Saturday, March 12, 2011

தமுமுகவும் திமுகவும்-1

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு:
குறைகளை நிவர்த்தி செய்த தமிழக முதல்வருக்கு தமுமுக நன்றி!

தமிழ்நாடு முஸலி்ம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்
செ. ஹைதர் அலி அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று 1995ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்கள், மாநாடுகள் மூலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரி வந்தது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தவாறு தமிழக அரசு 15.9.2007 அன்று பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் அதிகாரி களின் குளறுபடிகள் காரணமாக 3.5 சதவீத ஒதுக்கீடு முழுமையாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்காத நிலையை அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் அதற்கு முன்பாக தமிழக முதல்வரை நேரிலும் சந்தித்து எடுத்துரைத்ததைத் தொடர்ந்து பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் களையப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து இன்று அதற்கான அரசாணை வெளியிட்டமைக்கு தமிழக முஸ்லிம்கள் சார்பிலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

No comments: