Monday, October 13, 2008

அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பித்அத்! -ஜாக் ஃபத்வா!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நபி(ஸல்) அவர்களின் கருத்தை பிறர் மீது திணிப்பதால் உட்பூசல்கள் உருவாகின்றன. விரலை ஆட்டாவிட்டால் தொழுகை கூடாதா? விரலை நீட்டுவதுதான் சீராக உள்ளது என்பதே என் கருத்து என்று ஜாக்கின் மாநில தலைமையகத்திலிருந்து ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி ஃபத்வா கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை ஜாக் மர்கஸின் இமாமாகவும் ஜாக்கின் மாநில பேச்சாளருமான ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி, வெளியிட்டுள்ள ஃபத்வா :

கேள்வி : தொழுகையில் அத்தஹியாத்தில் விரலை அசைக்க வேண்டுமா? சிலர் விரலை அசைக்காமல் நீட்டி வைக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன?

பதில் : ஸஹீஹ் முஸ்லிம் பாகம் - 1 ல் நபித் தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எண் - 1016 விரல் நீட்ட பலவீனமான ஆதாரமாக உள்ளது.

அதே நபித்தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் ஹதீஸ் எண் - 1017 விரலால் சைகை செய்ய ஆதாரமாகவும் உள்ளது.

இரண்டுமே முஸ்லிம் நூலில் உள்ள ஹதீஸ்கள் தான். தொப்பி போட்டும் தொழலாம், போடாமலும் தொழலாம் என்பவர்கள் விரல் ஆட்டியும் தொழலாம் : நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை.

உலகெங்கிலும் பர்ளு, சுன்னத் என்பது கூடுதல் - குறைவு இன்றி ஒரே சீராக இருக்கும். பித்அத் மட்டுமே ஊருக்கு ஊர் வித்தியாசப்படும்.

தொழுகை என்பது எல்லோரும் ஒரே சீராகச் செய்ய வேண்டிய வணக்கம். அனைவரும் ஒன்றாக நெஞ்சிலே கை கட்டுகிறார்கள். ஒன்றாகவே கையை உயர்த்துகிறார்கள். ஒன்றாகவே குனிகிறார்கள். நிமிர்கிறார்கள். ஸஜ்தா செய்கிறார்கள். ஆயினும் விரல் அசைப்பதில் மட்டும் வித்தியாசப்படுகிறார்கள். ஆட்டுவதா? நீட்டுவதா? இதில் ஏதேனும் ஒன்றுதான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்க முடியும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரல் ஆட்டி இருந்தால் எப்படி ஆட்டி இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஒருவர் வேகமாக விரல் ஆட்டுகிறார். ஒருவர் மெதுவாக ஆட்டுகிறார். ஒருவர் பக்கவாட்டி ஆட்டுகிறார். ஒருவர் வட்டமாக ஆட்டுகிறார். ஒருவர் நீட்டி மடக்கி, நீட்டி மடக்கியும் விரல் ஆட்டுகிறார். தன் அருகில் பள்ளி முத்தவல்லி வந்து அமர்ந்து விட்டால் விரல் அசைவு அடக்கி வாசிக்கிறது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரல் அசைத்திருந்தால் ஒரு முறை தான் கையாண்டு இருப்பார்கள். அது எந்த முறை? அது தெரியும் வரை நீட்டுவதே தொழுகையில் சீராக உள்ளது என்பதே என் கருத்து. விரல் ஆட்டாமல் இருந்தால் தொழுகை கூடாதா? இதனை பெரிய பிரச்சனை ஆக்கிக் கொள்ளாதீர்கள். நாட்டில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளது.

சின்னஞ்சிறு விசயங்களுக்கு எல்லாம் சர்ச்சை செய்து வந்ததால் கொடிகட்டி பறந்த முஸ்லிம்கள் ஐரோப்பாவிலும் அதன் தலைநகர் ஸ்பெயினிலும் சிதறி சின்னாபின்னப் பட்டு அழிந்தனர் என வரலாறு சுட்டிக் காட்டுகிறது. கருத்து வேறுபாடுகள் உலக இறுதி நாள் வரை இருந்தே தீரும். ஒருவரின் கருத்தை பிறரின் மீது திணிப்பதால் தான் உட்பூசல்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தவ்ஹீதிலிருந்து தடம் புரண்டு சென்றுவிட்ட ஜாக், திடல் தொழுகையில் தவறை உணர்ந்து திருந்திக் கொண்டது போல விரல் அசைப்பதிலும் தன்னை திருத்திக் கொண்டு நபிவழி நடக்க இறைவனை இறைஞ்சுவோம்.

4 comments:

Unknown said...

Assalamu Alaikum,

May ALLAH give the right path to them.

THOUWHEED

BKM said...

Assalamu Alaikkum,
pls give the source, where you got this fatwa? without source dont update anything.

Unknown said...

இவர்களின் வஞ்சகங்களை மக்கள் நன்றாகத்தான் புரிந்து வருகின்றார்கள். அல்லாஹ் திருத்தினாலேயொழிய இவர்கள் திருந்தப்போவதில்லை!

Unknown said...

பொய்களை மட்டுமே தனது மூலதனமாக கொணடு செயல்படும் தத-ஜமாத்தின் கள்ள ஊதுகுழலான குமரி (தருதலை) முஸ்லிம் என்ற ஓசி பிளாக்கிற்க்கு தகுந்த பதிலடியை எதிர்பார்த்திருங்கள்

அன்புடன்
பொதிகைப்பிரியன்