொண்டிருக்கும் போது நமது கட்டுப்பாட்டில் இருக்கும் மாணவிகளும், ஆலிமாக்களுமே அந்த மாநாட்டிற்கு சென்றுள்ளனரே என்று சகோ.கமாலுதீன் அவர்களுக்கு கோபம் கொப்பளித்திருக்கிறது. அதனாலேயே மாநாட்டிற்கு சென்ற கதீஜத்துல் குப்ரா கல்லூரி மாணவிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்.

மார்க்கம் அனுமதித்த வகையில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு சென்றதற்காக இம்மாணவிகளுக்கு அபராதம் விதித்த சகோ.கமாலுதீன் அவர்கள், இஸ்லாம் வெறுத்து ஒதுக்கிய, மன்னிப்பே இல்லாத மாபெரும் குற்றம் என்று இறைவனால் எச்சரிக்கப்பட்ட ஷிர்க்கான காரியத்தில் ஈடுபட்ட மலுக்கு முதலிக்கு என்ன அபராதம் விதித்தார்? இனி வரும் காலங்களில் சந்தர்ப்பவாதம் என்று சொல்வதற்கு பதிலாக சகோ.கமாலுதீன் மதனி என்று சொல்ல வேண்டும். அந்தளவிற்கு இப்படியொரு இழிவான நிலைக்கு தங்களை தாங்களே ஜாக்கினர் தள்ளிச்செல்கின்றனர் என்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
அதேபோல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம்களெல்லாம் தயாராகி கொண்டிருந்த காலத்தில் இந்த ஜாக் வகையறாக்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தனர். அல்லாஹ்வுடைய பள்ளியை எங்களின் சொத்து என்று சற்றும் அச்சமில்லாமல் வாதாடும் இந்த மானங்கெட்ட ஜாக்கினர் தங்களது ஜூம்மா மேடைகளை த.த.ஜ நடத்தும் உரிமை மீட்பு பேரணிக்கு எதிர்ப்பு கோசமிடும் களமாக மாற்றி துவேச பிரச்சாரம் செய்தனர்.
  • காஃபிர்களிடம் கோரிக்கை வைக்கலாமா?
  • ஒரு முஸ்லிம் இட ஒதுக்கீடு கேட்கலாமா?
  • உணவளிப்பவன் அல்லாஹ், யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவனுக்கு தெரியாதா?
  • போராட்டம் செய்யலாமா?
  • இஸ்லாத்தில் ஆர்ப்பாட்டம் கூடுமா?

என்றெல்லாம் பள்ளிகள் தோறும் எஸ்.கே உட்பட ஜாக் தாயிகள்! அனைவரும் பிரச்சாரம் செய்தனர். (ஆதாரம் உண்டா என்று கேட்டு விடாதீர்கள். கூடை,கூடையாக ஆதாரம் உள்ளது. அதை அள்ளி கொட்டினால் அதுவே நூறு பக்கங்களை தாண்டும்). ஆனால் அவை அனைத்தையும் மீறி ஏராளமான குமரி மாவட்ட மக்கள் அந்த உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொண்டனர். குறிப்பாக சொல்வதென்றால், ஜாக் ஆலிம்கள், ஆலிமாக்கள் மற்றும் தமுமுகவின் மாநில நிர்வாகிகளை இன்னும் நல்லவர்களாக எண்ணும் தமுமுகவின் சில நல்ல மாவட்ட,கிளைத்தலைவர்கள் எல்லாம் கூட அந்த உரிமை மீட்பு பேரணியிலே சாரை சாரையாய் கலந்து கொண்டனர்.

ஜாக்கின் பெண் பிரச்சாரகரான ஒரு ஆலிமா (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்) ததஜ நடத்திய முஸ்லிம்களின் உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொண்டதற்காக கதீஜத்துல் குப்ரா பெண்கள் அரபி கல்லூரியின் முதல்வரும், கோட்டாறு அஷ்ரஃப் பள்ளியின் இமாமுமான செய்யதலி ஃபைஸி என்பவரால் கடுமையாக வசைபாடப்பட்டார். அந்த ஆலிமாவின் வீட்டிற்கே சென்று செய்யதலி ஃபைஸி இந்த வசைபாடலை பாடினார் என்றால் எந்தளவிற்கு இவர்கள் துவேசத்தை கையாளுகிறார்கள் என்பதை விளங்க முடியும். மேலும், அஷ்ரஃபியாக்கள் பேரவையில் இருந்து அந்த சகோதரியை நீக்கவும் முடிவு செய்தனர். அந்த தருணத்தில் நடந்த மார்க்க விளக்கக் கூட்டத்திலும் அந்த சகோதரி உரையாற்ற தடுக்கப்பட்டார்.

செய்யதலி ஃபைஸி.!

யார் இவர்? யாருக்கும் தெரியாது. யாரென்றே அறியப்படாமல் இருந்தவர். சகோ. பி.ஜே அவர்களால்தான் நான் தவ்ஹீதை விளங்கி கொண்டேன் என வெளியே சொல்லிக்கொண்டவர். பிறகு பி.ஜே-யை திட்டுவதாலேயே பிரபலமடைந்தவர். அப்பேர்பட்ட தளபதி தற்போது வகிக்கும் பொறுப்புகள்:

1) அஷ்ரப் பள்ளியில் இமாம்

2) கதீஜத்துல் குப்ரா மகளிர் கல்லூரியில் முதல்வர்

3)ஃபிர்தவ்ஸியா கல்லூரியில் பேராசிரியர்

4) அல் ஜன்னத் இதழின் தொகுப்பாசிரியர்

5) ஜாக்கின் மாநில துணை தலைவர்



பி.ஜே-யை திட்டுவதாலும் அவர்மீது அவதூறு கூறுவதாலும் மட்டுமே சகோ.கமாலுதீனை திருப்தி படுத்த முடியும் என்ற தந்திரத்தை ஜாக் வகையறாக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளனர். அப்படி செய்தாலே சகோ.கமாலுதீனின் ஆசியும், ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும். ஜாக் வகையறாக்கள் எழுதப்படாத இத்தீர்மானத்தை ஏற்படுத்திக்கொண்டு பி.ஜே-யை வசைபாடியே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையிலேயே செய்யதலி ஃபைஸி-யும் செயல்பட்டு மேற்கண்ட பொறுப்புகளுக்கு வந்துள்ளார். பொது மேடைகளில் இவர் அவதூறு கூறினால் குமரி டி.என்.டி.ஜே அவரை நார் நாராக கிழித்து விடுமென்பதால் ஜாக்கின் சொத்து என்று ஜாக்கினரால் வாதாடப்படும் பள்ளியின் ஜூம்மா மேடையை பயன்படுத்த ஆரம்பித்தார். தேர்தலில் ஓட்டு கேட்டு ஜாக் பிரச்சாரகர்கள் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, இவர் அதை மறைத்து, ஜூம்மா மேடையில் ததஜவை விமர்சித்து தவ்ஹீத்வாதிகள் தேர்தலில் ஈடுபடலாமா? என்று உரையாற்றினார். மிம்பரிலிருந்து இறங்கியதும் தேர்தலில் சீட் கேட்டு ஜாக் ஆர்ப்பாட்டம் செய்த போட்டோவையும் நாளிதழையும் குமரி டி.என்.டி.ஜே அவரிடம் காட்டி அவரின் சட்டையை பிடித்தபோது 'நோ கமெண்ட்ஸ்' என்று சொன்னவர்தான் இந்த செய்யதலி ஃபைஸி.

ஜாக்கின் பொய்பிரச்சாரத்தையும் அவதூறுகளையும் தோலுரித்துக் காட்ட எஸ்.கே-ன் அலுவலகத்திற்கு முன்பாகவே பொதுமேடையிலே குமரி டி.என்.டி.ஜே வரிக்கு வரி பதில் கொடுக்கும் என்ற போஸ்டரை பார்த்து மிரண்ட செய்யதலி ஃபைஸி அன்றைய ஜூம்மாவிலே, (19-01-2007) த.த.ஜ வினரோடு ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது, இவர்களை தள்ளி வைக்கவேண்டும், இவர்களின் இஸ்லாம் சந்தேகத்திற்குரியது என்று கூறியதை பூனை வாயில் அகப்பட்ட எலியை போல அன்றைய ஜூம்மாவில் அகப்பட்டவர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

யார் அதிகமாக பி.ஜே மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்களுக்குத்தான் பதவி என்ற அடிப்படையில் மூவருக்கு மாநில தலைமை பதவி வழங்கப்பட்டது. இதுவரை ஜாக்கில் எந்த பொறுப்பிலும் இல்லாத இவரும் அதில் ஒருவர். (ஏர்வாடி சிராஜ், மசூது ஆகியோர் மற்ற இருவர்கள்) ஜாக்கிற்காக ஆரம்பத்தில் உழைத்த எத்தனையோ பேர் இருக்கும்போது சகோ.கமாலுதீன் அவர்களுக்கு பிறகு ஜாக்கின் சொத்துக்களுக்கு ஏகபோக உரிமை கொண்டாட மாநில தலைவராகும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் இந்த செய்யதலி ஃபைஸி என்று குமரி மாவட்ட முஸ்லிம்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஜனவரியில் த.த.ஜ நடத்திய மாநாட்டிற்கு எப்படி போகலாம் என்று வீடு தேடி வந்து செய்யதலி ஃபைஸி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த அந்த ஆலிமாவிற்கு அடுத்த ஜூம்மா-வில் செய்யதலி ஃபைஸி ஆற்றிய உரை ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில், பிப்ரவரி மாதத்தில் நடந்த அந்த ஜூம்மாவில் ஆர்ப்பாட்டம் கூடும், போராட்டம் கூடும், அது நபி வழி, பாதிக்கப் பட்டவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் போராட சொல்லி இருக்கிறார்கள் என்று வீர வசனம் பேசியதோடு மட்டுமல்லாமல் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லி கொண்டிருந்தார்.

போராட வேண்டும் என்ற அர்த்தங்களை உள்ளடக்கிய ஹதீஸ்கள் தெரியாததால்தான் முன்பு அப்படி சொல்லிவிட்டார் போலும் என்று அந்த ஆலிமா உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டு, பரவாயில்லை இப்பொழுதாவது அறிந்து தனது தவறை திருத்திக்கொண்டாரே என்று பெருமூச்சு விட்டனர்.

ஆனால் அன்று, இஸ்லாத்தில் போராட்டம் கூடாது என்று சொன்னது த.த.ஜ ஜனவரியில் நடத்திய முஸ்லிம்களின் உரிமை மீட்பு பேரணிக்கு செல்பவர்களை தடுப்பதற்காக மட்டுமே!.

இன்று போராட்டம் கூடும் என்று சொல்வதோ தமுமுக பெப்ரவரியில் நடத்தவிருக்கின்ற மற்றொரு போராட்டத்திற்கான அனுமதியே என்பது பலருக்கும் தாமதமாகவே புரிந்திருக்கிறது.

'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 33)

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நயவஞ்சகர்களை விட மோசமானவர்கள் ஆவர். (ஏனெனில்) அன்று அவர்கள் இரகசியமாகச் செயல்பட்டு வந்தார்கள். இன்றோ இவர்கள் பகிரங்கமாகச் செயல்படுகிறார்கள். (புஹாரி 7113)

1 comment:

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்..,
ஜாக் தாங்களை பற்றி:
// பல்வேறு துவேச, அவதூறு பிரச்சாரங்களை வழக்கம்போலவே செய்தனர்.//

தாங்கள் ஜாக்கை பற்றி:
//அல்லாஹ்வுடைய பள்ளியை தங்களுடைய சொத்தாக கோர்ட்டில் வாதாடினர், ஜூம்மா மேடைகளை தங்களுடைய ஃபித்னா கூடாரமாக ஆக்கினர், அல்லாஹ்வின் தூதர் உணர்ச்சி பூர்வமாய் உரையாற்றிய அந்த மிம்பர் மேடையை பயன்படுத்தி பிறர் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்தனர் //

இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கண்டறியுங்கள். ஒற்றுமை இரண்டுமே தவ்ஹீத் அமைப்புதான்.