Monday, September 22, 2008

குமரி முஸ்லிமின் முதல் வெற்றி

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


குமரி முஸ்லிம் வலைப்பூவில் வரும் கட்டுரைகள் கடுமையாக இருக்கின்றன, ஒற்றுமையை குலைக்கின்றன. நம்மிடையே பிளவுகள் கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வாசகர்கள் மறுமொழி இட்டனர்.

அவர்களிடம் குமரிமுஸ்லிம், ஒற்றுமை என்றால் என்ன? ஒற்றுமை என்பது எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்? பல தெய்வ கொள்கையுடையவனும் ஒரு தெய்வ கொள்கையுடையவனும் கொள்கையால் ஒன்றுபட முடியுமா? கப்ரு வணங்கிகளும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களும் கொள்கையால் ஒன்று பட முடியுமா? என்றெல்லாம் கேள்வியை எழுப்பியது!

தங்களுடைய அமைப்பிற்கு சுன்னத் வல் ஜமாஅத் என்று பெயரை வைத்துக் கொண்டு சுன்னத்துக்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகின்றனர் சிலர். மற்றும் சிலர் குர்ஆன் ஹதீஸ்தான் தங்களுடைய அமைப்பு என்று கூறிக் கொண்டு, மனோ இச்சையை பின்பற்றி வருவதோடு அதை நியாயப்படுத்தியும் வருகின்றனர். இது போன்று செயல்படுபவர்களிடம் உள்ள தவறுகளை பிற அமைப்புகள் சுட்டிக்காட்டும் பொழுது அது குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் உட்பட்டிருந்தால் தன்னுடைய தவறை உணர்ந்து உடனடியாக தவறை திருத்திக் கொள்வதுதான் நபிவழி. மாறாக, நீ சொல்லி நான் கேட்பதா எனும் பாணியில் புதிய வியாக்கியானங்களை கூறும் பொழுதுதான் அவைகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு பிடிவாதமாக இருப்பவர்களின் செயல்பாடுகளை மக்களுக்கு எத்தி வைக்கவேண்டும் என்ற பணியை குமரி முஸ்லிம் தொடர்ந்து செய்து வருகின்றது.

அந்த வகையிலே பெருநாள் தொழுகையை பற்றிய ஒரு கட்டுரையை 'தூதருக்கு கட்டுப்படுவோம்' எனும் தலைப்பில் குமரி முஸ்லிம் இரு பாகங்களாக வெளியிட்டு இருந்தது. அதாவது பெருநாள் தொழுகையானது பள்ளிவாசல்களில் நடத்தபட்டு வருகின்றன. ஆனால் திடலில் தொழுவதுதான் நபிவழி எனவே அதை பின்பற்ற குமரி மாவட்டம் கோட்டாறில் பெருநாள் தொழுகையை திடலில் நடத்த குமரி டி.என்.டி.ஜே ஏற்பாடு செய்தது. இதை வரவேற்பதற்கு பதிலாக ஜாக் மாநில தலைவர் கமாலுதீன், தன்னுடைய பெருநாள் உரையில் இதை மறுத்ததோடு மட்டுமல்லாமல் குமரி டி.என்.டி.ஜே -ஐ மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அதோடு அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று கூறி ஏதோ நபிகள் நாயகம் தவறு செய்துவிட்டதாகவும் தான் கூறுவதுதான் சரி எனவும் கமாலுதீன் பேசினார்.

எனவே இவருடைய இன்றைய கூற்றுக்களையும் அன்றைய ஜாக்கின் கூற்றுக்களையும் ஆதாரங்களோடு நாம் வெளியிட்டு இருந்தோம். அவர்களுடைய எழுத்திலிருந்தே ஆதாரங்களை வெளியிட்டதால் ஆடிப்போன ஜாக், ஆகஸ்டு மாத அல்ஜன்னத் பத்திரிகையில் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் மைதானத்தில் திறந்த வெளியில் தொழுதுள்ளார்கள், திறந்த வெளியில் சென்று தொழுமாறு தனது தோழர்களுக்கு கட்டளையும் இட்டுள்ளார்கள். இது சரியான ஆதாரத்தின் அடிப்படையில் நிரூபணமானதாகும். காலாகாலமாக முஸ்லிம்கள் நடைமுறைபடுத்தியும் வருகின்றனர். இதை ஒரு உண்மையான சுன்னாவின் மீது நம்பிக்கையுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள்.

என்று எழுதியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இதற்காகத்தான் குமரி முஸ்லிம் பாடுபட்டு வருகின்றது. இதுநாள் வரை நிராகரித்து வந்த எஸ்.கே, இன்று குமரி முஸ்லிம் ஆதாரங்களை வெளியிட்டதும் ஒத்துக்கொண்டுள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே!

மனோ இச்சையை பின்பற்றக்கூடிய இதுபோன்ற இயக்கங்கள் அல்லாஹ்விற்கு பயந்து தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ளுமானால் வெகு சீக்கிரமே அனைத்து இயக்கங்களும் குர்ஆன் ஹதீஸ் வழியில் ஒன்றுபட முடியும்.

ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்களே அதுபோல, அல்ஜன்னத் புதிய வியாக்கியானத்தையும் கொடுத்துள்ளது. எனவே நம்மால் சில கேள்விகளையும் முன்வைக்க முடியும்.

1) பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழக்கூடாது என்று நாம் கூறியதாக ஒரு வதந்தியையும் பொய்யையும் பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்
2) பெருநாள் குத்பாவிலே என்ன பேசினோம் என்று எஸ்.கமாலுதீனுக்கு மறந்து போயிருக்கலாம். ஏனென்றால், அன்று டி.என்.டி.ஜேக்கு எதிராகவும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் பேசியது எஸ்.கே அல்ல, எஸ்.கே உருவில் வந்த ஷைத்தான். நாம் என்ன பேசுகிறோம் என்பது பெரும்பாலான நேரங்களில் அவருக்கே தெரியாது. எனவே நாங்கள் அவர் பேசியவற்றை ரிக்கார்டு செய்து வைத்திருக்கன்றோம். பெருநாள் குத்பாவிலே கோட்டாறு அஷ்ரஃப் பள்ளியிலே அத்தனை மக்கள் மத்தியில் சொன்ன கடுஞ்சொற்களை அல்லாஹ்வின் மீது அச்சமின்றி வதந்தி என சொல்லும் எஸ்.கே அவர்களே! நாங்கள் தயாராக இருக்கிறோம்! பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்! பொதுமேடையிலே நீங்கள் பேசிய பெருநாள் உரையை ஆடியோவாக மக்கள் மத்தியிலே நாங்கள் வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்!

3) அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

4) எங்கு வேண்டுமானாலும் தொழலாம் ஈமான் தான் முக்கியம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

5) இவர்களுக்கு திடலில்தான் தொழவேண்டுமென்றிருந்தால் கப்ரு வணங்கிகள் பாவாகாஸிம் பள்ளியிலே தொழுகிறார்களே அங்கு போய் அவர்களை பின்பற்றி தொழவேண்டியதுதானே என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

6) திடல் தொழுகை என்று நோட்டீஸ் அடித்தது தவறாம் திடலில் தொழுகை என்பதுதான் சரியாம்! திடல் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகை இல்லையாதலால் அதைத்தான் நாம் எதிர்த்தோம் என்று கூறியுள்ளனர்.

கொஞ்சம் கூட அல்லாஹ்வின்மீது அச்சமின்றி இருக்கும் ஜாக் வகையறாக்களே!அந்த அறிவிப்பு போஸ்டரில் 'நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜூ பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர்' என்ற ஹதிஸல்லவா அச்சிடப்பட்டிருந்தது. இது புதுத் தொழுகையா?

7)வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தின் இரண்டு பக்கங்களிலும் பெருநாள் தொழுகை பற்றிய ஹதீஸ்களல்லவா வெளியிடப்பட்டிருந்தது! அது புதுத் தொழுகையா?

உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நன்மையையும் மறுமையில் அல்லாஹ் பறித்து, அந்த குமரி டி.என்.டி.ஜே சகோதரர்களிடம் கொடுத்து விடுவானே என்ற சிறிதளவு பயமாவது இருந்தால் இத்தகைய அபாண்டத்தை கூறுவீர்களா?

8)திறந்த வெளியில் பெருநாள் தொழுவது சுன்னத்தாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இதை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படத்தான் செய்யும்.பெருநாள் தொழுகை அன்று மழை பெய்து கொண்டிருக்குமானால் தொழமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.என்று எழுதியுள்ளார்கள்.

இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு பெற்றிருக்கும் ஒருவனுக்கு கூட தெரிந்துள்ள விஷயம், மார்க்க அறிவு சற்றும் இல்லாத அபு புஷ்ரா என்ற கூமுட்டைக்கு தெரியவில்லையே என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால், இதை வெளியிட்ட கமாலுதீனோ மார்க்க அறிவு பெற்ற மாமேதையல்லவா? மதனியல்லவா? அவருக்கும் ஹதீஸை நாம்தான் சொல்லித்தர வேண்டுமா?

மழை நேரங்களில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தொழவும் அனுமதி உண்டு.மழை காலங்களில் பாங்கு சொல்லப்படும் பொழுது 'உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அறிவிக்கப்பட்டதும் உண்டு. நின்று தொழுவது கட்டாயம், ஆனால் இயலாதவன் உட்கார்ந்து தொழலாம், அதற்கும் இயலாதவன் படுத்துக் கொண்டே தொழலாம், அதற்கும் இயலாதவன் சைகை மூலமாக தொழலாம் இவையெல்லாம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலுள்ளவை. ஆடை இருப்பவன் ஆடையுடன் தொழலாம், ஆடையே இல்லாதவன் அப்படியே கூட தொழலாம், அது அவனுடைய நிலையை பொறுத்தது. ஆனால் கோட்டாறில் அஷ்ரஃப் பள்ளியிலே தொழுவது நிர்பந்தமா? மாநாடு நடத்திய ISED பள்ளியிலே தொழுகை நடத்த முடியாதா? ரோட்டில் நடத்த முடியாதா? கோட்டாறிலே திடலே இல்லையா? ஏன்? அந்த டி.என்.டி.ஜே சிறார்கள் திடலை ஏற்பாடு செய்துள்ளனர். கோட்டாறில் உங்களால் ஒரு திடலை ஏற்படுத்த முடியவில்லையா? அந்த அளவிற்கு பலவீனப்பட்டு விட்டீர்களா?

9)திறந்த வெளியில் தொழுவது சுன்னத் என்று இன்று சொல்லும் நீங்கள், அன்று அவர்கள் நடத்திய பெருநாள் தொழுகையை திடலில் போய் ஏன் தொழவில்லை? ஜாக் வெறியா? சுன்னத்தை விட ஜாக் வெறி மேலோங்கி விட்டதாலா?
இப்படி உங்களால் பதிலளிக்க முடியாத எத்தனையோ கேள்விகள் கேட்க முடியும். ஆனாலும் சுன்னத்தை ஒத்துக்கொண்ட காரணத்தினால் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிடுவோம். இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவோம். திடலை ஏற்பாடு செய்யுங்கள். ஊர் முழுவதும் ஒரே திடலிலே ஒன்றுபட்டு தொழுவோம் இன்ஷாஅல்லாஹ்!

3 comments:

Unknown said...

Assalamu Alaikum,

polli otrumai pasuvargalin, mukathiraiyai kilithuvitirukal.

THOUWHEED

Sathya Markam said...

// 9)திறந்த வெளியில் தொழுவது சுன்னத் என்று இன்று சொல்லும் நீங்கள், அன்று அவர்கள் நடத்திய பெருநாள் தொழுகையை திடலில் போய் ஏன் தொழவில்லை? ஜாக் வெறியா? சுன்னத்தை விட ஜாக் வெறி மேலோங்கி விட்டதாலா?

இப்படி உங்களால் பதிலளிக்க முடியாத எத்தனையோ கேள்விகள் கேட்க முடியும். ஆனாலும் சுன்னத்தை ஒத்துக்கொண்ட காரணத்தினால் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிடுவோம். இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவோம். திடலை ஏற்பாடு செய்யுங்கள். ஊர் முழுவதும் ஒரே திடலிலே ஒன்றுபட்டு தொழுவோம் இன்ஷாஅல்லாஹ்!//

இப்படி நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள். ஆனால் இந்த எழுத்தில் உங்கள் இயக்கத்தவர்களுக்கோ அல்லது நீங்கள் சார்ந்துள்ள ததஜ தலைமைக்கே உடன்பாடு இருக்குமா என்பதை நன்றாக விசாரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இப்படி //ஆனாலும் சுன்னத்தை ஒத்துக்கொண்ட காரணத்தினால் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிடுவோம். இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவோம். திடலை ஏற்பாடு செய்யுங்கள். ஊர் முழுவதும் ஒரே திடலிலே ஒன்றுபட்டு தொழுவோம் இன்ஷாஅல்லாஹ்// என்று எழுதியிருப்பதால் உங்களுக்கு கட்டம் கட்டி சந்தேகக்கண்கொன்டு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் ததஜவினர் ஜாக்கிரதை.

அடுத்து, நான் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் ஒன்றான அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் இதற்கு முன்பு வரை தவ்ஹீத் சகோதரர்களால் பல வருடங்களாக'ஈத் கமிட்டி' என்றப் பெயரில் ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்று வந்தது. இப்பொழுதும் அப்படித்தான் நடந்துவருகின்றது. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து நடைபெரும். ஆனால், சென்றவருடம் புதிதாக இயக்கம் கண்ட ததஜவினர் எங்களுக்கெண்ற தனி பேனரில் தான் இனி தொழுகை நடத்துவோம் என்று தனியாக பிரிந்து சென்று தொழுகை நடத்தினார்கள். காரணம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணம்,
எங்களுக்கெண்று தனித்தன்மை இருக்கின்றது எங்கள் பேனரில்தான் நடத்துவோம், நீங்களும் இனி எங்கள் பேனரில் நடத்தினால் நாங்கள் சேர்வோம் இல்லை என்றால் நாங்கள் தனியாக நடத்துவதைத் தவிர வேறு வழிஇல்லை என்றார்கள். உடனே ஈத் கமிட்டியைச்சேர்ந்த சகோதரர்கள் உங்கள் பேச்சாளரையே அழைத்து அவரையே தொழுகையையும் பயானும் செய்யச் சொல்வோம். எல்லோரும் ஒன்றாக ஈத் கமிட்டி என்றப் பெயரில் செயல்படுவோம், நமக்குள் பிரிவினை எதற்கு என்று எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் முதன் முதலாக தொழுகையை இரண்டாக பிரித்து குழப்பம் ஏற்படுத்தினார்கள். இது தான் இவர்களின் குர்ஆன் ஹதீஸ் லட்சனம். எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 100ல் 80 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள். அவற்றில் சராசரியாக பெருநாள் தொழுகைகளில் (ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட காலத்தில் வரை) 1 - 2 சதவிகிதம் தான் ஆன்களும் பென்களும் கலந்து கொள்வார்கள். மொத்தமே 100 லிருந்து 200 பேர்தான் வருவார்கள். இந்த பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதன் முக்கியத்துவத்தையும் அனைவரும் சேர்ந்து திடலில் தான் தொழவேண்டும் என்ற நோக்கத்தின் அவசியத்தையும் அனைவருக்கும் உனர்த்த வேண்டிய நிலையில் இருந்த வேலையில் இந்த இயக்க வெறிபிடித்த கயவர்கள் அதிலும் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தனியாக பிரித்துச் சென்றனர். இது தான் தவ்ஹீத் தவ்ஹீத் என்று வாய்கிழிய பேசும் ததஜவினரின் லட்சனம். நீங்களும் இந்த குழப்ப செயல்களை ஆதரிப்பவராக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். காரணம் நீங்கள் 'எல்லோரும் சேர்ந்து தொழுவோம்' என்று எழுதியுள்ளீர்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

இதை இயக்க வெறி காட்டாமல் இந்த பின்னூட்டத்தை அல்லாஹ்விற்கு பயந்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அப்துல்லாஹ், அதிரை

இப்ராஹீம் said...

அதிரையில் ததஜ திடலில் நடத்தும் பெருநாள் தொழுகை சம்பந்தமாக ஒரு தலை பட்சமான தனது செய்தியை அப்துல்லாஹ் அவர்கள் வெளியிட்டுள்ளார். அவரின் ஆதங்கத்தை நாம் குறை சொல்ல முடியாது.

அதிரையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் எல்லாரும் சேர்ந்து பெருநாள் தொழுகை தொழுதது உண்மை தான்.

ததஜ தனியாக தொழுகை நடத்த முடிவு செய்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதை நான் இங்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோன்.

ஏற்கனவே, தொழுகை நடத்திய மற்றும் அதில் கலந்து கொண்ட மக்களிடத்தில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.

அதில், தர்ஹாவிற்கு போஸ்ட் அடிப்பவர்கள், மீலாது விழாவில் உரையாற்றும் நவீன தவ்ஹீத்வாதியான பக்ரியை பின்பற்ற கூடியவர்கள், உலகம் முழுவதும் ஒரே பிறைதான் என்று கூறி சவூதியின் பிறையை பின்பற்றி பெருநாள் கொண்டாடிவிட்டு, இந்த பெருநாளிலும் வந்து கலந்து கொண்டு பயான் செய்யும் அப்பாவிகள் என்று பலரும் இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுருந்தனர். எல்லாரும் கலந்து கொள்ளும் இந்த தொழுகையில் அப்துர் ரஹ்மான் ஷிப்லி தான் அதிகமாக அழைக்கப்பட்டு வந்தார்.

ததஜவுக்கும் மேலே உள்ள பிரிவினருக்கும் பல கருத்து முரண்பாடுகள் உண்டு. தர்ஹாவிற்கு போஸ்ட் அடிப்பவனும், அது நரகத்திற்கு கொண்டு சென்று விடும் என்று சொல்பவனும் ஒன்றாக சேருவது சத்தியமில்லை. தவ்ஹீத்வாதிகள் என்று இவர் கூறிப்பிட்டுள்ள பலர், அதிராம்பட்டினத்தில் நடைபெறும் மார்க்கத்திற்கு எதிரான் எந்த அனாச்சாரங்களை எதிர்த்து எதையும் செய்ய மாட்டார்கள், வரதட்சணை திருமணத்தில் கலந்து கொண்டு நன்றாக வயிறு புடைக்க உண்பார்கள். இவர்கள்யெல்லாம் தவ்ஹீத்வாதிகள்.

எற்கனவே நடத்தப்பட்ட பெருநாள் தொழுகையில் அதிக உழைப்பு செய்ததும் ததஜ சகோதரர்கள் தான். உழைப்பை செய்துவிட்டு, இஸ்லாமிய அடிப்படை கொள்ளைக்கு எதிராக செயல்படுபவர்கள் உடன் தொழுது போலி ஒற்றுமை கோஷம் போட ததஜ தயாராக இல்லை.


ததஜ தனியாக தொழுகை நடத்துவதற்கு இயக்க வெறிதான் என்பது பச்சை பொய். அப்படி ஒரு வேளை ததஜ விளம்பரத்திற்க்காக தான் இவ்வாறு செய்தது என்றால், இது போன்றவற்றை கட்டி ததஜ அரசியல்வாதிகளிடம் அம்புலண்ஸ் வாங்கி சழுதாயத்தை விற்றுவிடாது.

ததஜ வின் தாயியை வைத்து நடத்துவோம் என்று கூறியதை, இந்த சகோதரர் திரித்து கூறியுள்ளார். உங்களின் தாயியை ஒரு வருடம் பேசவிடுங்கள், எங்களின் தாயியை ஒரு வருடம் பேச வைப்போம் என்று தான் கூறினார்கள்.

ததஜவிற்கு போலி ஒற்றுமையில் உடன்பாடு இல்லை. குர்ஆன் ஹதிஸின் அடிப்படையில் சரியாக செயல்பட்டு ஒற்றுமை எற்படுத்த வேண்டும் என்பது தான் ததஜவின் எண்ணம்.

போலி ஒற்றுமை பேசும் இந்த நவீன தவ்ஹீத்வாதிகள், அதிராம்பட்டினத்தில் நபிவழியில் ததஜ மட்டும் தான் ஜும்ஆ தொழுகை நடத்துகிறது, அதில் இவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இந்த விஷயத்தில் ஒற்றுமை கோஷம் போடமாட்டார்கள்.

நானும் அதிராம்பட்டினத்தை சார்ந்தவன். இந்த விஷயத்தில் சம்பந்தபட்டவன். எனவே எனது கருத்தை வெளியிடும்படி கேட்டு கொள்கிறோன்.

சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு தரப்பரின் கருத்தையும் கேட்டுவிட்டு தனது கருத்தை பரப்பினால் நல்லது.

சவூதியிலிருந்து அதிரை இப்ராஹீம்