Wednesday, September 3, 2008

குர்ஆன்,ஹதீஸ் போர்வைக்குள் ஒரு குள்ளநரி

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று சொல்லும் ஒரு அமைப்பின் மாநில தலைவர் ஆற்றிய உரை இது...

பெருநாள் என்பது இஸ்லாமிய காலண்டரை அடிப்படையாக வைத்துத்தான் பெருநாள். ஆங்கில காலண்டரை அடிப்படையாக வைத்து முன்கூட்டியே தீபாவளி மாதிரி அல்லது மற்ற பண்டிகைகளை மாதிரி காலண்டரில் போட்டு அதை பின்பற்றுகிற மாதிரி உள்ள அமைப்பில் இஸ்லாம் ஃபாலோ பண்ணப் படவில்லை.

இப்பொழுது ஒரு காலகட்டம்வரை, நபிகளார்(ஸல்) அவர்களுடைய காலத்தில் முஹம்மது நபி அவர்கள், இந்த பெருநாளை அனுஷ்டிக்க வேண்டிய முறை பற்றி அவர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். சொல்லும் போது என்ன சொன்னார்கள்? நீங்கள் ரமலான் பூர்த்தியாக்கிய பிறகு அடுத்த மாதத்துடைய பிறையை நீங்கள் பார்த்து விட்டீர்களென்றால் அடுத்த நாள் நீங்கள் நோன்பு கொண்டாடுங்கள், என்று சொன்னார்கள். ரமலானை, 29-ல் நீங்கள் இருக்கும் போது நீங்கள் பிறையை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. பிறையை பாருங்கள். பிறை உங்களுக்கு தென்பட்டுவிட்டால் அடுத்தநாள் நோன்பு நோறுங்கள். பிறை உங்களுக்கு தென்படாவிட்டால் அந்த மாதத்தை 30 ஆக பூர்த்தி பண்ணி அதற்கு அடுத்த நாள் பெருநாள் வையுங்கள், என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது, நபிகளாருடைய காலத்தில் இப்படித்தான் அவர்கள் சொல்ல முடியும். அன்றைய காலத்திலே விஞ்ஞான கணிப்புகளோ வானவியல் சாஸ்திரங்களோ ஆராய்ச்சிகளோ செய்து அறியக்கூடிய அளவிற்கு உண்டான காலம் அன்றைக்கு இருக்கவில்லை.


ஆனால் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. எல்லாம் நுணுக்கமாக ஆய்வு செய்து, கோளங்களுடைய நுணுக்கங்கள், சூரியன் எப்படி சுழலுகிறது, சந்திரன் எப்படி சுழலுகிறது, சூரிய கிரகணம் என்றைக்கு வரும், சந்திர கிரகணம் என்றைக்கு வரும் எல்லாம் துல்லியமாக இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பல மாதங்களுக்கு முன்னாலேயே இன்றைக்குத்தான் சூரிய கிரகணம் வரும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையிலே அரபி மாதங்களையும் இன்றைக்குத்தான் ஒன்று, இன்றைக்குத்தான் 30 அல்லது 29 என்று துல்லியமாக சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது.

இப்படிப்பட்ட காலங்களில் இஸ்லாமியர்களில் ஒருசாரார், நமக்கு துல்லியமாக கணக்கை தெரியக்கூடிய அளவிற்கு உண்டான எல்லா உபகரணங்களும் இருக்கின்றன, எல்லா கருவிகளும் இருக்கின்றன. அதனடிப்படையிலே நாம் நிர்ணயித்து பெருநாளை நாம் கொண்டாட வேண்டியதுதான் என்ற அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு மாற்றம் வராது, இந்த அறிவியல் ஆராய்ச்சி சொல்வதற்கு இதுவரை மாற்றமாக வரவில்லை, அவர்கள் சொல்லக்கூடிய எல்லாமே கரெக்டாக இதுவரை இருந்து கொண்டிருக்கிறது, அந்த அடிப்படையிலே அதை எடுத்து ஃபாலோ பண்ண வேண்டுமென்று சொல்கிறார்கள்.


ஆனால் இவ்வாறு சொல்லக்கூடியவர்களுக்கு மாற்றமாக இன்னொரு சாரார் என்ன சொல்கிறார்களென்றால், இல்லை, அந்த அறிவியல் கண்டுபிடிப்புகளால் முடியாது. நாம் பிறையை பார்த்து தான் நாம் ஒன்று என்று தீர்மானிக்க வேண்டும், என்று சொல்லுகின்ற பொழுது முதல் பிறையை பார்ப்பது ரொம்ப கஷ்டம். இரண்டாம் பிறை தான் கண்ணுக்கு தெரியும். அதனால் ஒருநாள் வித்தியாசம் வருகிறது. பிறையை பார்த்துத்தான் பெருநாள் கொண்டாட வேண்டும், அதுதான் நபி சொல்லி இருக்கிறார்கள் என்று விளங்கக்கூடியவர்கள் ஒருநாளை பிற்படுத்துகிறார்கள். இதுதான் வித்தியாசமே தவிர, இதனால் வேறு எந்த விதமான குழப்பமும் கிடையாது. இனி போகப்போக, எதிர்காலத்தில், ஒரு காலகட்டத்தில் இப்படித்தான் இருந்தார்கள், பலவிதமான விஷயங்களில் அறிவியலுக்கு மாற்றமாக சிலர் செயல்பட்டு கொண்டிருந்தார்கள். நாளாவட்டத்தில், போகப்போக இந்த அறிவியல் வளர்ச்சி முன்னேற, முன்னேற ஒரு காலகட்டத்தில் எல்லா முஸ்லிம்களும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கு, இப்படித்தான் சரி, அது சரியாக இருக்கிறது, அதையே நாம் ஃபாலோ பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்து எல்லோரும் ஒரே நாளாக வைக்கக்கூடிய காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


இது ஜாக் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி மதுரையில் ஆற்றிய உரை.


இந்த உரையை மீண்டும் ஒருமுறை படியுங்கள். நபியால் அப்படித்தான் சொல்ல முடியும். ஏனென்றால் அவர்களுடைய காலம் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலம். நம்முடைய காலமோ விஞ்ஞானத்தின் மூலமாக அனைத்தையும் சாதித்து விட்ட காலம். எனவே, நபிகளார் பின்பற்றிய கற்கால நடைமுறையை விஞ்ஞான யுகத்தில் வாழும் நம்மால் பின்பற்ற முடியாது என்கிறார் எஸ்.கே.


'மேலும், (நபியே!) நாம் உங்களை மனித குலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் தான் அனுப்பி வைத்திருக்கின்றோம். ஆயினும் ம்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.' (அல் குர்ஆன் 34:28)


ஆனால் நபியின் எச்சரிக்கையும் நற்செய்தியும் இந்த காலத்திற்கு பொருந்தாது என்கிறார் எஸ்.கே.


'இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமை படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.'அல்குர்ஆன் (5:3)


எனக்கூறி நபி(ஸல்) அவர்கள் வாழக்கூடிய காலத்திலேயே அவர்களது கடைசி ஹஜ்ஜூடைய நேரத்திலேயே இம்மார்க்கத்தை அல்லாஹ் முழுமை ஆக்கிவிட்டான். இதில் நம்மில் எவருக்கும் சந்தேகம் உண்டா? இந்த மார்க்கம் முழுமையானது. அதனை நபி(ஸல்) அவர்கள் பூரணப்படுத்திவிட்டு போய்விட்டார்கள் என்பதில் சந்தேகம் உண்டா? அப்படி சந்தேகம் கொண்ட ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா?


அரபா பெருவெளியிலே சகல சகாபாக்களையும் கூட்டி வைத்துக் கொண்டு, 'நான் எல்லாவற்றையும் சொல்லி விட்டேனா?' என கேட்டபோது, 'ஆம் அல்லாஹ்வின் தூதரே!' என ஒருமித்த குரலில் சொல்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக்கி 'இறைவா! நீயே சாடசி'' என அல்லாஹ்விடம் பரம் சாட்டினார்கள்.


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புஹாரி (1739,1741-42)


ஆனால் திருவாளர் எஸ்.கே யோ மார்க்கம் முழுமை அடையவில்லை. அவருக்கு (நபிக்கு)தெரிந்ததை அவர் சொன்னார். பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சியடையும் என்பது நபிக்கு எப்படி தெரியும். தெரிந்திருந்தால் இரண்டாம் பிறையை முதல் பிறை என கொண்டாடி இருப்பார்களா? விஞ்ஞானம் தெரியாததால் அவர்கள் இரண்டாம் பிறையை தான் முதல்பிறை என கொண்டாடி இருக்கிறார்கள். அது தவறு. விஞ்ஞானம் அறிந்த நாம் நபியை பின்பற்ற முடியாது. விஞ்ஞானத்தை தான் பின்பற்ற முடியும் என்கிறார் எஸ்.கே.


'மேலும், அவர் தம் மனோ இச்சையின்படி பேசுவதில்லை. இது (அவர் மீது) இறக்கி அருளப்பட்ட வஹியே ஆகும். (அல் குர்ஆன் 53:3-4)


நபிகளார் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இறைவனிடத்தில் இருந்து வந்த வஹி எனும்போது, கண்பார்வை இழந்த அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) என்ற நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது வேறொரு தேவையோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் முகத்தை சற்று சுளித்துக் கொள்கிறார்கள். அந்நேரத்திலே நபியை கண்டித்து, ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கி வைக்கிறான். அதில்


'ஒரு குருடர் வந்ததற்காக இவர் முகத்தை சுளித்துக் கொண்டார்' (அல் குர்ஆன் 80:12)


என்று கண்டித்த அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள்; இரண்டாம் பிறையை முதல் பிறை என சொன்னபோது, கண்டித்திருக்க வேண்டாமா?


அல்லாஹ் மறந்து விட்டானா?


அல்லாஹ் கண்டிக்க மறந்து விட்டான் என்று சொல்கிறாரா?


அல்லது விஞ்ஞான வளர்ச்சியை அல்லாஹ் சொல்ல மறந்து விட்டானா?


உமது இறைவன் எதையும் மறக்கக் கூடியவன் அல்ல! (அல்குர்ஆன் 19:64)


அல்லாஹ்வுக்கு விஞ்ஞானம் வளரும் என்பது தெரியாதா?


வானங்களையும் பூமியையும் உருவாக்கி அது எவ்வாறு செயல்படவேண்டும், எப்போது அழிக்கப்பட வேண்டும் என அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால், விஞ்ஞானம் வளரும் என்பது கூட அல்லாஹ்வுக்கு தெரியாது என்கிறாரா எஸ்.கே.


அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு மாற்றம் வராது, இந்த அறிவியல் ஆராய்ச்சி சொல்வதற்கு இதுவரை மாற்றமாக வரவில்லை, அவர்கள் சொல்லக்கூடிய எல்லாமே கரெக்டாக இதுவரை இருந்து கொண்டிருக்கிறது, அந்த அடிப்படையிலே அதை எடுத்து ஃபாலோ பண்ண வேண்டுமென்று சொல்கிறார் எஸ்.கே.


இதன் அர்த்தம் என்ன?


குர்ஆன், ஹதீஸை விட்டுவிட்டு அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?


அறிவியலுக்கு மாற்றம் வராதென்றால், குர்ஆன், ஹதீஸில் மாற்றம் ஏற்பட்டு விட்டதா?


குர்ஆன், ஹதீஸை ஃபாலோ பண்ணாமல், அறிவியலை ஃபாலோ பண்ணவேண்டுமா?


சகோ.கமாலுதீன் மதனி அவர்களே!


கடுமையாக தண்டிப்பவன் அல்லாஹ் என்பதை மறந்து விடவேண்டாம். அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீ;ண்டு வாருங்கள்.மக்களிடம் தவறை ஒத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுடைய இந்த விஷக்கருத்துக்களை யாரேனும் பின்பற்றுவார்களானால், பின்பற்றக்கூடிய ஒவ்வொருவரின் பாவச்சுமையையும் நீங்கள் சுமக்க வேண்டி வரும் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றோம்.

(நபியே நீர்) கூறுவீராக! உண்மையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே சரியான வழிகாட்டுதலாகும். (அவன் தரப்பிலிருந்து) அகிலங்களின் அதிபதிக்கே கீழ்ப்படியும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டுள்ளோம். (அல்குர்ஆன் 6:71)


2 comments:

nagoreismail said...

சிங்கப்பூரில் கியாம நாள் வரைக்கும் நோன்பு என்றைக்கு ஆரம்பமாகிறது பெருநாள் என்றைக்கு வரும் என்பது இப்போதே கணிக்கப்பட்டுள்ளது.

குள்ளநரி என்ற பட்டப்பெயர் மட்டும் குரான் ஹதீஸ் காட்டிய வழியா?

மற்றவர்களிடம் 10 குறைகளை கண்டுபிடித்தால் நம்மிடம் குறைந்தது 11
குறையாவது இருக்கும்
-மௌலவி ஹஜ்ரத் எஸ்.அப்துல் வஹ்ஹாப் சாஹிப் பாகவி
-நாகூர்

Unknown said...

Recently i heard S.K bayan on jumma he never says follow science.. He clearly said dont include science in IBATHATHU .. Ibathathu is fllowed wat our prophet taught us only ..