Tuesday, April 28, 2009

அரசியலும் இஸ்லாமிய இயக்கங்களும்

ஏகனின் திருப்பெயரால்...

ஜாக் : தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அடிக்கடி ஒற்றுமை பிரசுரம் வெளியிடுவார்கள். இவர்களைவிட்டு பிரிந்த அனைவரும் பாவிகள் என்று ஃபத்வா கொடுத்தார்கள். ஜாக் அமைப்பை சாராதவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று நோட்டீஸ் அடித்தார்கள். (தேவைப்படுவோருக்கு ஆதாரம் தரப்படும்.) நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இந்த காலத்திற்கு பொருந்தாது என்று பொதுமேடையில் பகிரங்கமாகவே சொன்னார்கள், சொல்கிறார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதாகவும் சொல்வார்கள். ததஜவினர் சந்தணத்தை பூசிக்கொண்டால், அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சாக்கடையை தங்கள் மேல் பூசிக்கொள்வார்கள்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸை ஆதரித்து 15-04-200 6 15-04-2006 அன்று ஜாக்கின் மாநில செயலாளர் மற்றும் பிரச்சார பீரங்கியான கோவை அய்யூப் கடையநல்லுரில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.


ஏப்ரல் மாதத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ததஜ அதிமுகவை ஆதரித்ததால் மே மாதம் அந்தர்பலடி அடிக்கிறார் கமாலுதீன்.

'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 20பக்கம் 20 என்று எழுதுகிறார்கள்.

பீ.ஜே யை திட்டுகிறோம் என நினைத்துக் கொண்டு சாக்கடை குளியல் நடத்தினார்கள்.

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48

நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50

ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி

சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51


இவ்வாறு எழுதியவர்கள் பித்னாவில் ஆஸ்கார் விருதுபெற்ற பஸிலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று கோரி நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பார்க்க படம்


அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் ஜாக்கின் துணை செயலாளரான ஏர்வாடி சிராஜ் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று இன்றும் உள்ளாட்சி பதவியில் இருக்கிறார்.

இவ்வாறு நயவஞ்சக வேடமிடும் இந்த போலிதவ்ஹீத்வாதிகளை நாம் சட்டைசெய்ய வேண்டியதில்லை.

மனித நீதி பாசறை :

ஆர்ப்பாட்டம் கூடாது, போராட்டம் கூடாது, கொடி கூடாது, ஜனநாயகம் கூடாது, அபுஜஹல் தாக்க வந்த போது நபி(ஸல்)அவர்கள் கொடிபிடித்துக் கொண்டா இருந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்களை நக்கலடித்தவர்கள் இன்று கொடி, ஆர்ப்பாட்டம் என்று தங்களை மாற்றி 'அதிகாரம் மக்களுக்கே' எனும் கோஷத்துடன் வாக்களிக்கவும் இரவல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யவும் தயாராகிவிட்டார்கள். விடியல், மனித நீதி பாசறை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என பல பெயர்களில் இவர்கள் உலா வந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கப்படவில்லை. எனவே இதையும் விட்டுவிடுவோம்.

ஜமாஅத்தே இஸ்லாமி : எம்.என்.பி யின் கொள்கையில் முக்கால் பாகத்தைக் கொண்டிருக்கும் இவர்களும் பிற மாநிலங்களில் கொடிபிடித்து அரசியல் அதிகாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஒயிட் காலர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு மட்டும் என தேர்ந்தெடுத்து அழைப்புபணி செய்வதால் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் சமுதாயத்திற்கு சாதக பாதகம் எதுவுமில்லை.

முஸ்லிம் லீக் :

அரசியலில் தனித்தன்மை இல்லாததால் இருப்பவனையும் இறந்தவனையும் வணங்கிக்கொண்டு மிகப்பெரிய இணைவைப்பை செய்து கொண்டிருக்கின்றனர். பதவிக்காக செயல்படும் இந்த பெயர்தாங்கி முஸ்லிம்களால் சமுதாயத்துக்கு எந்த நன்னையும் இல்லை.
பார்க்க : படம்

ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் இரு இயக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களும் சமுதாயத்திற்கு செய்த, செய்கின்ற நன்மைகள் என்ன? சமுதாயத்தின் பெயரைக்கூறி சமுதாய மக்களை எவ்வாறு வஞ்சித்தன, துரோகம் செய்தன என்பதை நாம் அடுத்ததாக காண்போம்.

8 comments:

ABU NOORA said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தயவு செய்து இந்த படத்தை நீக்கி விடுங்கள்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=211

Kumari Muslim said...
This comment has been removed by the author.
Kumari Muslim said...

சகோதரர் தீன் அவர்கள் அனுப்பிய மெயில்


அஸ்ஸலாமு அலைக்கும்.

பெரியவர் காதர் மைதீன் சாமிக்கு சிரம் பணிவதாக நீங்கள் பல மாதங்களாக பதிவ செய்து வைத்துள்ளீர்கள். ஒரு வயோதிகர் கை ஊன்றி எழுந்ததை விவரித்து மறுப்பெழுதியபோதும் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்துஅப்படியே வைத்துள்ளீர்கள்.

இப்போது உங்களிடமிருந்து நாஷித் என்பவர் அதை சுரண்டி எடுத்துள்ளார்.

வலைப்பூவில் இருப்பது நாளை மறுமையில் உங்கள் ஏடுகளில் நிரந்தரமாக இருந்துவிடக்கூடாது என்பதை பயந்துகொள்ளுங்கள்.

யாருக்காக செய்கின்றீர்களோ அவர்கள் நாளை உங்களிடம் கை விரித்துவிடுவார்கள்
-- தீன்

Kumari Muslim said...

சகோதரர் தீன் அவர்களுக்கு..
அலைக்கும் வஸ்ஸலாம்

//பெரியவர் காதர் மைதீன் சாமிக்கு சிரம் பணிவதாக நீங்கள் பல மாதங்களாக பதிவ செய்து வைத்துள்ளீர்கள். ஒரு வயோதிகர் கை ஊன்றி எழுந்ததை விவரித்து மறுப்பெழுதியபோதும் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்துஅப்படியே வைத்துள்ளீர்கள்//

மறுப்பு எழுதியது யார்? நீங்கள் எப்போது மறுப்பெழுதினீர்கள்? அதுபற்றிய எந்த விபரமும் நமது கவனத்திற்கு வரவில்லை. இதை எழுதிய நீங்கள் தற்போதும் அந்த மறுப்பை வெளியிடவில்லை. ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் ஆதாரங்களை தந்தால் உடனடியாக அது நீக்கப்பட்டு தவறுக்கு மன்னிப்பு கேட்கப்படும் என்பதை தங்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்

//வலைப்பூவில் இருப்பது நாளை மறுமையில் உங்கள் ஏடுகளில் நிரந்தரமாக இருந்துவிடக்கூடாது என்பதை பயந்துகொள்ளுங்கள்.//

எங்கள் ஏடுகளில் நிரந்தரமாக நன்மைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அதற்காக நீங்களும் துஆ செய்யுங்கள்

//யாருக்காக செய்கின்றீர்களோ அவர்கள் நாளை உங்களிடம் கை விரித்துவிடுவார்கள்.//

அதைவிட பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனையால் அல்லாஹ்வின் வேதனை இறங்குவதை மிகவும் அஞ்சுகின்றோம். எனவே அதிலிருந்து நாங்கள் விடுபட தயவுசெய்து அந்த மறுப்பை தந்துதவுங்கள்.

-- குமரி முஸ்லிம்

Kumari Muslim said...

சகோதரர் தீன் எழுதியது... விரைவான உங்கள் பதிலுக்கு நன்றி..

இந்த சுட்டியில் இரு வருடங்களுக்கு முன்பாகவே வெளிவந்துள்ளது!

http://www.muslimleaguetn.com/news.asp?id=211

--
தீன்

Kumari Muslim said...

சகோதரர்கள் அபு நூறா மற்றும் தீன் அவர்களுக்கு நாம் அனுப்பிய மெயில் -நண்பரே! அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி1 சில மணி நேரங்களில் மறுப்பு வெளியிடப்படும் இறைவன் உங்களையும் எங்களையும் தீமைகளிலிருந்து பாதுகாப்பானாக! --குமரி முஸ்லிம்

Kumari Muslim said...

குறிப்பிட்ட அந்த படம் நீக்கப்பட்டு விட்டது. -- குமரி முஸ்லிம்

அப்துல் ரஹ்மான்.ஜ said...

அல்ஹம்துலில்லாஹ்!

தவறுகள் ஏற்படுவது மனித இயல்பு. சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றைத் திருத்திக்கொள்பவர்கள் இறை திருப்திக்குரியவர்கள். இதற்கு முன்னுதாரணமாக செயல்பட்ட குமரி முஸ்லிம் வலைப்பூவினருக்கு அல்லாஹ் இருமையிலும் நற்பாக்கியங்களை வழங்கட்டும்.

தவறைத் தைரியமாக சுட்டுக்காட்டும் அதேவேளை, தம்மிடமுள்ள தவறையும் திருத்திக் கொள்பவர்கள் தான் சரியான பாதையில் இருப்பவர்கள். சகோதரர் காதர் மைதீன் சிரம் பணிந்ததாக தினமலர் வெளியிட்ட தவறான செய்தியை ஆராயாமல் நம்பி முதலில் அவதூறை ஆரம்பித்து வைத்த ததஜவுக்கு, அதனைத் திருத்திக் கொள்ளவும் தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் குமரி முஸ்லிம் கோரிக்கை விட வேண்டும்.

இதைப் போன்று தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அருளாசி பெற்றார் என்ற அவதூறு செய்தியையும் ததஜ திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

"பாதிக்கப்பட்டவனின் துஆவுக்கு அஞ்சி, தம் தவறு சுட்டிக்காட்டப்பட்ட உடன் உடனடியாக திருத்திக் கொண்ட குமரி முஸ்லிம் சகோதரர்கள், இவ்விஷயத்தில் முன்னுதாரணமானவர்கள். இதே அணுகுமுறையை அவர்கள் என்றென்றும் தொடருட்டும். அல்லாஹ் அருள் புரிவானாக".

- அப்துல் ரஹ்மான்